For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிப்பதற்கான இயற்கை வழிகள்!!!

By Super
|

டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண்கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோனாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவது இந்த ஹார்மோன் தான். பெண்களை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது உடல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் முக்கியமாக ஆண்மை குறையத் தொடங்கி விடும்.

ஆகவே இத்தகைய ஹார்மோனின் அளவை சீராக பராமரிக்க வேண்டும். மேலும் இந்த ஹார்மோன்களின் அளவை அதிகரிப்பதற்கு பல செயல்கள் உள்ளன. குறிப்பாக அதனை உணவுகள் மூலம் அதிகரிக்கலாம். ஆனால் பலருக்கு இந்த ஹார்மோன்கள் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது அந்த ஹார்மோன்களை சரியான அளவில் பராமரிக்க, கீழ்கூறியவைகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் எடையை குறைக்கவும்

உடல் எடையை குறைக்கவும்

அதிக எடையுடன் இருந்தால், பல எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மேலும் உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விடாமல் தடுக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

கனிமங்களை உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளுதல்

கனிமங்களை உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளுதல்

டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு ஜிங்க் மற்றும் மக்னீசியம் போன்ற கனிமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த கனிமங்கள் நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது ஆண்களின் உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவி புரியும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு இருக்கும் போது, இந்த கனிமங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், இந்த பிரச்சனை பெருமளவில் குறையும். குறிப்பாக இந்த சத்துக்கள் கடல் சிப்பி, நட்ஸ், பூசணிக்காய் விதைகளில் அதிகம் இருக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

தொழில் அல்லது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும். மன அழுத்தம் அதீத அளவில் இருக்கும் போது, உடலில் மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இந்த ஹார்மோன்கள்உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தடுக்கும். அதனால் தியானம் போன்ற எளிய முறைகளை கொண்டு, மன அழுத்தத்தை நீக்கிட வேண்டும்.

சர்க்கரை உண்ணுதல்

சர்க்கரை உண்ணுதல்

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால், இன்சுலின் அளவு அதிகரிக்கும். அதிலும் உபயோகிக்கும் சர்க்கரை அளவை பொறுத்து, உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவும் தானாக குறையும். அதனால் சர்க்கரை உட்கொள்ளுதலில் கட்டுப்பாடு இருப்பது அவசியமாகும். இது முக்கியமாக ஹார்மோன் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

நற்பதமான, சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் பல உடல் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். பச்சை காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் போன்றவைகளை சீரான முறையில் சாப்பிட வேண்டும். மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்ண வேண்டும்.

ஓய்வு

ஓய்வு

தேவையான அளவு ஓய்வும், தூக்கமும் உடலுக்கு மிகவும் அவசியம். இது உடலுக்கு தேவையான வளர்ச்சி ஹார்மோன் உற்பத்திக்கு பெரிதும் துணையாக இருக்கும். எனவே தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூக்கம் அவசியம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் தான் 70% அளவிலான டெஸ்டோஸ்டிரோன் உடலில் உற்பத்தியாகிறது.

கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

தொடர்ச்சியாக 45-75 நிமிடங்களுக்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அது உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் வளர்ச்சியை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சரியான முறையில் திட்டமிட்டு, அளவான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

மதுபானம் பருகுவதில் கவனம் தேவை

மதுபானம் பருகுவதில் கவனம் தேவை

கட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் பருகுவதால், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கும். அதிலும் தொடர்ச்சியாக மதுபானம் பருகினால், உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு 50 சதவீதம் வரை குறையத் தொடங்கும்.

எனவே இயற்கையான வழிமுறைகளால் தேவையான அளவு டெஸ்டோஸ்டிரோனை உடலில் பராமரித்தால், தேவையில்லாமல் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைக்கு ஓடத் தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Boost Your Testosterone Levels

Reduced levels of testosterone in your body can disrupt its physical development. In order to ensure that the level of this growth hormone is under control you must keep the following facets in mind.
Desktop Bottom Promotion