For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டோஃபு ஏன் ஆரோக்கியமான உணவாக உள்ளது என்று தெரியுமா...?

By Super
|

டோஃபு அல்லது பீன்ஸ் இன்று கிடைக்கும் உணவுப்பொருட்களில் விவாதத்திற்குரியதாக உள்ளது. சில பேர் இதனை ஆரோக்கியமான உணவு என்பார்கள் மற்றும் சிலர் தீமை விளைவிக்கக் கூடியது என்பார்கள். டோஃபுவின் நன்மைகள் பற்றிய விவாதம் நெடுநாளாக நடந்து வருகிறது. இது சோயா பீன்ஸின் வடிவங்களில் ஒன்றான டோஃபு பல்வேறு அளவுகளில் உருவாகிறது. டோஃபுவின் இயற்கையான ருசி மற்றும் நிறம் அதனை எல்லா வகையான உணவுகளுக்கும் ஏற்ற இடுபொருளாக கொண்டுள்ளது.

டோஃபு உணவுக்குத் தேவையான ஒரு அத்தியாவசியமான பொருள் தான், கொஞ்சம் விவாதம் செய்து பாருங்கள்!! அது குறைந்த செலவையும், நிறைந்த புரதத்தையும் கொண்ட உணவுப்பொருள். காலம் மற்றும் பணத்திற்கு எதிரான போட்டியில், மனித இனத்திற்கு அவர்கள் சாப்பிடும் பொருளில் ஆரோக்கியமானவை எவை என்று எண்ணி விரும்பிச் சாப்பிடும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எங்கெங்கிலும் துரித உணவு கலாச்சாரத்தின் பிரதிபலிப்புகள். இப்படியாக நடந்து கொண்டிருக்கும் போது, டோஃபு போன்ற உணவுப்பொருட்களின் ஆரோக்கியமான விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். டோஃபுவின் ஆரோக்கியம் தொடர்பான பலன்கள் எண்ணற்றதாகவும் மற்றும் பல்வேறு சத்துக்கள் உள்ள சோயாபீன் பலவகை உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தத் தக்கதாகவும் இருக்கின்றன.

Why Tofu Is A Healthier Option?

டோஃபு என்பது செயலாக்கம் செய்யப்பட்ட உணவா? அது தீங்கு விளைவிக்குமா அல்லது நன்மை பயக்குமா, என்று பல தலைப்புகளில் கேள்விகள் எழுந்து கொண்டு தான் உள்ளன. சிலருக்கு சோயா அலர்ஜியை ஏற்படுத்தும், அவர்கள் டோஃபுவை ஒதுக்கி வைப்பது நலம். வேறு சிலர் அதன் ருசி மற்றும் நன்மைகளை வாரம் இருமுறை சுவைத்துக் கொண்டிருப்பார்கள். டோஃபுவின் நன்மைகள் பற்றி இங்கே சில கருத்துக்கள் உங்களுக்காக தரப்பட்டுள்ளன.

டோஃபு கொடுப்பது என்ன?

டோஃபு புரதங்கள் நிரம்பிய உணவுப்பொருள். அரை கோப்பை டோஃபுவில் 10 கிராம் புரதம் உள்ளது என்று உங்களால் நம்ப முடிகிறதா? 10 கிராம் புரதத்திலிருந்து 88 கலோரிகள் கிடைக்கிறது என்பது அடுத்த ஆச்சரியம். இது மாமிச உணவை விட 45 கலோரிகள் மட்டுமே குறைவானது என்பதால், டோஃபுவை ஆரோக்கியமான உணவு எனலாம். டோஃபுவில் துத்தநாகம், இரும்பு, செலினியம், பொட்டாசியம் மற்றும் பல விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

