For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூச்சப்படாம வீட்டுக்குள்ள 'சும்மா' சுத்துங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லதாம்!

By Super
|

வாழ்க்கை ஒரு வட்டம். அது உண்மை தான். நம் பாட்டான் காலத்து பேஷன் மீண்டும் உயிர் பெறுவதில்லையா? அதே போல் தான் ஆதி கால நாகரிகமும்! ஆம், நிர்வாணமாக சுற்றித் திரிவது நாகரீகமற்றது என்று மாறியவர்கள் தான் நாம். ஆனால் இன்று நிர்வாணத்தினால் கிடைக்கும் பயன்களால், அதை சிலர் அந்தரங்கத்தில் செயல்படுத்துகின்றனர். வேலை முடிந்து வீட்டில் நுழைந்தவுடன் போட்டிருக்கும் ஆடைகளை கழற்றி ஒரு குளியலை போடத் தான், உங்களின் எண்ணம் இருக்கும் அல்லவா?

ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக இருப்பது மன அழுத்தத்தைக் குறைத்து ஒருவித நிம்மதியை அளிக்கும், முக்கியமாக கோடை காலங்களில். சொன்னால் நம்புவீங்களா? ஆம், உங்கள் பிறந்த ஆடையான நிர்வாணத்தை தேர்ந்தெடுக்கும் போது, அது உங்களை பல விதத்தில் உதவி, பல உடல்நல பயன்களை அளிக்கிறது. முழு நிர்வாணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக உள்ளதா? அப்படியானால் லேசான காட்டன் ஆடைகளை நீங்கள் அணிந்து கொள்ளலாம். நிர்வாணம் என்றால் நீங்கள் கூச்சப்படலாம், ஆனால் அப்படி இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது ஒன்றும் நாகரீகம் அற்றது அல்ல. பல பேருக்கு நிர்வாணமாக தூங்க பிடிப்பதுண்டு.

சரி, ஏன் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டாமா? அதன் பின் ஒளிந்திருக்கும் உடல்நல பயன்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சரி வாங்க அதன் பயன்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி அதிகரிக்கும்

வைட்டமின் டி அதிகரிக்கும்

வெயிலின் சீற்றத்திற்கு பயந்து, நம் சருமத்தை பாதுகாக்க, நாம் அதிகமாக சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவதுண்டு. ஆனால் நீண்ட நேரமாக வெயிலில் இருந்தால் தான் இந்த பாதிப்பு ஏற்படும். காலை கதிர்களில் 10-15 நிமிடம் வரை நிர்வாணமாக அல்லது லேசான பருத்தி ஆடைகளை அணிந்து நில்லுங்கள். இது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை அதிகரித்து, மன நிலையையும் நன்றாக வைக்கும்.

ஆரோக்கியமான சருமம்

ஆரோக்கியமான சருமம்

சருமம் மூச்சு விடுவதற்கு காற்று வேண்டும். ஆனால் உடலை இறுக்கமான ஆடைகளால் மூடினால், சருமம் வலுவிழக்கும். அதற்கு காரணம் வியர்வையால் ஏற்படும் நச்சுத்தன்மையை சருமம் உள்வாங்குவது தான். அதுவே நிர்வாணமாக அல்லது லூசான பருத்தி ஆடைகளை அணிந்து இருந்தால், சருமம் மூச்சு விடுவதற்கு தோதாக இருக்கும்.

சிவப்பு தடங்களை நீக்கலாம்

சிவப்பு தடங்களை நீக்கலாம்

ஆடைகள் இன்றி இருந்தால், இறுக்கமான ப்ரா அல்லது ஜட்டி அணிந்து அதனால் ஏற்படும் சிவப்பு தடங்களை தவிர்க்கலாம். மேலும் உள்ளாடைகள் இல்லாமல், லூசான பருத்தி ஆடைகளை அணிந்திருந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

ஆரோக்கியமான மூளை

ஆரோக்கியமான மூளை

ஒரு ஆய்வின் படி, வெறும் காலால் பெரியவர்கள் ஓடினால் மூளை தேய்வு நோயான அல்சைமரை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் காலில் நடந்தாலோ, ஓடினாலோ, அது மூளையை ஊக்கமளிக்கும் விதமாக அமையும். வெறும் பாதத்தினால் ஏற்படும் இந்த ஊக்கம் பல நரம்பணு இணைப்புகளை ஊக்கப்படுத்தும் என்று மும்பையை சேர்ந்த பொதுநல மருத்துவர் சுனேசரா கூறுகிறார். மேலும் இது மூளையின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்கும்.

மனதை அமைதிப்படுத்தும்

மனதை அமைதிப்படுத்தும்

நிர்வாணம் அல்லது உள்ளாடையின்றி வெறும் லூசான பருத்தி ஆடைகளை அணிவது என்பது மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை மற்றும் மற்ற மனநல பிரச்சனைகளுக்கான மசாஜ் தெரப்பியாக அமையும். ஏனெனில் இவ்வாறு படுக்கும் போது இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, நச்சுத்தன்மையும் நீங்கும். மேலும் மனதிற்கு ஒருவித அமைதியை கொடுத்து, விடுதலை உணர்வை அளிக்கும்.

அழற்சி இடர்பாடுகளை குறைக்கும்

அழற்சி இடர்பாடுகளை குறைக்கும்

வியர்வையால் அணிந்திருக்கும் ஆடைகள் நனைந்திருந்தால், அவை பாக்டீரியாவை உற்பத்தி செய்யும். அதனால் பல அழற்சிகள் உருவாகும். ஆனால் தீங்கு விளைவிக்கும் இந்த பாக்டீரியாக்களிடம் இருந்து, நிர்வாணம் அல்லது லூசான பருத்தி ஆடை உங்களை காக்கும்.

கருவளத்தை மேம்படுத்தும்

கருவளத்தை மேம்படுத்தும்

இறுக்கமான எலாஸ்டிக் உள்ளாடைகள் அணிந்தால் ஆணுறுப்பு மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இறுக்கமான ஜட்டி அல்லது லோ- வெய்ஸ்ட் ஜீன்ஸ் அணிந்தால், அவை ஆணுறுப்பை நேரடியாக அழுத்தும். மேலும் அவை மெதுவாக அதனை சுற்றியுள்ள நரம்பு ஏற்பிகளை அழித்துவிடும். இது விந்தணுவின் அளவைக் குறைத்துவிடும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

நிர்வாணம் அல்லது லூசான ஆடைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் டென்ஷனை குறைக்கும். இறுக்கமான உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை நிறுத்தி சரும சிராய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியமான சருமம் மற்றும் உடல் வேண்டுமானால், இரவில் நிர்வாணமாக தூங்குங்கள் அல்லது லேசான பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம்.

செக்ஸ் உணர்வை தூண்டும்

செக்ஸ் உணர்வை தூண்டும்

நிர்வாணம் செக்ஸ் உணர்வை தூண்டும். உடலானது மெத்தையில் நிர்வாணமாக கிடக்கும் போது காதல் உணர்வை அது தூண்டும். மேலும் உங்கள் கணவன் உங்களை நிர்வாணமாக படுக்கையில் பார்க்கும் போது, உங்கள் அருகில் வராமல் அவரால் இருக்க முடியுமா என்ன?

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமெனில், சில நேரம் நிர்வாணத்தை தேர்ந்தேடுங்கள். ஏனெனில் நிர்வாணம் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி அமைதியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Health Benefits Of Being Naked

The moment you enter home your fist thought is to get rid of your clothes and head to the shower.The thought of being naked with nolayers of clothing on, relieves you, especially in the summer.
Desktop Bottom Promotion