For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

By Maha
|

கோடைகாலத்தின் போது வீசும் வெயிலின் தாக்கத்தை தாங்கவே முடியாது. அதிலும் அக்னி வெயில் வந்தால், உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் வெயிலால் உறிஞ்சப்பட்டு, பின் அடிக்கடி மயக்கம் ஏற்படும். ஏன் அக்னி வெயில் வரை காத்திருக்க வேண்டும், கோடைகாலத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே பயங்கரமான வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் ஏற்படும் .

எனவே இத்தகைய உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழி, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், தண்ணீர் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் தண்ணீர் அதிகம் பருகினாலே உடல் வறட்சியை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் தண்ணீர் மட்டும் உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளாது. அவை உடலை ஆரோக்கியமாக தான் வைத்துக் கொள்ளும். இருப்பினும், உடலில் நீர்ச்சத்துக்களை அதிகரிக்க பழங்களோடு, காய்கறிகளையும் சேர்க்க வேண்டும்.

ஆம், காய்கறிகளிலும் நீர்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய காய்கறிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை கோடைகாலத்தில் சமைத்து சாப்பிட்டால், உடல் வறட்சியோடு, அத்தியாவசிய சத்துக்களையும் பெற முடியும். சரி, இப்போது அந்த காய்கறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் 90 சதவீதம் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதனை கோடைகாலத்தில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலு இதில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் இதர சத்துக்களான லூடின், பொட்டாசியம் போன்றவையும் அதிகம் உள்ளது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் பற்றி சொன்னால் தான் தெரியும் என்பதில்லை. மேலும் கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அதிகம் விற்பதால், இதனை அவ்வப்போது அதிகம் சாப்பிடுவது, உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளும்.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

இந்த பச்சை இலைக் காய்கறிகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இதனை டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கேரட்

கேரட்

கேரட் உடல் முழுவதற்கும் நன்மை தருகிறது. அத்தகைய நன்மைகளில் உடல் வறட்சிளை நீக்கி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு அழகாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே வெயில் காலம் ஆரம்பிக்கப் போவதால், உடல் வறட்சியைப் போக்குவதற்கு அவ்வப்போது கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.

சீமை சுரைக்காய்

சீமை சுரைக்காய்

இது மற்றொரு நீச்சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறியாகும். இந்த காய்கறி உடல் வறட்சியை நீக்குவது மட்டுமின்றி, கண் பார்வையையும் கூர்மையாக்கும்.

முட்டைகோஸ்

முட்டைகோஸ்

முட்டைகோஸில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவோர், அதனை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

செலரிக்கீரை (Celery)

செலரிக்கீரை (Celery)

இந்த கீரையை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைவதோடு, நீர்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால், கோடைக்காலத்தில் அதிகம் சாப்பிட்டால், உடலை வறட்சியின்றி வைப்பதோடு, குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் 93% தண்ணீர் மற்றும் லைகோபைன் என்னும் உடலை சுத்தம் செய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதனை வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட, முகம் பொலிவோடு இருப்பதோடு, வறட்சியின்றியும் இருக்கும். குறிப்பாக இதனை பச்சையாக சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியும் உடல் வறட்சியை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதனை சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையையும் சரிசெய்யலாம்.

லெட்யூஸ்

லெட்யூஸ்

வெயில் காலத்தில் சாலட் அதிகம் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அதிலும் சாலட்களில் லெட்யூஸ் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, உடலும் வறட்சியின்றி இருக்கும். ஏனெனில் இந்த கீரையில் வைட்டமின் ஏ, கே மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது.

பூசணிக்காய்

பூசணிக்காய்

பூசணி வகைகளில் வெள்ளைப் பூசணியில் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் அதிக அளவில், இந்த காய்கறியை சேர்த்து வந்தால், உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables To Stay Hydrated In Summer | கோடைகாலத்தில் தவறாமல் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

As the days start to heat up again, we need to care for our body to fight the scorching summer heat. During summers, we often suffer from dehydration due to sweating. Excessive sweating reduces water and salt content in the body thus making us feel dehydrated. Here is a list of water-rich vegetables that you must include in your summer diet to stay hydrated.
Desktop Bottom Promotion