For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் உற்ற துணை ஈஸ்ட்ரோஜன் என்று சொல்வதற்கான காரணங்கள்!!!

By Super
|

எதற்குத் தான் இந்த மாதவிலக்கு, மாதவிலக்குக்கு முந்தைய அசௌகரியம், மனதளவில் பெருத்த மாறுபாடுகள் போன்றவை ஏற்படுகின்றனவோ என்று பெண்கள் வருத்தப்படுகின்ற தருணங்கள் எத்தனையோ ஏற்பட்டிருக்கும். இவ்வாறு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் "ஈஸ்ட்ரோஜன்" என்னும் ஹார்மோன் தான்.

பெண்ணாகப் பிறந்துவிட்டாலே, பருவ வயதை அடைந்தப் பிறகு மாதந்தோறும் வரும் இந்தத் தொந்தரவுகள், மெனோபாஸ் வரும் வரை தொடர்கின்றன. இந்தக் காலங்களில் "மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்!" என்ற வரிகளை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் "முன்பு செய்த பாவம் தான் பெண்களாய்ப் பிறந்திருக்கிறோம்" என்று தான் பலர் நினைத்துக் கொள்வார்கள்.

ஆயினும் பெண்மை என்பது மிக உன்னதமான பிறப்பு. உலகம் வாழ தன்னை தியாகம் செய்து, தனது உயிரிலிருந்து மற்றொரு உயிரை உருவாக்கிக் கொடுக்கும் தனித்தன்மை வாய்ந்த பிறப்பு என்பதில் மறுப்பேதும் இல்லை. ஒருசில அசௌகரியங்களுக்கு மத்தியில் பல பெருமைகள் கிடைக்கின்றன. இவை அனைத்துமே ஈஸ்ட்ரோஜனால் தான்.

பருமடைவதற்கு முன்பாகவே உடலமைப்பில் மாறுதல்களை உண்டாக்குவதிலிருந்து, பருவமடையச் செய்வது, மாதந்தோறும் இந்தத் தொந்தரவுகளைக் கொடுப்பதிலிருந்து, குழந்தை பெறும் பாக்கியத்தையும் வழங்குவது வரை என அனைத்திற்கும் காரணம், இந்த ஹார்மோன் தான்.

எவ்வளவு தான் தொந்தரவுகள் பலவற்றைக் கொடுத்தாலும், பெண்களுக்கு நன்மைகள் பலவற்றை இந்த ஹார்மோன் அளிக்கிறது. ஆகவே, ஈஸ்ட்ரோஜனை பெண்களது சிறந்த உற்ற துணை என்றும் குறிப்பிடலாம். இப்போது அதற்கான 8 காரணங்களைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

ஈஸ்ட்ரோஜன் பெண்களின் மன அழுத்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுகிறது. பஃபலோ பல்கலைக்கழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, பெண்கள் மன அழுத்தத்தின் போது மிகத்திறமையாகச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் அவர்களிடம் உள்ள ஈஸ்ட்ரோஜன் தான் என்றும் சொல்கிறது.

மேலும் அந்த ஆய்வு ஆண்களிடம் உள்ள ஹார்மோன் அளவினை ஒப்பிடும் போது, பெண்களிடம் உள்ள ஹார்மோன்களின் அளவு அதிகம். அதன் காரணமாகவே மிகவும் இக்கட்டான நேரங்களில் கூட பெண்களால் மிகத்திறமையாக சமாளித்து செயல்பட முடிகிறது என்றும் .

ஆரோக்கியமான இதயம்

ஆரோக்கியமான இதயம்

பெண்களின் இதயத்தை ஈஸ்ட்ரோஜன் பாதுகாக்கிறது. பொதுவாக ஈஸ்ட்ரோஜனானது இதய தமனி மற்றும் சிரைகளைப் பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதாவது இரத்த நாளங்களில் கொழுப்புப் படிவுகள் படியாமல் பார்த்துக் கொண்டு, அவற்றைப் பாதுகாக்கிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, பெண்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்பும் குறைகிறது.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் தொற்றுகளையும், வீக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஈஸ்ட்ரோஜனுக்கும், பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகளிலிருந்தும், வீக்கங்களிலிருந்தும் அளிக்கும் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்நத ஆய்வில் பெண்களுக்கு காயங்கள் ஏற்படும் போது இரத்தக் குழாய்களிலிருந்து வெள்ளை இரத்த அணுக்கள் வெளியேறும் வீதத்தை ஈஸ்ட்ரோஜன் குறைக்கிறது என்றும், இதன் மூலம் வீக்கம் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, உடலானது தொற்றுக் கிருமிகளை எதிர்த்து வலிமையுடன் போராட முடிகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலியல் உணர்ச்சி

பாலியல் உணர்ச்சி

பெண்களின் பாலியல் இச்சையை ஈஸ்ட்ரோஜன் தூண்டுகிறது. பெண்களின் பெண்மைக்குக் காரணமே ஈஸ்ட்ரோஜன் தான் என்று அறிவோம். மார்பகங்கள், இடுப்பில் ஏற்படும் அழகிய வளைவுகள், சருமங்களற்ற வழவழப்பான முகம் ஆகியவற்றிற்குக் காரணம் ஈஸ்ட்ரோஜன் தான். பெண்களின் பாலியல் இச்சையை தூண்டி, அதனை நிலை நிறுத்துவதும் இது தான்.

