For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் ரன்னிங் பயிற்சியில் ஈடுபடும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஓடுவது மிகச்சிறந்த மற்றும் செலவில்லாத உடற்பயிற்சியாகும். ஒரு ஜோடி காலணிகள் மற்றும் சரியான உடைகளை அணிந்து கொண்டால் நீங்கள் ஓடுவதற்கு தயாராகி விடுகிறீர்கள். இது எளிமையான செயலாக இருந்தாலும் கூட அதில் சில அபாயங்கள் உள்ளன. அவற்றை கவனிக்காமல் விட்டால் மிகவும் மோசமான காயங்களாக வளர்ந்து விடும். முறையான கவனிப்பு இல்லையெனில் ஓடுபவர்கள் யாராக இருந்தாலும், சிறிது காலத்திற்குப் பின்னர் மூட்டு மற்றும் எலும்பு வலிகளுடன் தான் இருக்க நேரிடும்.

சரியான காலணிகளை அணிந்து கொள்வதில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீங்கள் பணிபுரிய அணியும் காலணிகள் அல்லது விளையாட்டிற்கான காலணிகள் அணிந்து ஓடும் போது முழங்கால் மற்றும் இதர மூட்டுகளில் கடும் வலி வந்து அவதிப்படுவீர்கள். முதன்முதலாக, நீங்கள் தொடர்ச்சியாக ஓடத் தொடங்கும் வேளைகளில், அதிகமாக ஓடக் கூடாது அல்லது உங்களை மிகவும் களைப்படையச் செய்யக் கூடாது மற்றும் கெண்டைக்கால் பகுதிகளில் தளர்வாக உள்ள தசைகளை சேதப்படுத்தி விடக் கூடாது. எனவே, தொடர்ந்து ஓடத் துவங்கும் முன்னர் நீங்கள் அது குறித்து ஆராய்ந்து செயல்படுவது சிறந்த பலனைத் தரும்.

Running Mistakes To Avoid

நீங்கள் ஓடுவது என்று தீவிரமாக முடிவெடுத்து விட்டால், ஓடும் போது இருக்க வேண்டிய உடலின் அமைப்பு (Body Posture) மற்றும் இதர நுட்பங்கள் பற்றி சற்றே ஆராயவும், ஆலோசனை பெறவும் வேண்டியது நன்று. நீங்கள் எப்படி அடி எடுத்து ஓட வேண்டும், உங்கள் உடலின் தன்மைக்கு ஏற்றவாறு ஓடுவது எப்படி என்பதை கவனிக்க வேண்டும். புதிதாக ஓடத் தொடங்குபவர் என்றால், கொஞ்சம் உடலை மெதுவாக ஓடப் பழகச் செய்யவும் மற்றும் உடலின் கடினத்தன்மையை விடுவிக்கவும் செய்து தசைகளை தளர்வாக இருக்கச் செய்து விட்டு, பின்னர் நீண்ட தூரங்களை ஓடத் துவங்குங்கள்.

1. தொடக்க கால ஓட்டக்காரர்கள் பலரும் செய்யும் பொதுவான தவறாக இருப்பது - ஆரம்பத்திலேயே அதிக அளவு ஓடுதல். நீண்ட காலத்திற்கு நீங்கள் ஓட வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தவறுகளில் ஒன்றாக இது உள்ளது. ஏனெனில், நீங்கள் இதுவரையிலும் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாததால், தொடக்கத்தில் உங்கள் உடலும், தசைகளும் கடினமாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக சில உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகளை செய்து, உடலை தளர்வான நிலைக்கு கொண்டு வந்து விட்டு, தொடர்ந்து ஓடத் துவங்க வேண்டும்.

