For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சோம்னியா என்னும் தூக்கமின்மையின் அறிகுறிகளும், சிகிச்சைகளும்!!!

By Super
|

தூக்கம் வரவில்லை என்று பலர் புலம்புவதை நாம் காணலாம். அது என்றாவது ஒரு நாள் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே தினசரி பழக்கமாக மாறினால்? இன்சோம்னியா (தூக்கமின்மை) என்பது இந்த உலகத்தில் அனைத்து வயதினரும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நல கோளாறாகும். இன்சோம்னியா என்பதற்கு அர்த்தம் என்னவென்று பார்த்தால் சாதாரணமானது தான்; தூக்கமின்மை அல்லது சீரான தூக்கம் கிடைக்காததே அதற்கு அர்த்தமாகும். பல வகை இன்சோம்னியாவால் பல மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறுகிய கால இன்சோம்னியா என்றழைக்கப்படும் அக்யூட் இன்சோம்னியா தான் அதிகமானோரை பாதிக்கிறது. போதிய மருந்துகள் உண்டால் அல்லது வாழ்க்கை முறையை சிறிது மாற்றி அமைத்தால், இது சிறிது காலத்தில் தானாகாவே சரியாகிவிடும்.

ஆனால் நீண்ட காலமாக இருக்கும் இன்சோம்னியா கண்டிப்பாக வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை கண்டிப்பாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 3 நாட்களுக்காவது 30 நாட்களுக்கு மேல் தூக்கமில்லாமல் இருந்தால், குரோனிக் இன்சோம்னியா என்றழைக்கப்படும் இன்சோம்னியாவால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறலாம். குரோனிக் இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டவர்களை 'இன்சோம்னியாக்ஸ்' என்று அழைப்பார்கள்.

இப்போது இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டிருந்தால் ஏற்படும் அறிகுறிகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்குவதற்கு பதில் விழித்திருப்பது

தூங்குவதற்கு பதில் விழித்திருப்பது

இன்சோம்னியாவின் அடிப்படை அறிகுறியாக கருதப்படுவது தூக்கமின்மையே. இதனால் பாதிக்கப்பட்ட பல பேர் தூக்கத்தை பெறுவதற்கு சில வழிமுறைகளை தானாக பின்பற்றுவார்கள். அதில் தூக்கத்தை பெறுவதற்கு சிலர் மதுபானம் குடித்து தூக்கத்தை பெறுவதும் உண்டு. சிலருக்கு தூக்கம் வருவதில் பிரச்சனை என்றால் இன்னும் சிலருக்கோ சீக்கிரத்தில் முழிப்பு தட்டி விடும். இன்னும் சிலருக்கு சீரான முறையில் தூக்கம் வருவதில்லை; பாதி தூக்கத்திலேயே அடிக்கடி விழித்துக் கொள்வார்கள். இதில் நாள் கணக்காக தூக்கம் இல்லாதவர்கள் தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளவர்கள்.

சோர்வுடன் காலையில் எழுதல்

சோர்வுடன் காலையில் எழுதல்

இரவு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றால் காலை எழும் போது புத்துணர்வுடன் எழுந்திருக்க முடியாது என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போதுமான தூக்கம் கிடைக்காத போது, உடம்பில் உள்ள ஒட்டு மொத்த மெட்டபாலிச செயல்பாடும் பாதிக்கப்படும். அதனால் காலை எழுந்திருக்கும் போது ஒரு வகை உணர்வு நிலவும், அது லேசான தலை வலி அல்லது ஹேங் ஓவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

பகல் நேரத்தில் சோம்பல்

பகல் நேரத்தில் சோம்பல்

பகல் நேரத்தில் அடிக்கடி சோம்பல் ஏற்படுவது இன்சோம்னியாவின் கண்கூடான அறிகுறியாகும். அதிலும் நோய்வாய் பட்டிருக்கும் போது ஏற்படும் சோம்பல் உணர்வை இப்போது உணரலாம். இப்படி பகல் நேரத்தில் ஏற்படும் களைப்பும், தூக்க கலக்கமும் நம் வேலையை வெகுவாக பாதிக்கும்.