பொதுவாக மனிதர்களது பாலியல் இச்சையின் அளவை நிர்ணயிப்பது ஆன்ட்ரோஜன் என்னும் ஹார்மோன்களின் அளவைக் கொண்டு தான். ஆனால் அது ஈஸ்ட்ரோஜனின் முன்னிலையில் தான் செயல்படும். ஈஸ்ட்ரோஜன் தான் பாலூட்டிகளின் பெண்ணினத்தில் காணப்படும் லார்டோஸிஸ் என்னும் குணத்திற்குக் காரணம் ஆகும். (லார்டோஸிஸ் என்பது பாலுறவு கொள்ளும் நேரத்தில், பெண்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு, உச்சநிலையை நோக்கி செல்லும் நேரத்தில், கீழ் முதுகை மேல் நோக்கி உயர்த்தும் செயலாகும்) இந்த செயலால், மேலே படுத்துக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஆணுக்கு வசதியான நிலை கிடைப்பதோடு, கிளிட்டோரிஸ் மற்றும் பெண்ணுறுப்பு உயர்த்தப்பட்டு, உணர்ச்சி நிலை தூண்டப்படுவதும், அதன் காரணமாக கருவுறுதல் எளிதாவதும் நிகழ்கிறது.

வலிமையான எலும்புகள்

வலிமையான எலும்புகள்

எலும்புகளைப் பலப்படுத்தி ஆஸ்டியோஸ்போரோஸிஸ் வராமல் தடுக்கிறது. பெண்களது எலும்புகளின் அடர்த்திக்குக் காரணம் ஈஸ்ட்ரோஜன் தான். எப்படியெனில் அந்த ஹார்மோன், பெண்களது உடலுக்குள் கால்சியம் கரைந்து செல்லாமல் தடுத்து, எலும்புகளின் உடையும் தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பெண்களது எலும்புகள் பாதுகாக்கப்பட்டு, ஆஸ்டியோஸ்போரோஸிஸ் எனப்படும் எலும்பு மென்மையாதல் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான நரம்பு செயல்பாடுகள்

ஆரோக்கியமான நரம்பு செயல்பாடுகள்

ஈஸ்ட்ரோஜன் நரம்புகள் பாதிப்படையாமல் தடுத்து, நரம்புகளின் கடத்தும் திறனை மேம்படுத்துகிறது. பெண்களது உடலில் செரொடோனின் என்னும் திரவத்தின் அளவைப் பெருக்க ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது. செரொடோனின் என்பது நரம்புகளில் காணப்படும் கடத்தியாகும். இது மூளையிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குக் கட்டளைகளையும், உடலின் பிற பகுதிகளிலிருந்து உணர்வுகளை மூளைக்கும், கடத்த உதவுகிறது. இதன் மூலம் நரம்புகளின் செயல்பாடுகள் இயல்பாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்படுகிறது.

இளமையான தோற்றம்

இளமையான தோற்றம்

பெண்களின் இளமையான தோற்றத்தை தக்க வைக்க உதவுகிறது. ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால், மிகவும் இளமையாகக் காட்சியளிப்பார்கள் என்று சொல்கிறது. ஏனென்றால், ஈஸ்ட்ரோஜனானது, சருமத்தை தடிப்பாக்கி, கொலாஜன் அளவையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் சருமத்தில் சுருக்கங்கள் குறைகின்றன. மேலும் சருமத்திற்குள் நிலவும் ஈரத்தன்மையையும் சரியான அளவில் பேணி, பெண்கள் ஒருவிதமான பளபளப்பு மற்றும் பிரகாசமாகத் தோற்றமளிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக பெண்களுக்கு இளமைத் தோற்றம் மேலோங்கி, அதிகக் கவர்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். மேலும் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஹார்மோனானது ஆணினத்தைக் கவர்ந்து, இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இயற்கையே தேர்ந்தெடுத்து அளித்த வழி என்று குறிப்பிடுகின்றனர்.

சந்தோஷம்

சந்தோஷம்

பெண்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. மக்களின் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோனான 'எண்டோர்பின்' அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதற்குக் காரணம், இந்த பெண்மை ஈஸ்ட்ரோஜன் தான். பெண்களின் மனதில் மகிழ்ச்சியுணர்வையும், அதீத சந்தோஷத்தையும் தோற்றுவிப்பது 'எண்டோர்பின்' என்னும் வேதிப்பொருள் தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 8 reasons why oestrogen is a woman’s best friend

There are a number of times in life when we wonder why we have to suffer through PMS, menstruation or crazy mood swings. The answer is quite clear to all women out there – oestrogen! The hormone that is the key to making babies and giving you those cramps every month. Well, before you scowl at its mention, here are 8 reasons why oestrogen is a girl’s best friend.
Desktop Bottom Promotion