For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுத்தர வயதினர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளின் அறிகுறிகள்!!!

By Ashok CR
|

நாம் இன்றைய நாளை சந்தோஷமாகவும் நிம்மதியுடனும் வாழ கற்று கொள்ளவேண்டும். ஏன்னெனில், நாளை நம் வாழ்வு எப்படி மாறிவிடும் என்று நமக்கு தெரியாது. மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குழந்தை பருவம் முதல் வயதான காலம் வரை நெருக்கடிகள் நம்மைத் தொடரத்தான் செய்யும். அதில் இருந்து நாம் எவ்வாறு மீண்டு அல்லது கையாளுவது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் 35 இருந்து 55 வயதிற்கு உட்பட்டவரா? உங்களைச் சுற்றி இருப்பவைகளிடம் நாட்டம் குறைகின்றதா? கவனமாக இருங்கள்! இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த வயதில் சில தொடர்வகை மாற்றங்களை சந்திக்கவேண்டி வரும். இதனை நடுவயதினர் நெருக்கடி என்று கூறுவார்கள். இந்த வயதில் இருபாலர்களுக்கும் மிகவும் உணர்ச்சிவசப்படும் காலமாகவே இருக்கின்றது. ஒரு சிலர்க்கு அவர்களின் வாழ்க்கை முறை பொருந்தத்தக்கதாகவே அமைந்து வருகின்றது. ஆனால் ஒரு சிலருக்கோ அது உண்மையான நெருக்கடியாகவே மாறிவிடுகின்றது.

Symptoms Of Mid-life Crisis

இந்த வயதினர் சிலர் தங்களது வாழ்க்கை பொறுப்பை விட்டுவிட்டு உடன் வேலைப்பார்க்கும் நண்பர்களின் கவனத்தையும் எதிர்பாலினரையும் ஈர்க்க முற்படுகின்றனர். உங்கள் கணவரோ மனைவியோ இந்த வயது நெருக்கடியை சந்தித்தால் அது உங்கள் வாழ்வில் வலிமிகுந்த காலமாக இருக்கும். உங்கள் கணவரின்/மனைவியின் இந்த மாற்றங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் மேலும் அவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் விதம் உங்களுக்கு வருத்தத்தையும் அளிக்கச்செய்யும். பெண்கள் இந்த வயதில் மாதவிடாய் நிறுத்தம் என்ற கொடுமையை சந்திக்கின்றார்கள். ஆண்களோ மனநோய் அறிகுறிகளை கடக்க நேரிடுகின்றார்கள். சுருக்கமாக சொன்னால் இந்த காலம் சற்று கடினமாகத்தான் இருக்கும். இந்த வயதைக் கடக்கும் உங்கள் மனைவியோ/கணவரோ சந்திக்கும் பிரச்சனைகள் தான் என்ன? இதனை எப்படி கையாளுவது மற்றும் எதிர்கொள்ளுவது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

எதிலும் விருப்பம் இல்லாமை

இது நடுத்தர வயதினர் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் பொதுவான ஒன்றாகும். எதிலும் விருப்பம் இல்லாமை உருவாகி உங்களை வேதனைக்கு உட்படுத்தும். ஒரு சிலர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பள்ளிநாட்களுக்கு செல்லக்கூட முற்படுவார்கள். அவர்கள் தனது சொந்த முடிவுகளுக்கு கூட கேள்வி எழுப்புவார்கள். நீங்கள் இதை உங்கள் கணவரிடமோ மனைவியிடமோ பார்க்க நேர்ந்தால் அவர்கள் நடுவயதினரின் நெருக்கடியான காலத்தில் இருப்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தோற்றத்தில் மாற்றங்கள்

நடுத்தர வயதினரின் நெருக்கடிகளில் ஒன்று அவர்களின் தோற்ற மாற்றம் ஆகும். ஒருவர் இந்நாள் வரை தோற்றத்திற்கு முக்கியம் கொடுக்காதவராக இருந்து, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கடைக்கு செல்பவராக இருந்து, தீடீரென அவர் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். கண்ணாடி முன் பலமணிநேரம் செலவிடுவார்கள். இவற்றை உங்கள் கணவரிடமோ மனைவியிடமோ நீங்கள் கண்டால் அவர்களின் இந்த காலத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

மனச்சோர்வு உணர்ச்சி

நடுத்தர வயதினர் அனைவர்க்கும் மனச்சோர்வு உணர்ச்சி ஏற்படக்கூடும். இது அவர்களின் மனநிலையை பாதித்து ஒழுங்கின்மையை ஏற்படுத்தும். இவை உங்கள் உறவை பெரிதும் பாதிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். சோகம், சக்தியின்மை, எடை குறைவு எடை அதிகரிப்பு மற்றும் தூக்கமின்மை போன்றவை மனச்சோர்விற்கான அறிகுறிகள்.

திடீர் முடிவுகள்

இந்த வயதினர் அனைவரும் தீடீர் முடிவுகள் எடுக்ககூடியவர்கள். இந்த திடீர் முடிவு அவர்களின் வாழ்க்கையை பின்னாளில் வருந்தப்பட வைக்கும். அவர்கள் தனது வேலையை விடுவது, விவாகரத்து விடுப்பது, வீட்டை விற்பது போன்றவற்றை செய்வார்கள்.

நரக வாழ்க்கை

உங்களோடு 20 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஒரு நாள் இந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கின்றது என சொன்னால் என்ன செய்வீர்கள். உங்கள் கணவரோ மனைவியோ இதை சொன்னால் உங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கும் அல்லவா? இதுதான் நடுத்தர வயதினரின் நெருக்கடிகள். அதனால் கவனமாக இருங்கள்!

அதே பழையது தான்

நடுத்தர வயதினர் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கும் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ இது மிகவும் அவசியமாகதாகும். அவர்களுக்கு படுக்கையறை பழையது ஆகிவிடும். இதனால் அவர்கள் புது பாலியல் உறவை தேடத்தொடங்கி விடுவார்கள். அதனால், உங்கள் கணவரோ மனைவியோ வெகு நேரம் வேலைப்பார்த்தாலோ அல்லது நீண்ட நேரம் சாட் செய்தாலோ கவனமாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தை பற்றிய முடிவெடுக்காத நிலை

நடுத்தர வயதினரின் நெருக்கடிகளின் அறிகுறிகளில் ஒன்று இந்த முடிவெடுக்காத நிலையாகும். அவர்கள் அதை செய்ய நினைத்தாலும் ஒரு உறுதியான முடிவை எடுக்கமாட்டார்கள். வேலைக்கு செல்வது மற்றும் உறவை நீட்டிப்பது போன்றவைகளில் முடிவெடுப்பதில் குழப்ப நிலையை அடைவார்கள்.

English summary

Symptoms Of Mid-life Crisis

What are the symptoms mid-life crisis shows in your husband/wife? Learn more about it and also stay prepared to make necessary amendments to your life, to overcome this.
Story first published: Saturday, December 7, 2013, 14:46 [IST]
Desktop Bottom Promotion