For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணியிடத்தில் செய்யத்தக்க சிறந்த 6 யோகாசன நிலைகள்!!!

By Super
|

பழம்பெரும் இந்து மத பிரிவாக யோகம் உள்ளது. இந்த கலையை கடைபிடிப்பதற்காக தியானம், சுவாசம் மற்றும் உடலை யோக நிலைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமர்ந்து, உங்களுடைய மனம் மற்றும் உடல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் நிலை 'ஆசனம்' என்று அழைக்கப்படுகிறது. யோகா உங்கள் மனம் மற்றும் உடலை கட்டுப்படுத்தி, அதன் மூலம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உங்களுக்குத் தருகிறது. இது உங்கள் வாழ்க்கை யை சமனப்படுத்துவதுடன், இயற்கையுடன் அமைதி மற்றும் இணக்கத்துடன் வாழவும் உதவுகிறது. யோகாசனம் என்பது உடலை மட்டுமே ஆரோக்கியத்துடன் வைக்க உதவும் உடல் ரீதியான பயிற்சி என்ற தவறான கண்ணோட்டமும் கூட உள்ளது.

யோகா என்பது ஒரு வாழும் கலை, அதனை திறன் மிக்கதாக இருக்கச் செய்ய தொடர்ச்சியாக அதனை பயிற்சி செய்ய வேண்டும். யோகாவில் ஆசானாக இருப்பவர்கள், தங்களுக்கும் ஆசானாகவே இருப்பார்கள், இது அவர்களை அண்டசராசரத்திற்கும் ஆசானாக மாற்றும் வல்லமை கொண்ட கலையாகும். உங்களுடைய எண்ணங்கள், வாழ்க்கை முறை, ஆசைகள் மற்றும் உங்களுடைய உடல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு யோகா உதவுகிறது. யோகாவின் மூலம் உங்களால் பசியைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் உங்கள் உடற்கூறையும் உங்களுக்கு ஏற்ற வகையில் கட்டுப்படுத்த முடியும். உங்களுடைய சுவாசத்தை கட்டுப்படுத்துவதன் மூலமாக, உங்களால் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

இன்றைய வாழ்கை முறையில் நமக்கு கிடைக்கும் குறைவான நேரத்தில் யோக நிலைகளை அதன் முழுவடிவத்துடன் நாம் கடைபிடிப்பது மிகவும் கடினம். உங்கள் தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ள முடியும் என்பதே யோகாவின் சிறப்பம்சமாகும். யோகாவின் சுவாசப் பகுதியை மட்டுமோ, தியானப் பகுதியை மட்டுமோ அல்லது யோகாசன நிலைப் பகுதியையோ என எப்படி வேண்டுமானாலும் பிரித்துப் பயிற்சி செய்து உங்களை உடல் நலமுடன் இருக்கச் செய்ய முடியும். உங்கள் கையில் இருக்கும் நேரத்தைப் பொறுத்து சில ஆசனங்களை கலவையாக சேர்த்து, பயிற்சி செய்யவும் முடியும்.

நாளின் பெரும்பாலான நேரத்திற்கு, இருக்கை மற்றும் கம்ப்யூட்டர் முன் தவமிருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு, இங்கே தரப்பட்டுள்ள ஆசனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இந்த ஆசனங்களை உங்களுடைய பணியிடங்களில் தொடர்ச்சியாக செய்து வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆழமாக மூச்சு விடுதல் (Deep breathing)

ஆழமாக மூச்சு விடுதல் (Deep breathing)

உங்கள் முதுகை நேராக நிமிர்த்திக் கொண்டு, தரையில் கால் பாதங்கள் இரண்டும் படும் படியாக இருக்கையில் உட்காருங்கள். உங்களுடைய வயிறு, நுரையீரலில்ன மேல், நடு மற்றும் கீழ் பகுதிகள் பின்னர் வயிறு என அனைத்து பகுதிகளையும் காற்று அடையும் வகையில் ஆழமாக மூச்சை இழுத்து விடவும். காற்று செல்லும் வேகத்தை சற்றே கவனிக்கவும் தவற வேண்டாம். இதை கண்களை மூடிக்கொண்டு 5 முறை திரும்பத் திரும்ப செய்யவும்.