2. ஓடத் துவங்குபவர்கள் போதிய அளவு சாப்பிடாமல் இருப்பது தான் அவர்கள் செய்யும் மற்றொரு முக்கிய தவறாக உள்ளது. நீங்கள் தொடர்ச்சியாக ஓடத் துவங்கி விட்டால், அதற்கேற்ற சரிவிகிதமான புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ள ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிட வேண்யடிது அவசியமாகும். இவை உடலுக்கு ஓடத் தேவையான சக்தியைத் தரும் எரிபொருள்களாக இருந்து உதவுகின்றன.

3. ஓடத் துவங்குபவர்கள் மற்றும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் என இருதரப்பினரும் செய்யக் கூடிய முட்டாள்தனமான தவறாக இருப்பது காலணி அணியாமல் ஓடுவது தான். குறிப்பாக, ஓடத் துவங்குபவர்கள் கைக்கு கிடைத்த, கண்ணுக்கு எட்டிய ஏதாவது ஒரு காலணியை அணிந்து கொண்டு ஓடுவார்கள். ஓடுவதற்கு ஏற்ற முறையான காலணிகள் இல்லாமல் ஓடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உடலில் காயங்கள் ஏற்பட மிகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

4. மற்றொரு பொதுவான தவறாக இருப்பது ஓடுபவர்கள் அணியும் உடைகளில் உள்ளது. ஓடுவது என்பது மிகவும் எளிமையான பயிற்சியாக இருந்தாலும், தொடர்ந்து ஓடும் போது முறையான உடைகளை அணிவது அவசியமாகிறது. அந்த உடை மிகவும் இறுக்கமாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இருந்தால் ஓடுவதற்கு இடையூறாகவே இருக்கும். ஓடுவதற்கென இருக்கும் உடைகளையும், உங்கள் உடலுக்கு வசதியான உடைகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. நீண்ட மற்றும் ஆரோக்கியமான தொடர் ஓட்டத்திற்கு உங்கள் உடலுக்கு எந்த வகையான ஓட்ட நிலை (Running Posture) சரியானது என்பதை அறிய வேண்டும். இதன் மூலம் தான் உடலின் அழுத்தத்தை குறைக்க முடியும். நீங்கள் ஓய்வாகவும், உடல் முழுவதும் சரியான ஒத்திசைவுடனும் இருக்கும் வகையில் ஓட்ட நிலை இருக்க வேண்டும்.

5. உங்கள் உடலுக்கு குறைவான சிரமம் மற்றும் அழுத்தத்தை தரும் வகையில் ஓடுவதற்கு, நீங்கள் அதிக அழுத்தத்துடன் தரையில் கால் ஊன்றக் கூடாது. பெரும்பாலான ஓட்டக்காரர்களுக்கு மூட்டுகள் மற்றும் எலும்பு இணைப்புகளில் காயங்கள் ஏற்பட இது தான் முக்கிய காரணமாக உள்ளது. உடலின் மூட்டுகளுக்கு குறைந்த அழுத்தம் தரும் வகையில் சறுக்கிய படி, கீழே விழாமல் ஓடினால் இந்த தவறை நீக்கி விடலாம்.

7. சிறிது தூரம் ஓடிய பின்னரும் கூட தொடர்ந்து நீங்கள் மிகவும் வேகமாக ஓட முயற்சிக்க வேண்டாம். நீங்கள் ஓடும் வேகம் சம அளவிலும், உடலின் அழுத்தம் மற்றும் களைப்பை குறைக்கும் வகையிலும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும். மிகவும் வேகமாக ஓடுவதால் உடல் வலி, சக்தி வறண்டு போய் விடுதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டு நாள் முழுவதும் உங்களை களைப்படையச் செய்து விடும்.

English summary

Running Mistakes To Avoid

Running is one of the most affordable and best fitness exercises one can think of. With a pair of comfortable running shoes and flexible clothes and you are good to go. Though it is as simple as that, there are risks involved in running that when neglected results in serious physical injuries to you. Without proper care one can end up damaging their joints and bones on the long run.
Desktop Bottom Promotion