For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...

By Maha
|

உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ச்சியான தண்ணீர்

குளிர்ச்சியான தண்ணீர்

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

சோடா

சோடா

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

புதினா

புதினா

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்பு

சோம்பு

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ

டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

செலரி

செலரி

செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் டீ

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

இஞ்சி

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

கிராம்பு

கிராம்பு

ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்

கோதுமை பிரட்

ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

தயிர்

தயிர்

இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Stop Constant Burping With Home Remedies

For those of you who are wondering how to stop this constant burping, take a look at some of the home remedies you can try out to make this constant burping go away.
Story first published: Friday, November 22, 2013, 15:48 [IST]
Desktop Bottom Promotion