For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காப்ஃபைன் உள்ள பொருட்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!!!

By Super
|

காப்ஃபைன் அடங்கிய உணவுகளை உட்கொண்டால் உடல் மற்றும் மன ரீதியான சோர்வுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளங்கும் என்று சொல்லப்படுகிறது. அதனை குறைவான அளவில் உட்கொண்டால் சிறப்பாக செயல்பட்டு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதன் ஊக்குவிக்கும் செயல்திறன் பல பேரை அதற்கு அடிமையாக்கி விடுகிறது. அதனால் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வேலை செய்ய சில பேர் அதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால் ஏற்பட போவது நரம்பு தளர்ச்சி, பதற்றம், தசைத்துடிப்பு மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற உடல் நல கோளாறுகளே. இன்றைய வாழ்க்கை சூழலில், பல பேர் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தங்கள் ஆற்றலை வெளிக்காட்ட துடிக்கின்றனர். அதனால் பல பேர் காப்ஃபைன் மற்றும் காப்ஃபைன் எனர்ஜி பானங்களை குடித்து தெம்பாக இருக்கின்றனர். ஒரு முறை அடிமையானால் காஃபினை கைவிடுவது அவ்வளவு சுலபம் கிடையாது.

காப்ஃபைன் என்பதை இன்னும் தெளிவாக சிலைக்க வேண்டும் என்றால், அது உங்கள் மன நிலையை மாற்றக் கூடிய கிளர்ச்சியூட்டி மருந்து வகையாகும். இருப்பினும் உங்களை அடிமை படுத்தும் கொக்கைன் மற்றும் ஆம்ஃபிடமைன் போன்ற போதை பொருட்களில் உள்ள குணநலன்களை போல இருப்பதில்லை காப்ஃபைன். காஃபினுக்கு நீங்கள் அடிமையாக ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாக தெரிவதில்லை. மெதுவாக ஏற்படும் மாற்றம் அது. இருப்பினும் தினமும் 300 மில்லிகிராமுக்கு அதிகமாக அதனை உட்கொண்டால் உடல்நல கோளாறுகள் கதவை தட்ட ஆரம்பித்து விடும். இது அடிமை பழக்கத்தை ஏற்படுத்தி விடுவதால் இப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

Steps To Quit Caffeine

காப்ஃபைனுக்கு அடிமையாவதால் உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு படற்ற சீர்குலைவு ஏற்படும். வெறுமனே காபி மற்றும் தேநீரில் மட்டும் காப்ஃபைன் இருப்பதில்லை. பல கோலா மற்றும் எனர்ஜி பானங்களிலும் கூட காப்ஃபைன் அதிகமாக உள்ளது. இது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இவ்வகை பானங்களில் காப்ஃபைன் அளவு காபியில் உள்ளதை விட அதிகமாக இருப்பதால் அதனை தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏற்கனவே சொன்னதை போல் இது பல பேருக்கு தெரியாததால் அவர்கள் அளவுக்கு அதிகமான காஃபினை உட்கொண்டு வருகின்றனர். சரி, இப்பழக்கத்தை அறவே நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? இதோ அதற்கான சில வழிமுறைகள்:

1. மாற்று

காப்ஃபைனுக்கு அடிமையான பழக்கத்தை கைவிட முதலில், காப்ஃபைனுக்கு இணையான ஆரோக்கியமான மாற்று பொருளை நாட வேண்டும். இதற்கு கிரீன் டீ, சீமைச்சாமந்தி டீ போன்ற பல மாற்றுகள் இருக்கிறது. இந்த மாற்றத்தை உடனடியாக செயல்படுத்தாமல் மெதுவாக மேற்கொள்ள வேண்டும்.

2. திசை திருப்புதல்

பொதுவாக நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்படவே பல பேர் காப்ஃபைனை உட்கொள்கின்றனர். காபி மற்றும் காப்ஃபைன் கலந்த பானங்கள் குடிப்பதற்கு தூண்டுதல் ஏற்படும் போது உங்கள் மனதை உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது மீது திசை திருப்புங்கள். கைபேசியில் விடியோ கேம் விளையாடுதல், யூட்யூபில் படம் பார்ப்பது போன்ற சுவாரசியமான செயல்களில் ஈடுபட்டால் காப்ஃபைன் இல்லாமலேயே நீங்கள் புத்துணர்ச்சியை பெறலாம்.

3. டயட்

உடல சோர்வை நீக்கி ஆற்றல் திறனை அதிகரிப்பதற்காகவே பல பேர் காப்ஃபைன் கலந்த பானங்களை குடிக்கின்றனர். உங்கள் ஆற்றலை அதிகரித்து உங்கள் மனநிலையை ஊக்குவிக்க அதற்கு பதிலாக பல உணவுகளும் கூட இருக்கத் தான் செய்கிறது. உங்கள் மனநிலையை ஊக்குவித்து ஆற்றலை அதிகரிக்க உதவு உணவுகளில் முதலிடத்தில் இருப்பது வாழைப்பழம். அதை தவிர சால்மன் மீன்கள், முட்டைகள், வால்நட் போன்றவைகளும் இதற்கு துணை புரியும். இவைகளை கொண்டு காப்ஃபைன் பழக்கத்தை வேகமாக கைவிடலாம்.

4. குட்டி தூக்கம்

பொதுவாக மதிய நேர தூக்கத்தை கட்டுப்படுத்தவும் இரவு நீண்ட நேரம் தூங்குவதற்கும் காப்ஃபைனை பலர் உட்கொள்கின்றனர். மாறாக வேலை நேர இடைவேளையில் அல்லது சாயந்தர வேளையில் குட்டி தூக்கம் போடலாம். இது உங்கள் மனதிற்கும் எண்ணங்களும் எந்த ஒரு ரசாயன சேர்க்கையின்றி புத்துணர்ச்சி அளிக்கும். குட்டி தூக்கம் போட்டால் காப்ஃபைன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இந்த தூக்கமே உங்களுக்கு தந்து விடும். அதனால் காப்ஃபைன் பழக்கத்தை கைவிட இதுவும் உதவும்.

5. நன்றாக தூங்குங்கள்

உடல் சோர்வு மற்றும் ஆற்றல் திறன் இழப்புக்கு முக்கிய காரணமாக விளங்குவது தூக்கமின்மையே. ஒவ்வொரு நாள் முடிவில் ஏற்படும் சோர்விலிருந்து மீள்வதற்கு சரியான நேரத்தில் தேவையான அளவு தூக்கம் கிடைத்தாக வேண்டும். போதிய தூக்கம் இல்லாத போது நாம் நினைக்காத அளவுக்கு காப்ஃபைனை நாடி செல்கின்றனர். போதிய தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகளை காஃபினை உட்கொண்டு ஈடு செய்கின்றனர். அதனால் தினமும் 6-8 மணி நேரமாவது தூக்கம் அவசியம். அப்படி செய்தால் காப்ஃபைன் தேவைப்பாடு அறவே இல்லாமல் போய்விடும்.

English summary

Steps To Quit Caffeine

In today’s lifestyle, many people tend to push themselves to the limit of their ability. Many tend to use caffeine and caffeinated energy drinks to achieve that extra bit to stay ahead. Once addicted, quitting caffeine is not an easy task.
Story first published: Saturday, November 23, 2013, 18:18 [IST]
Desktop Bottom Promotion