For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேஷனுக்காக தொப்புள், நாக்குகளில் வளையம் போடுறவங்களா? முதல்ல இத படிங்க...

By Super
|

நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியாசமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திருக்கிறது. சொல்லப்போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும் நாகரீகத்தில் ஒன்றாக விளங்குகிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம்பில் துளையிடுதல். நம் சமூகத்தில் உடம்பில் துளையிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீகமாகவும், பண்பாடாகவும் மாறி வருகிறது. பல காரணங்களுக்காக பலர் உடம்பில் துளையிடுகின்றனர். சிலர் சமய ஈடுபாடு அல்லது பண்பாட்டு காரணங்களுக்காக, உடம்பில் துளையிடுகின்றனர். இன்னும் சில பேர் ஸ்டைல், அழகு மற்றும் நாகரீகம் என்ற காரணங்களை காட்டி உடம்பில் துளையிடுகின்றனர்.

எந்த ஒரு காரணத்திற்காக இருந்தாலும், உடம்பில் துளையிடுவது என்பது பெரிய முடிவாகும். அதை லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. எவ்வித துளையிடுதலாக இருந்தாலும் சரி, அதில் சில உடல்நல இடர்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் அடங்கியுள்ளது. அதனால் துளையிடுதல் என்ற முக்கிய முடிவை எடுக்கும் முன், அதனை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு, அதில் அடங்கியுள்ள பிரச்சனைகள் பற்றியும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சரி, இப்போது உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் உடல்நல இடர்பாடுகள் என்னவென்று பார்ப்போம்...

Top 7 Health Risks of Body Piercing

தொற்றுகள்

தொற்று என்பது உடம்பில் துளையிடுவதால் ஏற்படும் பொதுவான பிரச்சனை. இதில் கவனம் செலுத்தவில்லை என்றாலோ அல்லது உரிய சிகிச்சையை சரியான காலத்தில் எடுக்கவில்லை என்றாலோ, தழும்பு ஏற்படுவதுடன், இரத்தம் நஞ்சாகிவிடும். அதிலும் சரிவர கவனம் செலுத்தாவிட்டால், அசிங்கமான தழும்பை உண்டாக்கிவிடும். குறிப்பாக தொற்றுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாவன ஒழுங்கில்லாமல் துளையிடுதல், துளையிட்டப் பின் சரியாக பராமரிக்காமல் போவது மற்றும் துளையிட்ட இடத்தில் பயன்படுத்தும் நகைகள் போன்றவை ஆகும்.

அலர்ஜிகள்

உலோகங்கள் உடலில் படும்போது சரும அலர்ஜி ஏற்படுவதற்கு, அந்த உலோகங்களே காரணியாக விளங்குகிறது. அதனால் உடம்பில் துளையிடும் சில வகை அணிகலன்களால், இவ்வகை அலர்ஜிகள் ஏற்படுவதுண்டு. மேலும் இத்தகைய அலர்ஜிகள் சுவாசப் பிரச்சனை, சொறி மற்றும் துளையிட்ட இடத்தில் வீக்கம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சில நேரம் அலர்ஜி தீவிரமடைந்தால், அது அதிர்ச்சியை ஏற்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்யும். அதனால் துளையிடுவதற்கு துருபிடிக்காத தரமான ஸ்டீல், டைட்டானியம் மற்றும் தங்கங்களை தேர்தெடுத்தால், அலர்ஜிகளில் இருந்து விடுபடலாம்.

நரம்பு சிதைவு

ஒழுங்காக துளையிடவில்லை என்றாலோ அல்லது துளையிட்ட இடத்தில் குத்தப்படும் அணிகலன் சரியாக குத்தப்படவில்லை என்றாலோ நரம்பு சிதைவு ஏற்படும். அதிலும் தவறான இடத்தில் துளையிட்டால், அங்குள்ள நரம்பையும் சேர்த்து துளையிட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாது துளையிட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களும் நிரந்தரமாக செத்துப்போகும். குறிப்பாக நாக்கில் துளையிடும் போது, நரம்புகள் பாதிப்புக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக துளையிடுபவர் வல்லுனராக இல்லாத போது தான், இத்தகைய பிரச்சனை ஏற்படும்.

அதீத இரத்தக்கசிவு

துளையிடுபவர் வல்லுனராக இல்லாமல் போனாலும் சரி, துளையிட்ட இடம் தவறாக இருந்தாலும் சரி, துளையிடும் ஊசி இரத்தக் குழாய்கள் வழியாக உள்ளே நுழையலாம். இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இரத்தக் கசிவு ஏற்படலாம். இது அதிகமான இரத்த இழப்பை ஏற்படுத்தும்.

தூய்மைகேட்டின் இடர்பாடு

துளையிடுவதில் வல்லுநர் இல்லாதவர் சுகாதாரமற்ற இடத்தில் துளையிட்டால், இரத்த சம்பந்த நோய்களான எச்.ஐ.வி. கிருமி, ஈரல் அழற்சி மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தும்.

தழும்பேற்றம்

தழும்பேற்றம் என்பது துளையிட்ட இடத்தில் ஏற்படும் தழும்பின் அதீத வளர்ச்சியாகும். இது பார்ப்பதற்கு அசிங்கமாக காட்சி அளிக்கும். இதற்கான சிகிச்சை என்பது சிக்கலான ஒன்றாகும். இதற்கு என்ன சிகிச்சை எடுத்தாலும் சரி, இந்த வடுவை அது முழுவதுமாக நீக்காது.

பற்களில் ஆபத்து

வாயில் துளையிடுவது என்பது பற்களில் ஆபத்தை விளைவிக்கலாம். அதிலும் பற்களை உடைக்கவோ, தாடை மற்றும் ஈறுகளை சிதைக்கவோ, பற்களின் எனாமலை தேயச் செய்யவோ அல்லது அங்கு அணியும் அணிகலன்கள் சுவாசப்பையில் பிரச்சனைகளை ஏற்படுத்தவோ செய்யலாம்.

English summary

Top 7 Health Risks of Body Piercing

There are series of health risks and issues associated with any type body piercing. Therefore, it is very important to understand or be aware of them before you plunge into a big decision of getting a piercing done.
Desktop Bottom Promotion