நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதற்கான சில எளிய வழிகள்!!!

எல்லோருக்குமே உடல்ரீதியான வேலைகளை அதிகம் செய்தால், பல்வேறு வாழ்க்கை முறையினால் வரும் நோய்கள் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நன்றாக தெரியும். மேலும் இதன் மூலம் வாழ்நாட்களின் அளவும் அதிகரிக்கும். மேலும் ஆய்வுகள் எப்பொழுதும் வலியுறுத்துவதும் மற்றும் திரும்ப திரும்பச் சொல்லுவதும் என்னவென்றால், சுறுசுறுப்பான செயல் திறனுடைய வாழ்க்கை முறையால், ஆரோக்கியமான எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளை உருவாக்க மற்றும் பராமரிப்பதற்கு முடிவும் என்பது தான். இதனால் எடை கட்டுப்பாட்டுடன் இருக்கும், சுய மதிப்பு அதிகரிக்கும், மன அழுத்தம் குறையும் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!

ஒருவேளை உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லையெனில், அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க உதவும் சில எளிய உடல்ரீதியான வேலைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளை படித்து பார்த்து முயற்சித்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், நன்கு சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

நல்ல அழகான உடலமைப்பை பெற சில சிம்பிளான ட்ரிக்ஸ்...

தினமும் விளையாடுவது

விளையாட்டானது உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு சுறுசுறுப்பைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். எனவே நண்பர்கள் மற்றும் அண்டையர்களுடன் சேர்ந்து ஒரு குழு அமைத்துக் கொண்டு, கிரிக்கெட், டென்னிஸ், பேட்மின்டன் அல்லது வேறு ஏதாவது விருப்பமான விளையாட்டுக்களை விளையாடலாம். இதனால் உடலின் சில கலோரிகள் எரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மகிழ்ச்சியாகவும் மற்றும் மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருக்கவும் உதவுகிறது.

Image Courtesy: Dilli Prasad

செக்ஸூக்கு 'ஆம்' என்று சொல்லவும்

'செக்ஸ்' உங்களுக்கு இன்பம் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல சுகாதாரம் மற்றும் நல்ல மனநிலையில் இருக்கச் செய்யும். பொதுவாக உடலுறவில் ஈடுபடுதல், உடல் ரீதியாக சிறந்த வழியில் இருக்க உதவுவதோடு, மன அழுத்ததை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் கலோரிகளைக் குறைக்கவும் மற்றும் மன அளவில் மகிழ்ச்சியை உணரச் செய்யவும் உதவுகிறது.

நடைபயிற்சி

சுறுசுறுப்பாக இருக்க மற்றொரு எளிய வழி நடைபயிற்சி ஆகும். உங்களால் எவ்வளவு நடக்க முடியுமோ, அவ்வளவு நடப்பது எளிதான ஒன்றோடு மட்டுமல்லாமல், பல்வேறு நன்மைகளோடு, சுகாதார வெகுமதிகளையும் பெற முடியும்.

சைக்கிள் ஓட்டுதல்

உங்களுடைய பழைய சைக்கிளில் நண்பர்களுடன் சவாரி போவது, உடல்ரீதியான செயல்பாடாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையோடு இணைக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் அது தசைகளை பலப்படுத்துவதோடு, புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.

மாடிப்படிகளை உபயோகித்தல்

வேகமான ஆரோகியத்தை விரும்புவராக இருந்தால், லிஃப்ட்டிற்காக காத்துக் கொண்டிருக்காமல் மாடிப்படியில் ஏறி செல்ல வேண்டும். எப்போதும் மாடிப்படிகளில் ஏறி செல்வதை ஒரு பழக்கமாக்கி கொண்டால், அது உடலை பலப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருக்கிறது.

நடனமாடுதல்

நடனம், தசைகளை வலுவடையச் செய்யவும் மற்றும் கொழுப்பை எரிக்க உதவும் ஒரு சிறந்த வழியாகவும் உள்ளது.

தினமும் உடலை ஸ்ரெட்ச் செய்தல்

தினமும் உடலை ஸ்ரெட்ச் செய்வது, உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கான மற்றொரு எளிய வழியாகும். ஆகவே பல்வேறு வகையான ஸ்ரெட்ச்களை மேற்கொண்டால், அது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.

வாளியிலிருந்து நீர் எடுத்து குளித்தல்

வாளியிலிருந்து நீர் எடுத்து குளிப்பதால் என்ன பலன் என்று நீங்கள் வியக்கக்கூடும். ஆனால் ஒரு மாறுதலுக்காக ஷவர் கீழே நின்று குளிப்பதற்கு பதிலாக இவ்வாறு குளிப்பதால், அது உடலில் உள்ள சில கலோரிகளை எரிப்பதற்கு உதவுகிறது. ஏனெனில் நிரந்தரமாக குனிதல் மற்றும் நிமிர்தல் இயக்கத்தால் மற்றும் குவளையால் நீரை தூக்கும் போது, கைகள் மற்றும் இடுப்புப் பகுதி பலப்படுத்த உதவியாக இருக்கிறது.

