For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூசியால் ஏற்படும் அலர்ஜிக்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் முறைகள்!!!

By Ashok CR
|

தூசியால் ஏற்படும் அலர்ஜி நம்மை சோர்வடைய செய்து நமது இயல்பு நிலையை பெரிதும் பாதிக்கின்றது. தூக்கமின்மை, மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல் போன்றவை தூசியால் ஏற்படும் அலர்ஜிக்கான அறிகுறிகள். இது போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

தூசி ஒவ்வாமையின் அறிகுறிகள் பெரும்பாலும் சளி தொந்தரவை போன்ற அறிகுறிகளையே பெற்றிருக்கும். மூக்கடைப்பு ,மூக்கில் தண்ணீர் வடிதல், கண் எரிச்சல், கண் சிவப்பாதல் ஆகிய அனைத்தும் தூசியால் ஏற்படும் அலர்ஜிக்கான அறிகுறிகள் .

ஆரம்ப நிலையில் இது போன்ற தொந்தரவுகளுக்கு வீட்டில் நமது முன்னோர்களின் கை வைத்தியத்தை பின் பற்றலாம். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் இருக்குமானால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். இல்லாவிடில் ஆஸ்துமா மற்றும் இதர பல பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கும் என்பது நிச்சயம். மகரந்த தூள்கள், செதில், இறகு, ஒட்டுண்ணிகள், சாலையில் உள்ள தூசிகள் போன்றவை இது போன்ற அலர்ஜிகளுக்கு காரணமாக விளங்குகின்றன. இதில் இருந்த விடுபட நாம் நம்மை சுற்றி உள்ள பொருட்களை சுத்தமாக வைத்துகொண்டு சுத்தமான காற்றை சுவாசித்தாலே போதும். வீட்டில் உள்ள கால்மிதிகள், திரைசீலைகள், மெத்தைகள், தலையணைகள், சோபா மற்றும் பெட்ஷீட்களை சுத்தமாக வைத்துக் கொண்டு தூசியின்றி வைத்து கொள்ள வேண்டும்.

தூசி அதிகமாக இருக்கும் இடங்களில் மாஸ்குகளை அணியலாம் அல்லது கையில் இருக்கும் துணியை கொண்டு மூக்கு மற்றும் காது பகுதிகளை மூடிகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளிக் காய்ச்சல்

சளிக் காய்ச்சல்

அறிகுறிகள்

சளிக் காய்ச்சல் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனை. கண்களில் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், தும்மல், மூக்கில் தண்ணீர் வடிதல், இருமல் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஆகியவை இதற்கான அறிகுறிகள்.

சளிக் காய்ச்சல்

சளிக் காய்ச்சல்

குணப்படுத்துதல்

மருந்து கடைகளில் இதற்கென்று மாத்திரைகள் பல உள்ளன. அவைகளை உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளலாம். அலர்ஜியை ஏற்படுத்தும் ஹிஸ்டமைன் என்னும் வேதி பொருள் உடலில் சுரப்பதை தடுக்க, ஹிஸ்டமைன் எதிர்ப்பு மாத்திரைகளை மருத்தவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

காரணம் மற்றும் அறிகுறிகள்

சாலையில் உள்ள தூசிகள், மகரந்த தூள்கள், செதில், இறகு, ஒட்டுண்ணிகள், போன்றவை ஆஸ்துமாவுக்கு காரணமாக விளங்குகின்றன. ஆஸ்துமா என்னும் கொடிய நோய் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தி, இருமல் வரவழைத்து, மூச்சு திணறலுக்கு வழிவகுக்கும். கவனிக்காவிடில் தோல் நீல நிறத்திற்கு மாறலாம், அல்லது, மயக்கத்துக்கு தள்ளலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

குணப்படுத்துதல்

தூசியில் பல மணி நேரம் செலவிட கூடாது. நாம் இருக்கும் இடத்தை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைத்து கொள்ள வேண்டும். ஆஸ்துமாவில் இருந்து விடுபட உடனடி வலி நிவாரணிகள் அல்லது ஆஸ்துமா தடுப்பு முறைகளை கையாள வேண்டும். உடனடி வலி நிவாரணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்து கொள்ளவேண்டும்.

படைநோய்

படைநோய்

காரணம் மற்றும் அறிகுறிகள்

படைநோய் என்பது தோலில் ஏற்படும் நாள்பட்ட தடிமனான தழும்பு போன்ற அடையாளம். அந்த இடத்தில் தோலானது உலர்ந்து,சிவந்து பட்டையாக காணப்படும். இந்த நோயானது பெரும்பாலும் குழந்தைகளையும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பாதிக்கும். இந்த நோயானது சுற்று மாசுகளாலும், தூசிகளாலும் ஏற்படுகிறது.

படைநோய்

படைநோய்

குணப்படுத்தல்

படை நோயை எளிய மருத்துவ முறைகள் மூலம் எளிதில் குணப்படுத்தலாம். ஆனால் நாள்பட்ட நோயை குணப்படுத்துவது கடினம். முறைப்படி பராமரித்தால் இந்த நோயை எளிதில் குணப்படுத்தலாம். பொதுவாக படை நோய் குணப்படுத்தகூடிய ஒரு நோயாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms And Cure For Dust Allergy

Most symptoms of dust allergy are similar to common cold making it difficult to determine if it is due to dust allergy. Common symptoms of dust allergy include sneezing, runny nose, itchy, red or watery eyes, nasal congestion, itchy nose etc. It important to have home remedies and simple self treatments handy when you are prone to dust allergy.
Story first published: Saturday, December 14, 2013, 18:56 [IST]
Desktop Bottom Promotion