For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

By Maha
|

அனைவரும் எண்ணெயிலேயே ஆலிவ் எண்ணெயில் மட்டும் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன என்று நினைக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் இந்த ஆலிவ் எண்ணெய் பற்றி தெரியாத நம் முன்னோர்கள், அந்த ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயைத் தான் சாப்பிட்டார்கள். அதனால் தான் இன்றும் நம் பாட்டி, தாத்தாக்கள் வலிமையோடு இருக்கின்றனர். அதிலும் இந்த எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இதுப் போன்று இந்த நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம்.

அதுமட்டுமின்றி, இந்த எண்ணெய் கொடண்டு நாள்பட்ட நோய்களை சரிசெய்ய முடியும். சரி, இப்போது இந்த நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கிய இதயம்

ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்

வலுவான எலும்புகள்

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு

சுவாசக் கோளாறு

நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்

பளிச் பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அழகான சருமம்

அழகான சருமம்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

புரோட்டீன்

புரோட்டீன்

எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப் பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sesame Seed Oil Benefits For Your Health

The sesame seed oil benefits may not be as popular as those of olive oil. However, this healthy oil has many health benefits to boast of. Here are some of sesame seed oil benefits that you need to be aware of.
Story first published: Monday, June 24, 2013, 15:19 [IST]
Desktop Bottom Promotion