அன்றாட வீட்டு வேலைகளை தாங்களே செய்தல்

அன்றாட வீட்டு வேலைகளை தாங்களே செய்வதால், உடலுக்கு வேண்டிய உடல்ரீதியான பயிற்சி கிடைக்கிறது. அதனால் வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கி சுத்தம் செய்தல் வேண்டும். இந்த செயல்பாட்டால், உடல் பலப்படுத்தப்படுகிறது.

தோட்ட வேலைகளைச் செய்தல்

விளையாட்டுக்கள் விளையாட விருப்பம் இல்லாதவர்கள், தோட்ட வேலைகளைச் செய்யலாம். தோட்ட வேலைகளைச் செய்வதால், உடலுக்கு தோட்டம் தொடர்புடைய பல்வேறு வகையான இயக்கங்களான இழுத்தல், உழுதல் போன்றவற்றால் உடல் தசைகள் பலப்படுகிறது.

நாயை நடைப்பயிற்சிக்காக அழைத்துச் செல்லுதல்

ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சிக்காக நாயை கொண்டு செல்ல வேண்டும். இதனால் இரண்டு பேருக்குமே உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது.

ஆரோக்கியமான உணவை சமைக்க வேண்டும்

சமையலில் ஒரு மாறுதலுக்காக, சமையல்காரிக்கு விடுப்பு கொடுத்துவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை தாங்களே சமைத்து சாப்பிடலாம்.

நடன உடற்பயிற்சிகளை முயற்சிக்கவும்

உடற்பயிற்சி மையத்திற்கு செல்வது கடினமாக இருந்தால், உங்களுடைய உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கையிலிருந்து மாறுதல் கொண்டு வர புதிய கண்டுபிடிப்புகளை தேடவும். சில உடற்பயிற்சி டிவிடிகள் அல்லது யூ டியூப்பில் (You Tube) உள்ள சில நடன உடற்பயிற்சி வீடியோக்களை பார்த்து செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

துணிகளை துவைத்தல்

நேரம் இருந்தால், துணிகளை வாஷிங் மெஷினில் போடுவதற்கு பதிலாக, கையால் சில துணிகளை துவைக்கவும். துணி துவைப்பதால் உடலுக்கு நல்ல பயிற்சியாகிறது. இந்த செயல்பாட்டால், உடல் கலோரிகளை எரிக்க முடிகிறது.

மலையேறுதல்

மலையேறும் உடற்பயிற்சியால் உடல் இளைப்பாறுவதோடு, உடற்பயிற்சி செய்த போன்றும் இருக்கும்.

நடந்துக் கொண்டே பேசுதல்

இந்த செயல் தொலைபேசியில் பேசுவதாக இருந்தாலும் சரி அல்லது உங்களுடைய நண்பர்களுடன் வதந்திகள் பரிமாறிக் கொள்ளுதலாக இருந்தாலும் சரி, நடந்துக் கொண்டே பேசுவும். அதனால் உடலுக்கு சில உடற்பயிற்சி செய்த விளைவுகள் கிடைக்கும்.

வாழ்க்கை துணைக்கு மசாஜ் செய்யவும்

உங்களுடைய வாழ்க்கை துணையின் அன்பைப் பெற ஒரு சிறந்த வழி, அவருடைய உடலுக்கு மசாஜ் செய்வதாகும். இது உங்களுடைய வாழ்க்கை துணை இளைப்பாற ஒரு சிறந்த வழி மட்டுமல்லாமல், உங்களுடைய கை தசைகளுக்கும் சிறந்த பயிற்சியாகிறது.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிப்பதால், சிறுநீர்ப்பையை அதிகப்படியான வேலையை செய்ய வைக்க முடிகிறது. அதனால் பாதி தூக்கத்திலிருந்து எழுந்து ஒவ்வொரு கணமும் கழிவறைக்கு செல்வதால், தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள வைக்கிறது.

காரை வெகு தூரத்தில் நிறுத்தவும்

நீங்கள் சென்றடையும் இடத்திற்கு போக்குவரத்து வசதி சாத்தியமில்லை என்றால், உங்களுடைய காரை சற்றே தூரத்தில் நிறுத்திவிட்டு, நடந்து செல்லலாம்.

See next photo feature article

மளிகை கடையில் பொருட்களை வாங்கவும்

வீட்டிற்கு வேண்டிய பொருட்களை, வீட்டில் விநியோகிக்க சொல்வதற்கு பதிலாக, மார்க்கெட்டுக்கு சென்று பொருட்களை தாங்களே வாங்கவும். இதனால் ஒரு கட்டாய நடைபயிற்சி கிடைக்கிறது.

Read more about: health, wellness, disease, weight loss, ஆரோக்கியம், உடல் நலம், உடற்பயிற்சி, நோய்கள், எடை குறைவு
English summary

Top 20 simple ways to be active

Most of us are aware that physical activity helps add years to our life, by keeping various lifestyle diseases at bay. If you are finding it difficult to make time to exercise, then try these simple physical activities, which are not time-consuming and can minimise the risk of several life-threatening diseases.
Story first published: Monday, August 19, 2013, 11:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter