For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

By Maha
|

கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் இவ்வுலகில் அதிகம் உள்ளது. இத்தகைய கட்டுக்கதைகளால் மக்கள் பலர் உண்மை எது, நன்மை எது என்று தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஒருவர் உயிர் வாழ்வதற்கு முக்கியமான ஒன்று தண்ணீர். உணவு கூட இல்லாமல் உலகில் வாழ்ந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. இத்தகைய தண்ணீர் தாகத்தை மட்டும் தணிக்க பயன்படுவதில்லை.

பொதுவாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. அதிலும் ஒருநாளைக்கு அதிகப்படியான அளவில் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் வறட்சி நீங்கி, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் நன்கு பொலிவோடு இருக்கும் என்பதாலேயே.

ஆனால் அத்தகைய தண்ணீரை குடிப்பதால் உண்டாகும் உண்மையான நன்மை என்னவென்று தெரியாமலேயே, பல கட்டுக்கதைகள் மூலம் நீரின் நன்மையை பலர் நம்பி வருகின்றனர். இப்போது அந்த தண்ணீரை பற்றிய மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை-1

கட்டுக்கதை-1

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனை ஏற்படும் என்பது.

ஆனால் இதனை எந்த ஒரு ஆய்வும் நிரூபிக்கவில்லை. உண்மையில், தண்ணீரைக் குடித்தால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிக்கலாம். எனவே இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொள்ளுங்கள்.

கட்டுக்கதை-2

கட்டுக்கதை-2

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைப்பது.

மிகவும் பிரபலமான ஒன்று என்றால் இது தான். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கும், நீரைக் குடிப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மேலும் எந்த ஒரு நிரூபணமும் இல்லை. அதிலும் மருத்துவர்கள் தாகம் எடுக்கும் போது மட்டும் தான் தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர்.

கட்டுக்கதை-3

கட்டுக்கதை-3

உடலில் உள்ள டாக்ஸின்களை சிறுநீரகங்கள் நன்கு செயல்பட்டு வெளியேற்றிவிடும் என்று சொல்வது.

உண்மையில் அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகத்தின் சீரான இயக்கமானது தடைபடும்.

கட்டுக்கதை-4

கட்டுக்கதை-4

ஆரோக்கியமான சருமத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது.

அனைவரும் நினைக்கும் ஒன்றில் இதுவும் ஒன்று. பொதுவாகவே உடலில் 60% தண்ணீர் இருப்பதால், இன்னும் அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும் தான். ஆனால் அது மட்டும் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளாது.

கட்டுக்கதை-5

கட்டுக்கதை-5

உடற்பயிற்சி செய்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று நினைப்பது.

இதற்கு காரணம், உடற்பயிற்சியின் போது உடலில் வறட்சி ஏற்படும் என்பதால் தான், தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் உண்மையில் உடற்பயிற்சி செய்தால், உடலில் உள்ள அசுத்த நீர் தான் வெளியே வருமே தவிர, வறட்சி ஏற்படாது.

கட்டுக்கதை-6

கட்டுக்கதை-6

தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சொல்வது.

உண்மையில் தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படுவது தடைபடும். எனவே அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் தான் உடல் எடையானது குறைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 6 Myths About Drinking Water | குடிக்கும் தண்ணீரைப் பற்றிய 6 மூடநம்பிக்கைகள்!!!

In almost every culture in the world, water has been elevated to the status of miracle drug that can cure everything from dull skin to diabetes. Here’s a reality check on the most popular water myths.
Story first published: Saturday, March 16, 2013, 14:10 [IST]
Desktop Bottom Promotion