கழுத்தை சுழற்றுதல் (Neck Roll)

கழுத்தை சுழற்றுதல் (Neck Roll)

கண்களை மூடிக் கொண்டு, உங்களுடைய தாடை நெஞ்சைத் தொடும் வகையில் கீழே குனியவும். பின்னர், உங்களுடைய கழுத்தை மெதுவாக வட்ட வடிவில் முதலில் வலது பக்கம், பின்னர் இடது பக்கம் என சுழற்றச் தொடங்கவும். உங்களுடைய இருபக்க காதுகளும், தோள்பட்டைகளை தொடும் வகையில் முழுமையான வட்ட வடிவத்தில் சுற்றுவதை உறுதிப்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் மனம் மற்றும் உடல் ஓய்வு நிலைக்கு செல்லும்.

பதஹஸ்தாஸனா (Padahastasana)

பதஹஸ்தாஸனா (Padahastasana)

உங்களுடைய பாதங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொடும் வகையில் நேராக நிற்கவும். மூச்சை வெளியே விட்டவாறே, உங்கள் இடுப்பு பகுதியிலிருந்து குனிந்து விரல்களைக் கொண்டு பாதங்களை தொடுமாறு முன்புறமாக குனியவும். இந்த செயல்பாட்டின் போது உங்களுடைய கைகள் நன்றாக நீண்டிருப்பதை உறுதி செய்யவும். இப்பொழுது மெதுவாக மேலே நிமிரத் தொடங்கி, நீங்கள் தொடங்கிய நிலைக்கு செல்லவும்.

பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)

பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)

கால்கள் இரண்டையும் உங்கள் முன் நீட்டியவாறு தரையில் அமரவும். உங்களுடைய கைகள் மற்றும் உடலை முன்புறமாக நீண்டு செல்ல வைத்து, முழங்காலை மடக்காமல் பாதங்களை தொட முயற்சி செய்யவும். இந்த ஆசனத்தின் மூலம் உங்களுடைய கைகள், தோள்பட்டைகள் மற்றும் முதுகுத் தண்டு ஆகியவற்றுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது. மேலும், இது அதிகபட்ச வயிற்றுப்பகுதியை குறைக்கவும், உங்களை நலமுடனும் மற்றும் நோய்களிலிருந்த விலகியிருக்கவும் வைக்கிறது.

போர்வீரர் நிலை (Warrior Pose)

போர்வீரர் நிலை (Warrior Pose)

உங்களுடைய பாதங்கள் இரண்டையும் 4 அங்குல இடைவெளியில் விட்டு, நேராக நிற்கவும். உங்களுடைய கைகளை காற்றில் நன்றாக நீட்டி விடவும். இப்பொழுது உங்களுடைய வலது காலை 90 டிகிரி அளவில் வலது பக்கமாக திருப்பவும் மற்றும் அதற்கேற்றவாறு இடது காலையும் அதே பக்கத்தை நோக்கி திருப்பி நீட்டவும். இந்த செயலின் போது உங்களுடைய முதுகை நேராக வைக்க வேண்டியது அவசியம். உங்களுடைய

உட்டிதா ஹஸ்த பதங்குஸ்தானா (Uttitha Hasta Padangustana)

உட்டிதா ஹஸ்த பதங்குஸ்தானா (Uttitha Hasta Padangustana)

நேராக தடாசனா நிலையில் நிற்கவும். இப்பொழுது உங்களுடைய இடது காலை மெதுவாக மேல் நோக்கியவாறு உயர்த்த முயற்சிக்கவும். இப்பொழுது உங்களுடைய இடது முழங்கையை கொண்டு, இடது காலை தொட முயற்சிக்கவும். இதனை மற்றொரு பக்கத்திலும் செய்யலாம். இந்த ஆசனத்தின் மூலம் உங்களுடைய முதுகுத்தண்டு, பின் முதுகு, இடுப்பு, கால்கள் மற்றும் கைகளுக்கு நல்ல மஸாஜ் கிடைக்கும். மேலும், இது உங்களுடைய உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 6 Yoga Postures To Practise At Work

For people who are confined to their chairs and computers for most part of day, these are some yoga postures that can be regularly practised even at your workplace.
Desktop Bottom Promotion