For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன நிம்மதியுடன் பண்டிகை காலத்தை கொண்டாடுவதற்கான டிப்ஸ்...

By Ashok CR
|

நம் அனைவருக்குமே பண்டிகை காலங்களின் போது மன அழுத்தம் இல்லாமல் மன நிம்மதியுடன் அதனை கொண்டாடவே விருப்பமாக இருக்கும். அப்போது தான் விடுமுறையின் போது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சந்தோஷ களிப்புடன் அதனை கொண்டாட முடியும். வருடத்தின் மற்ற நாட்களில் எல்லாம் நாம் தொடர்ச்சியாக வேளையில் மூழ்கி விடுவோம். பல நேரங்களில் நுனியில் நின்று கொண்டு அயராது உழைத்துக் கொண்டிருப்போம். அதனால் தான் பண்டிகையின் போது எந்த வித மன பாரமும் இன்றி அதனை கொண்டாட விரும்புகிறோம். உங்களின் வேலை பளுவை மற்றும் அலுவலக பிரச்சனைகளை மறந்து விடுமுறையை கோலாகலமாக கொண்டாடுங்கள்.

யாருக்கு தான் மன அழுததுடன் நிம்மதியற்று பண்டிகைகளை கொண்டாட பிடிக்கும். மன அழுத்தத்துடன் இருக்கும் போது பண்டிகையை கழிக்க நீங்க போட்டு வைத்த திட்டங்களும் உங்கள் மனதுக்கு விரும்பியவர்களுடன் நேரம் செலவழிக்க எண்ணியதும் வீணாக போய் விடும். பண்டிகை கொண்டாட்டங்களுக்குள் உங்கள் மன பாரத்தை சுமந்து கொண்டு வந்தீர்களானால் அது உங்களை மட்டுமல்லாது உங்கள் குடும்பம் மற்றும் உங்களது மனம் கவர்ந்தவர்களின் அமைதியையும் குலைத்து விடும். நீங்கள் அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் மற்றும் உங்கள் அலுவலக பைல்களை எல்லாம் பார்க்க வேண்டிய நேரம் இதுவல்ல. அதையெல்லாம் ஓரம் கட்டி விட்டு பண்டிகை கால மனநிலைக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

குதூகலம் நிறைந்த ஒரு எளிய, மன அழுத்தம் அல்லாத பண்டிகையை கொண்டாட முன் கூட்டியே அழகாக திட்டமிடுங்கள். நீங்கள் வாங்க வேண்டிய பரிசுப் பொருட்களின் பட்டியல் பெரிதாக உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் பட்ஜெட்டிற்கு தகுந்த பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பரிசளிக்க விரும்பும் நெருங்கிய நபர்களிடம் உங்கள் நிலையை சொல்வதில் ஒன்றும் தப்பில்லை. உங்களை உண்மையாகவே நேசிப்பவர்கள் பண்டிகை காலத்தின் போது எந்த ஒரு மன பாரமும் இன்றி உங்களுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவார்களே ஒழிய உங்கள் பரிசுப் பொருட்களை எதிர்ப்பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன் கூட்டியே திட்டமிடுங்கள்

முன் கூட்டியே திட்டமிடுங்கள்

உங்கள் பண்டிகை கொண்டாட்டங்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள். கடைசி நிமிடம் வரை அனைத்தையும் இழுத்து போட்டு கொண்டு செய்ய தேவையில்லை என்பதால் அவைகளை முடிக்க வேண்டுமே என்ற டென்ஷன் மற்றும் மன அழுத்தம் ஏற்படாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமே என்று கடைசி நிமிடம் அவரை ஓட தேவையில்லை.

விளையாட்டு பொருட்கள்

விளையாட்டு பொருட்கள்

உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? மேலும் பண்டிகையின் போது உங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குழந்தைகள் வருகிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு இந்த பண்டிகையில் பரிசளிக்க விளையாட்டு பொருட்களை முன் கூட்டியே வாங்கி விடுங்கள். ஒரு வேளை அதை வாங்குவதை நீங்கள் தாமதப்படுத்தினால் அதுவே உங்களுக்கு மன சுமையை ஏற்படுத்தி விடும். கடைசி நிம்ட ஷாப்பிங் என்றால் அது இருக்குமா இருக்காதோ என்ற டென்ஷன் வேறு ஏற்படும்.

