For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அதைக் குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

By Super
|

நம் அன்றாட வாழ்க்கை சூழ்நிலையில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயமாக உறக்கம் விளங்குகிறது. நம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கை உறங்கிக் கழிக்கிறோம். உறக்கத்தின் காரணம் பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமும் கூட கண்டறியப்படாத ஒரு ஆச்சரியமாகவே இருந்தாலும், நாம் ஒரு சில நேர விழிப்பிற்கு பின் கண் அயர்ந்து விடுகிறோம். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் நல்ல உறக்கம் அவசியமானதாகும். இந்நேரத்தில் பல மன ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்து நம் உடல் புதுப்பிக்கப்படுகிறது. உறங்குவதன் மூலம் மூளை வளர்ச்சியடையும் என பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

எந்த வகையான சிக்கலான காரணங்களாக இருந்தாலும், நமக்கு உறக்கம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. நம்மால் வழக்கமான சரியான உறக்கத்தை எதனாலும் இழக்க இயலாது. உறக்கமின்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சிக்கல்களை விளைவிக்கும். மன அழுத்தம், வாழ்க்கை முறை, மன ரீதியான குழப்பங்கள், உணவு முறை போன்ற பல காரணங்கள் உறக்கமின்மைக்கு காரணமாக உள்ளன.

போதுமான நல்ல உறக்கத்தை வாழ்க்கையில் நெறிப்படுத்துவதும் மற்றும் உறக்கத்தில் ஏற்படும் குளறுபடிகளை உடனே சரி செய்வதும் அவசியமாகும். உறக்கமின்மையை கவனிக்காமல் விட்டு விட்டால், அது காலப்போக்கில் நம்மை பாதிக்கும் உடல் பிரச்னைகளான நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, நினைவாற்றல் பாதிப்பு, சரி-தவறு என கணிக்க இயலாமை போன்ற மோசமான விளைவுகளாக முடியும். தூக்கமின்மையை போக்கும் சில வழிகளை நாம் இப்பொழுது பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் முன் சூடான பால் குடிக்கலாம்

தூங்கும் முன் சூடான பால் குடிக்கலாம்

பல்லாண்டு காலமாகவே உறக்கத்தை வரவழைக்க கடைபிடிக்கும் வழிமுறையாக சூடான பால் உள்ளது. பாலில் கலந்துள்ள ஒரு அமினோ அமிலம் தான் இந்த உறக்கத்தை தூண்டும் பொருளாக உள்ளது. உறக்கத்தை கெடுக்கும் ஆல்ஹகாலை குடிப்பதற்கு பதிலாக, ஒரு கிளாஸ் பாலை குடியுங்கள், நன்றாக தூங்குங்கள்.

பசிக்கு தீனி! படுக்கைக்கு உறக்கம்!

பசிக்கு தீனி! படுக்கைக்கு உறக்கம்!

பசியுடன் இருக்கும் போது சரியாக தூங்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த இரகசியம். நீங்கள் நன்றாக இரவு உணவை சாப்பிட்ட பின்னரும், உங்களுக்கு பசியாக இருந்தால், சற்றே நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதில் எந்தவித தவறும் இல்லை.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

தேநீர் குடிப்பதால் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்றாலும், சில வகையான மூலிகை தேநீரை நீங்கள் குடித்தால் உங்களுக்கு நல்ல தூக்கம் வரும். சீமைச் சாமந்தி (Chamomile), பாஸ்ஸன் ப்ளவர் அல்லது எலுமிச்சை இலை தேநீர் ஆகியவை உறக்கத்தை வரவழைக்கும் பிரபலமான மூலிகைகளாகும்.

நடை பழகு!

நடை பழகு!

உங்களுடைய இரவு உணவை முடித்த பின்னர், சற்றே உடலுக்கு வேளை கொடுத்தால் நல்ல உறக்கம் நாடி வரும். உங்கள் இடத்தைச் சுற்றியோ அல்லது மொட்டை மாடியிலோ ஒருமுறை நடந்து வருதால் உங்களுக்கு தூக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

காபியை குறைக்கலாம்

காபியை குறைக்கலாம்

செய்யும் வேலையில் சுறுசுறுப்பாக இருக்கும் பொருட்டாக காபியை அதிகம் பருகுபவரா நீங்கள்? அப்படியானால், மாலை வேளைகளில் நீங்கள் காபி சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதன் மூலம் உங்களுக்கு நல்ல உறக்கம் கிடைக்கும் எனலாம்.

உறங்கச் செல்லும் நேரம்

உறங்கச் செல்லும் நேரம்

தினமும் உறங்கச் செல்லும் நேரம் ஒரே நேரமாக இருப்பது நல்லது. கிரிக்கெட் அல்லது வேலைப்பளுவின் காரணமாக சில நேரங்களில் தூங்கச் செல்லும் நேரம் தள்ளிப் போகலாம், ஆனால் இது அடிக்கடி நிகழ்ந்தால், நிம்மதியான தூக்கத்தை கனவில் கூட நினைக்க முடியாது.

புகை தூக்கத்திற்கும் பகை

புகை தூக்கத்திற்கும் பகை

உறக்கமின்மைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக புகைப்பழக்கம் உள்ளது. மிகச்சிறந்த தூண்டு திறன் உள்ள நிக்கோட்டின், உங்களை விழித்திருக்கச் செய்து தூக்கத்திற்கு டாட்டா காட்டுகிறது. புகைப்பழக்கத்தின் காரணமாக பய உணர்வு அதிகரிப்பதால், அந்த உணர்வும் உறக்கத்தை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஓய்வாக இருங்கள்

ஓய்வாக இருங்கள்

நீங்கள் உறங்கச் செல்லும் நேரத்திற்கு முன், உங்களுடைய கவலைகளை சற்றே புறந்தள்ளி வைப்பது நன்று. கவலைகளுடன் உள்ள மனம் கெட்ட கனவுகளால் உறக்கத்தை கெடுத்து, தேவையற்ற எண்ணங்களுடன் உங்களை படுக்கையில் ஆழ்த்தி விடும்.

முறையான சுவாசம்

முறையான சுவாசம்

உங்களுடைய உடல் மற்றும் நரம்புகளை சாந்தப்படுத்தும் வகையில் எப்படி சுவாசிப்பது என கற்றுக் கொள்ளுங்கள. முறையான சுவாச வழிமுறைகள், உங்களுடைய இதயத் துடிப்பின் வேகத்தையும், இரத்த அழுத்தத்தையும் மட்டுப்படுத்தவும், நல்ல உறக்கத்தை தூண்டவும் செய்யும்.

மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல்

மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல்

உங்களுடைய மருத்துவரின் தக்க ஆலோசனையின் பேரில் நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை வரவழைக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம். இந்த வகையான மாற்று வழிமுறைகள் பெரும்பாலான செயல்களில் வெற்றிகராமான செயல்படுத்தப்பட்டுள்ளன.

நெடுநாட்களாக தூக்கமின்மைக்குள்ளாகி வந்தால், அதனை பயிற்சி பெற்ற மருத்துவரிடம் காட்டி, உடல் நலக் குறைபாடுகள் வராமல் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Cure Sleep Deprivation

Sleep deprivation, when untreated over a period of time, leads to long term complications and health issues such as weakening of your immune system, memory loss, impair your judgement skills etc. Let us take look at some ways to cure sleep deprivation.
Desktop Bottom Promotion