அசைவ உணவுக்கு முழுமையான மாற்று சைவ உணவு

இது மாமிச உணவிற்கு மிகவும் சரியான மாற்று சைவ உணவாக உள்ளது. மாமிசங்களை உண்பவர்களை விட, காய்கறிகளை சாப்பிடுபவர்கள் குறைவான அளவே புரதங்களை சாப்பிடுகிறார்கள் என்று தவறான கருத்து ஒன்றும் உண்டு. எனினும், தொடர்ச்சியாக மற்றும் போதுமான அளவு டோஃபுவை சாப்பிட்டால் புரத்ததின் அளவை ஈடு செய்ய முடியும் என்று ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. அளவற்ற சத்துக்களையும் மற்றும் மாமிசத்திற்கு மாற்றான சிறந்த சைவ உணவாகவும் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு டோஃபு சத்தான உணவாகவே உள்ளது.

டோஃபு உங்களுக்கு தரும் முதன்மையான ஆரோக்கிய பலன்கள்

டோஃபுவில் பல்வேறு சத்துக்கள் இருந்தாலும், அது உடலுக்கு நன்மை தரும் சில விஷயங்களையும் கொண்டுள்ளது. மோசமான கொழுப்பினை குறைப்பது டோஃபுவின் முதன்மையான நன்மையாகும். மாமிசத்திற்கு பதிலாக நீங்கள் டோஃபுவை சேர்த்துக் கொண்டால், ட்ரைகிளைசெரைட்ஸ் மற்றும் மோசமான கொலஸ்ட்ராலின் அளவு வெகுவாக குறையும். டோஃபு மாதவிடாய் அறிகுறிகளிலிருந்து விடுதலை அளிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அது உங்களுடைய எலும்புகளை பலமுடன் வைத்திருந்து, மூப்படைவதை சற்றே தள்ளிப் போக வைக்கிறது. எனவே டோஃபு வழங்கும் நன்மைகளை நீங்கள் முயற்சி செய்து பார்க்கப் போகிறீர்களா? டோஃபு ஒரு நன்மை தரும் உணவு என்று ஏற்றுக் கொள்கிறீர்களா?

சேர்க்கைகள்

எல்லாவற்றையும் விட, டோஃபு சில சேர்க்கைகளை வழங்குகிறது. டோஃபுவை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு கிடைக்கு நலன்கள் பிரமிப்பூட்டுகின்றன. டோஃபுவில் உள்ள ஐஸோப்ளேவோன்ஸ்கள் மிகவும் அறியப்பட்ட ஆக்ஸிஜன் எதிர் (antioxidants) கூட்டுப்பொருள்களாகும். ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள் உங்கள் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கின்றன. அதன் விளைவாக நீங்கள் சில ஆண்டுகள் இளமையானவராக தோற்றமளிப்பீர்கள்.

டோஃபுவை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோய், இதயக் கோளாறுகள் (Cardiovascular Diseases) மற்றும் எலும்பு புரை (Osteoporosis) ஆகியவற்றை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க அளவு டோஃபு சாப்பிட்டால், பெண்களின் முதுகெலும்பு வலுப்பெறும். இது போன்ற நன்மைகளால், டோஃபு ஆரோக்கியமான உணவாகவே உள்ளது. உங்கள் உணவிற்கு அற்புதமான நிறத்தையும் மற்றும் பல்வேறு ஆரோக்கிய பலன்களையும் தரும் டோஃபுவை சாப்பிட ஏன் இன்னமும் யோசிக்கிறீர்கள்? உண்மை தான், எங்கு பார்த்தாலும் மறுத்து சொல்பவர்களும் இருக்கிறார்கள், ஆனால் சிறந்த விஷயத்தை தேர்ந்தெடுங்கள். ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமாக இருந்திடுங்கள்!

English summary

Why Tofu Is A Healthier Option?

Some can be allergic to soy, such people keep away from Tofu, and others enjoy the taste and health benefits Tofu brings with it at least twice a week. Here are a few things to claim Tofu is a healthier option.
Story first published: Saturday, November 23, 2013, 19:10 [IST]
Desktop Bottom Promotion