For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு ப்ளம்ஸ் அளிக்கும் நன்மைகள்!!!

By Ashok CR
|

ப்ளம்ஸ் என்பது பார்ப்பதற்கு அழகான,மற்றும் சுவை மிகுந்த ஒரு கனி.இதனை பச்சையாகவும், உலர்கனியாகவும் உண்ணலாம். இதில் உள்ள நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தை, புருன்ஸ் பழம் என்பர். இதில் வைட்டமின் சி, கே, ஏ மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. ப்ளம்சில் பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உறுப்புகளில் உள்ள ஆக்ஸிஜனை சிதைத்து, சூப்பர் ஆக்சைடு எதிர்மின் அயனியாக மாற்றுகிறது. இது உடலில் உள்ள கொழுப்புகளால் ஏற்படும் ஆக்ஸிஜன் இழப்பை தடுக்கிறது

உலகம் முழுவதும் ப்ளம்ஸ் வகைகள் இரண்டாயிரத்தை தாண்டுகிறது. ப்ளம்ஸ் சம்பந்தமாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ப்ளம்சில் அடங்கியுள்ள எண்ணற்ற நன்மைகளை பட்டியலிடுகின்றன. உலர்ந்த ப்ளம்சில் தாமிரம் மற்றும் போரான் போன்ற சத்துகள் அடங்கி உள்ளன. இவை எலும்பு துளை நோய் (எலும்பு மெலிதல்) வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் இனுலின் என்ற நார்சத்து பொருள் அடங்கி உள்ளது. இது செரிமான பாதையில் அமில தன்மையை சுரக்கும் குடல் வாய் பாக்டீரியாவை அளிக்கும் சக்தி கொண்டது.

பிளம்சில் அதிக அளவிலான தாது பொருள்கள் அடங்கி உள்ளன. அவை உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும் பயன்படுகிறது. சில ப்ளம்ஸ் பழங்களில் அந்தோசயணி என்ற நிறமி உள்ளது. இது மனித உடலில் உள்ள உறுப்புகளில் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.

ப்ளம்ஸ் மற்றும் புரூன்ஸ் இரண்டுமே இரும்புச்சத்தை உள்வாங்கக் கூடிய சக்தியை உடலுக்கு அளிக்கிறது. மேலும் ப்ளம்ஸில் வைட்டமின் பி மற்றும் அதன் கூட்டு சத்துகளான வைட்டமின் பி6, நியாசின், ஃபீனோலிக் அமிலம் போன்றவை உள்ளன. இவை புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளின் வளர்ச்சிதை மாற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயத்தை பாதுகாப்பதில் பிளம்ஸின் பங்கு

இதயத்தை பாதுகாப்பதில் பிளம்ஸின் பங்கு

ப்ளம்ஸில் அடங்கியுள்ள வைட்டமின் கே, உடலில் தேவையற்ற இடங்களில் இரத்தம் உறைதலை தடைசெய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு போன்றவை சமநிலையில் உள்ளது. மேலும் ப்ளம்சில் உள்ள பொட்டாசியம் மற்றும் தாது பொருட்கள், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பை தடுக்கிறது.

புற்றுநோயை தடுக்கும் ப்ளம்ஸ்

புற்றுநோயை தடுக்கும் ப்ளம்ஸ்

ப்ளம்சில் உள்ள அந்தோசயணி என்ற சிவப்பு கலந்த ஊதா வண்ண நிறமி, புற்று நோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. ப்ளம்சில் உள்ள பீட்டா கரோடின் என்ற வேதி பொருள் நுரையீரல் மற்றும் பல உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும் வல்லமை வாய்ந்தது.

கண்பார்வை தெளிவடைய ப்ளம்ஸ்

கண்பார்வை தெளிவடைய ப்ளம்ஸ்

வைட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்திற்கும், தெளிவான கண் பார்வைக்கும் அவசியம். இது விழித்திரை சவ்வின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ப்ளம்சில் உள்ள ஜீ ஷேன்தின் என்ற தாதுபொருள், கண்ணில் உள்ள ரெட்டினாவுக்கு மிக நல்லது. இது புறஊதாகதிர்களின் தாக்கத்தில் இருந்து விழியை பாதுகாக்கிறது.

செரிமானத்தில் ப்ளம்சின் பங்கு

செரிமானத்தில் ப்ளம்சின் பங்கு

ப்ருன்ஸ் என்றழைக்கபடும் உலர்ந்த ப்ளம்சில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இதனால் எளிய செரிமானத்திற்கு ப்ளம்ஸ் உதவுகிறது. மேலும் இதில் உள்ள சோர்பிடல், இசடின் போன்றவை செரிமான மண்டலம் நன்கு செயல்பட வழிவகுப்பதோடு, மலச்சிக்கலையும் தடை செய்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்

உடல் நலத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ளம்சில் கொட்டி கிடக்கின்றன. பாலி ஃபீனோலிக் கூட்டு சேர்மங்களான லூட்டின், கிரிப்டோசாந்தைன் மற்றும் ஜியா சாந்தைன் போன்றவை உறுப்புகளில் உருவாகும் மிகை ஆக்ஸிஜனை குறைக்கிறது. இது ஆர்.ஒ.ஸ் என்ற கூட்டு சேர்மத்தினால் உண்டாகும் நோய்களை தடுக்கிறது.

நோய் தடுப்பாற்றலை தடுக்கும் ப்ளம்ஸ்

நோய் தடுப்பாற்றலை தடுக்கும் ப்ளம்ஸ்

ப்ளம்சில் உள்ள வைட்டமின் சி தசைகளின் வலிமைக்கும், நோய் தடுப்பு ஆற்றலுக்கும் உதவுகிறது. வைட்டமின் சி ஃப்ளு, சளி மற்றும் காது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

கொலஸ்ட்ரால் குறைப்பில் ப்ளம்ஸ்

கொலஸ்ட்ரால் குறைப்பில் ப்ளம்ஸ்

ப்ளம்சில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. பித்த நீர், கல்லீரலில் கொழுப்பை செரிக்க உதவுகிறது. நார்ச்சத்துடன் கூடிய பித்த நீரின் உதவியால், கல்லீரலானது கொலஸ்ட்ராலின் அளவை சரிசெய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Plums Health Benefits For Men

Plums are one of the most colourful and tasty fruits. They are eaten in its fresh and raw form or dried. Either way the health benefits of plums are many. Dried plums are referred to as prunes.
Story first published: Friday, December 13, 2013, 20:17 [IST]
Desktop Bottom Promotion