செய்ய வேண்டிய வேலைகள்

செய்ய வேண்டிய வேலைகள்

ஆண்டு முழுவதும், நீங்கள் அன்றாடம் அல்லது வாரா வாரம் செய்யக் கூடிய வேலைகள் சில இருக்கக் கூடும். அவைகளை பண்டிகை தொடங்கும் முன்பாகவே முடித்து விடுவது நல்லது. அல்லது அவைகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, பண்டிகை கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு தொடருங்கள். பண்டிகை காலத்தின் போதும் அதன் பின்னே நீங்கள் ஓடினால் அது உங்களுக்கு தேவையற்ற டென்ஷனை தான் கொடுக்கும்.

அழைப்பு

அழைப்பு

பண்டிகைக்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை உங்கள் வீட்டிற்கு அழைப்பதற்கும் அவர்கள் வீட்டிற்கு நீங்கள் செல்வதற்கும் ஒன்றை செய்ய வேண்டும். அது யாரை அழைப்பது அல்லது யார் வீட்டிற்கு செல்வது என்ற பட்டியலை தயாரித்து கொள்வது. உங்கள் அலைவரிசைக்கு ஒத்து விளங்குபவர்களையே தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். பிரச்சனையை இழுத்து விடும் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரை தவிர்த்து விடுங்கள். இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.

உணவு

உணவு

பண்டிகைக்காக வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்காக சமைக்க போகிறீர்களா? அப்படியானால் தனித்துவம் வாய்ந்த சிறந்த உணவை தயார் செய்யுங்கள். சில நேரம் விருந்தாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் சில பண்டங்களை வெளியிலேயும் வாங்கிக் கொள்ளலாம். அப்படி செய்யும் போது உங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு அதிக நேரம் கிடைக்கவும் செய்யும்.

பண்டிகை விடுமுறையை வீட்டில் கழிப்பது

பண்டிகை விடுமுறையை வீட்டில் கழிப்பது

உங்களுக்கு பயணிப்பதில் ஆர்வம் இல்லையா? அப்படியானால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் அல்லது உங்கள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் உங்கள் வீட்டின் முற்றம் போன்ற இடத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். இப்படி செய்வதானால் பயணம், சுற்றுலாத் தளத்தில் மக்கள் கூட்டம் போன்றவற்றால் ஏற்படும் மன சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக பண்டிகையை வீட்டில் இருந்த படியே கொண்டாடலாம்.

ஸ்பா போன்ற இடங்களுடன் உங்கள் விடுமுறையை கழித்தல்

ஸ்பா போன்ற இடங்களுடன் உங்கள் விடுமுறையை கழித்தல்

எப்போதும் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் ஈடுபடாமல் ஆரோக்கியமான மாறுதலை எதிர்ப்பார்க்கிறீர்களா? அப்படியானால் அதிக கூட்டம் இல்லாத ஒரு அமைதியான சுற்றுலாத் தலத்தை தேர்ந்துங்கள். இதனால் சுற்றுலா சென்ற இடத்தில் உங்கள் மனது அமைதி அடையும். தேவையற்ற மக்கள் கூட்டம் போன்ற டென்ஷன் இன்றி இருக்கலாம். அதே போல் சென்ற இடத்தில் நீங்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் ஸ்பா நிலையம் இருந்தால் அங்கே சென்று ஓய்வு பற்று புத்துணர்ச்சியையும் பெற்றுக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Have A Stress-free Festive Season

It is important to prepare yourself well in advance for a simple and fun filled stress free festival season. If your gift list is long, cut it to your comfortable budget and notify your loved ones about your situation. Everyone who loves you would truly like to spend time with a stress free version of you than with fancy gifts.
Story first published: Friday, December 20, 2013, 19:08 [IST]
Desktop Bottom Promotion