For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை உணவின் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள்!!!

By Ashok CR
|

காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் மக்கள் காலை உணவைத் தவிர்த்தால் உடல் எடை குறையும் என்ற தவறான கருத்து வைத்துள்ளனர்.

அகன்ஷா ஜலானி என்ற பதிவு செய்யப்பட்ட டையடிசியன் மற்றும் சுகாதார பதிவாளர், எடை அளவையும் தாண்டி காலை உணவுகள் எடுத்து கொள்வது பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிவிக்கிறார். இதன் மூலம் ஒரு நாளைக்கு தேவையான முக்கியமான மற்றும் சத்தான உணவு முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழச்சாறு எடுத்தல்

பழச்சாறு எடுத்தல்

நாம் ஆப்பிள் பழத்தை சாறு எடுத்து குடிப்பதை விட முழு பழத்தையும், ஒரு டம்ளர் தண்ணீரையும் அருந்துவது மிகவும் நல்லது. இதனால் பழத்தில் உள்ள வைட்டமின்கள் அதிக அளவில் நமது உடலில் சத்தை தருகிறது.

சிறிதளவு காலை உணவு எடுக்கவும்

சிறிதளவு காலை உணவு எடுக்கவும்

உங்களுக்கு விருப்பமான அனைத்து உணவுகளையும் சாப்பிட்டால் அதிகரித்து போன கலோரிகளில் இருந்து தப்பிக்க முடியாது. பரவலாக சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் சாப்பாட்டு அளவை சிறிது நாட்கள் குறைத்து விட்டு, மீண்டும் நன்றாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் எண்ணெய் பலகாரங்கள் உடல் எடையை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கும். அதனால் அளவான, உடலுக்கு நன்மை தர கூடிய உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

விழிப்புணர்வுடன் கூடிய காலை உணவு

விழிப்புணர்வுடன் கூடிய காலை உணவு

அதிகப்படியான தவறான உணவு முறைகள் கலோரிகளை அதிகரித்து விடுகிறது. உங்கள் முன்னால் வைக்கப்பட்ட உணவுகளை ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளவும்.

அளவான தேனீர் எடுத்து கொள்ளவும்

அளவான தேனீர் எடுத்து கொள்ளவும்

ஒரு கப் காபி அல்லது டீ உங்களது மனநிலை மற்றும் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் அதிகப்படியான காபி மற்றும் டீயை தவிர்க்கவும். ஏனெனில் இது தூக்கமின்மை மற்றும் உடலுக்கு தேவையான நன்மைகளை தவிர்த்து அனைத்து விதமான கெடுதல்களையும் ஏற்படுத்தும்.

ஆரோக்கியமற்ற காலை உணவுகள்

ஆரோக்கியமற்ற காலை உணவுகள்

சாக்லெட், கேக் மற்றும் சாண்ட்விச்சுகள் சாப்பிடுவதை தவிர்த்து, ஒரு கிண்ணம் நிறைய பருப்பு மற்றும் பயறு வகைகள் சாப்பிடவும். அதிகப் படியான கலோரி, சர்க்கரைவியாதி மற்றும் கொழுப்பு வியாதிகளை ஏற்படுத்திவிடும்.

காலை உணவுகள் தேவையில்லை என்று நினைப்பது

காலை உணவுகள் தேவையில்லை என்று நினைப்பது

முதல் நாள் சாப்பாட்டின் காரணமாகவோ, அதிகாலையில் சாப்பிட வேண்டும் என்பதாலோ சில சமயங்களில் சாப்பாட்டை தவிர்க்கின்றனர். இதனால் நம்முடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டு மந்தமான நிலைமை ஏற்படுகிறது. இதனால் பழங்கள் மற்றும் சிறிதளவு கோதுமை உணவுகள் எடுத்துக் கொள்வது நல்லது.

காலை உணவின் போது பப்ஃபே முறைகளை தவிர்க்கவும்

காலை உணவின் போது பப்ஃபே முறைகளை தவிர்க்கவும்

பப்ஃபே உணவு முறைகள் நம்மை அதிக அளவு உணவு உட்கொள்ள தூண்டும். எனவே அதை தவிர்ப்பது நல்லது. பாஸ்ட்பூட் உணவுகளை தவிர்த்து முட்டை, ஓட்ஸ், பால்,கோதுமை மற்றும் சிறிதளவு இறைச்சிகள் எடுத்துகொள்ளுவது நல்லது.

உணவு சாப்பிடுவதற்கு முன்னால் சுடு தண்ணீர்

உணவு சாப்பிடுவதற்கு முன்னால் சுடு தண்ணீர்

காலையில் சாப்பிடுவதற்கு முன்னால் மிதமான சுடுதண்ணீர் எடுத்து கொள்ளவும்.இது செரிமானத்திற்கும், இரைப்பை சம்மந்தமான நோய்கள் ஏற்படாமலும் தவிர்த்து , நமக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சத்தான காலை உணவுகளை சாப்பிடவும்

சத்தான காலை உணவுகளை சாப்பிடவும்

க்ரின் டீ, பழங்கள், முட்டை, ஓட்ஸ், கோதுமை ரொட்டி இந்த மாதிரி வகைகளை சாப்பிட முயற்சித்தால் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 9 Breakfast Mistakes To Avoid

Breakfast is the most important meal of the day, but what people do not know about this meal is that if they skip this meal, it could have an adverse effect on their weight.
Desktop Bottom Promotion