For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜவ்வரிசி பற்றி உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா? அப்ப இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

By Super
|

சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஆம், நீங்கள் யூகித்தது சரியே - இந்த சின்ன முத்துக்களை நாம் 'ஜவ்வரிசி' என்று அழைப்போம்.

பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது.

ஜவ்வரிசி பாயாசம் என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். பலருக்கு ஜவ்வரிசி என்றால் எதிலிருந்து செய்யப்படுகிறது, அதனை எப்படி வாங்க வேண்டும், அதனை வைத்து என்ன சமைக்கலாம், அதில் என்னென்ன பயன்கள் உள்ளது என்பது தெரிவதில்லை. கவலை வேண்டாம், இதோ அதனை பற்றிய அனைத்து சந்தேகங்களையும் இங்கே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

The Story Of Sabudana(Sago)

ஜவ்வரிசி என்றால் என்ன?

ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட சைவ வகை உணவாகும். அதனால் தான் இதனை விரதத்தின் போது பயன்படுத்துகின்றனர். மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. இதனை சாகோ, சகுடானா, சபுடானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர்.

ஜவ்வரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த அளவில் கொழுப்பு உள்ளது. ஆகவே எடை மீது அதிக அக்கறை உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம். பல இந்தியர்கள் பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் வகை உணவாகவும் இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் திருவிழா, பண்டிகை நேரங்களிலும் இதனை பயன்படுத்துகின்றனர்.

ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும் விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாதவர்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்றவும், இதனை உணவாக அளிக்கலாம். ஏனென்றால் இது உடனடி ஆற்றலையும், செரிமான சக்தியையும் அளிக்கும். மேலும் உடலை குளிர்ச்சி அடைய வைப்பதிலும், இது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு, ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.

ஜவ்வரிசியை எப்படி சமைப்பது?

ஜவ்வரிசி என்றால் ஸ்டார்ச் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். அதனால் அதனை தண்ணீருடன் சேர்த்து சமைப்பது சுலபம் கிடையாது. அதனால் அதனை சமைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு நீரேற்ற வேண்டும். அப்படி செய்வதற்கு, அதனை தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். பின் காய வைத்து, ஒரு அகன்ற வாணலியில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதிலுள்ள ஜவ்வரிசி முழ்கும் வரை தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். பின் அந்த பாத்திரத்தை மூடி விட்டு, 4-6 மணிநேரம் வரை ஊற விடுங்கள். இப்போது மூடியை திறந்தால் முத்து போன்ற நீர் ஏறிய ஜவ்வரிசியை காணலாம்.

எப்படி ஜவ்வரிசி வாங்க வேண்டும்?

ஜவ்வரிசி வாங்கும் போது ஒரே அளவில் வெண்ணிறத்தில் உள்ளதை பார்த்து வாங்க வேண்டும். அந்த முத்துக்கள் உடைந்ததாக இல்லாமல் முழுமையாக இருக்க வேண்டும். ஒரே அளவில் இருந்தால், ஜவ்வரிசியை வைத்து கிச்சடி செய்யலாம். பெரிய அளவில் இருக்கும் ஜவ்வரிசியை கொண்டு வடைகள் செய்யலாம். சின்னதாக உள்ள ஜவ்வரிசியை கொண்டு கீர் மற்றும் பாயாசங்கள் செய்யலாம்.

ஜவ்வரிசியில் உள்ள ஊட்டச்சத்து பயன்கள்:

100 கிராம் ஜவ்வரிசியில் 351 கிலோ கலோரிகள், 87 கிராம் கார்போஹைட்ரேட், 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.2 கிராம் புரதம் உள்ளது. கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே இதில் காணப்படும். இருப்பினும் பால், காய்கறி மற்றும் கடலை பருப்புடன் இதனை சேர்த்து உட்கொண்டால், விட்டுப்போன இந்த ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்.

English summary

The Story Of Sabudana(Sago)

Sabudana forms an integral part of the vrat ka khana almost all over India. They are converted into various delicacies both savoury and sweet and very much enjoyed by all.
Story first published: Thursday, October 31, 2013, 20:29 [IST]
Desktop Bottom Promotion