அதிகரிக்கும் எரிச்சலும் மாறும் மனநிலையும்

அதிகரிக்கும் எரிச்சலும் மாறும் மனநிலையும்

தினசரி போதுமான அளவு தூக்கம் கிடைக்காமல் போகும் போது, நமக்கு எரிச்சல் அதிகரிப்பது இயல்பு தான். அப்படிப்பட்டவர்களுக்கு மூட்டை மூட்டையாக கோபம், சோகம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும். அவர்களால் அனைத்திலும் சரி வர கவனம் செலுத்த முடியாது.

குரோனிக் இன்சோம்னியாவின் அறிகுறிகள்

குரோனிக் இன்சோம்னியாவின் அறிகுறிகள்

இன்சோம்னியா அறிகுறிகளை காலாகாலத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை பெறாவிட்டால், அவைகள் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு சென்று விடும். நாம் மேல் கூரியதை போல் இல்லாமல் இது மிகவும் ஆபத்தில் போய் முடியும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இதனால் பாதிக்கப்பட்டவர் நிரந்தரமாக மன அழுத்தத்துக்கு ஆளாவார். இது குறுகிய காலப்பிரச்சனையோ அல்லது குறுகிய கால மன அழுத்தமோ கிடையாது. இது முற்றும் போது பாதிக்கப்பட்டவர் முழவதும் செயலிழந்து போவார்.

அரோமாதெரபி (வாசனை தெரபி)

அரோமாதெரபி (வாசனை தெரபி)

உங்களுக்கு மன அழுத்தமா? அப்படியானால் அரோமாதெரபியை தேர்ந்தெடுங்கள். இந்த எண்ணெய்கள் நிச்சயம் கை கொடுக்கும்.

சாம்பிராணி

சாம்பிராணி

சுவாசப்பைக் குழாயழற்சி, இருமல் மற்றும் கவலையினால் ஏற்படும் இன்சோம்னியாவிற்கு இதனை பயன்படுத்தலாம்.

மல்லிகை

மல்லிகை

மன அழுத்தத்தை நீக்க இது பெரிதும் உதவும். சுவாசப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்திற்கு இது பெரிதும் உதவி புரியும்.

லாவெண்டர்

லாவெண்டர்

வலி, தலைவலி, சதை பிடிப்பு போன்றவைகளை நீக்கி, நல்ல தூக்கத்தை அளிக்கும். பயத்தினால் போகும் தூக்கத்திற்கும் இது நிவாரணியாக விளங்கும்.

யோகாவின் மேஜிக்

யோகாவின் மேஜிக்

யோகா, உடம்பில் உள்ள நரம்பியல் அமைப்பை ஊக்குவிக்கும். மேலும் இன்சோம்னியா வர முக்கிய காரணமாக இருக்கும் மன அழுத்தத்தை நீக்கவும் இது உதவும். பிரேதம் போல் படுத்திருக்கும் யோகாவை மேற்கொண்டால், அது பதட்டத்தை நீக்கி தூக்கமின்மையை போக்கும். ஆகவே இதற்கு 20 நிமிட நேரத்தை ஒதுக்குங்கள்.

மூலிகையின் மகிமை

மூலிகையின் மகிமை

உடல் நல ஆரோக்கியம் 'யின்' மற்றும் 'யாங்' என்ற இரண்டு சிறு வார்த்தைகளில் தான் அடங்கியுள்ளது என்று சீன மக்கள் நம்புகின்றனர். இவை இரண்டும் எவ்வளவு சமமாக இருக்கிறதோ, அவ்வளவு அளவு உடல் ஆரோக்கியமாக இருக்கும். சாமந்திப்பூ, சீமைச்சாமந்தி மற்றும் லாவெண்டர் போன்ற மூலிகை தேநீர் பருகினால், அவை இன்சோம்னியாவுக்கு எதிராக போராடி விரைவில் குணமடைய செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs That You Are Suffering From Insomnia

People are prone to suffering from various types of insomnia. The most common type is short-term or Acute Insomnia that tends to recede within a few days itself or with some over-the-counter medications or minor changes in lifestyle.
Desktop Bottom Promotion