For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடுமையான ஒற்றை தலைவலிக்கான சிகிச்சை முறைகள்!!!

By Super
|

ஒற்றை தலைவலி என்பது தலைவலியின் ஒரு கடுமையான வகை. இது சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை சீர்குலைக்கிறது. இந்த குறைபாட்டின் அறிகுறிகளாவன: குமட்டல், கண் கூசுதல், குருட்டு புள்ளிகள், ஒளி சிதறடிப்பு மற்றும் கழுத்து வலி.

ஒற்றை தலைவலி தீவிர நோய் என்றாலும், சில எளிய தீர்வுகள் உதவியுடன், அதற்கு திறம்பட சிகிச்சையளிக்க முடியும். ஒற்றை தலைவலியை சமாளிக்க மிகவும் செயல்திறன் மிக்க வழிகள் அவசியம். அத்தகைய சில செயல்திறம் மிக்க வழிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

ஒற்றை தலைவலி ஒரு குறைபாடு ஆகும். ஆனால் அது எளிதாக வீட்டு வைத்தியம், சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தால், எளிதில் குணப்படுத்த முடியும். ஒருவேளை சில சிகிச்சை முறைகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக ஒரு மருத்துவரிடம் ஆலோசிக்கவும். சரி, இப்போது அந்த சிகிச்சை முறைகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, ஒற்றை தலைவலியிலிருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

ஒற்றை தலைவலியை எளிமையாக்கும் எளிய வைத்தியங்களுள் ஒன்று தலைக்கு மேல் ஐஸ் கட்டி பை வைப்பது. இவ்வாறு வைப்பதால், ஐஸ் கட்டி பை மூளையில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி வலியை குறைக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஐஸ் கட்டி பையை மெதுவாக தேய்க்க வேண்டும். உடனடி நிவாரணத்திற்கு நெற்றி பொட்டிலும் கழுத்திலும் மெதுவாக தேய்ப்பது பலன் தரும்.

ஓடிசி மருந்துகள்

ஓடிசி மருந்துகள்

தலைவலியை குணப்படுத்த பரவலான தன்னிச்சை மருந்துகளை பயன்படுத்த முடியும். ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் தலைவலிக்கு பயன்படுத்தபடும் பொதுவான மருந்துகள். எனினும், இந்த மருந்துகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது

காப்ஃபைன்

காப்ஃபைன்

ப்ளாக் காப்பியில், காஃப்பைன் அதிக அளவு உள்ளது. இது தலைவலியை குணப்படுத்துகிறது. இந்த ப்ளாக் காப்பி ஒற்றை தலைவலி நோயாளிகள் பலருக்கு வேலை செய்கிறது. ஆனால் இது சாதாரண தலைவலியை மோசமாக்க செய்யலாம்.

அரோமாதெரபி

அரோமாதெரபி

அரோமாதெரபி ஒற்றை தலைவலி தாக்குதல்களை குணப்படுத்த உதவும். ஒற்றை தலைவலியோடு போராடி கொண்டிருக்கும் போது பல்வேறு நறுமணங்கள் உடலில் ஒரு இனிமையான விளைவை ஏற்படுத்தி ஓய்வை அளிக்கும். சாமந்தி, துளசி, யூக்கலிப்டஸ் போன்றவை தலைவலியை குணப்படுத்தும் பொதுவான நறுமண மூலிகைகளில் சில. ஆகவே பல்வேறு மூலிகைகளை சோதனை செய்து தங்களுக்கு மிக சிறந்த பொருத்தமான மூலிகை ஒன்றை கண்டுபிடிக்க முடியும்.

இனிமையான மசாஜ்

இனிமையான மசாஜ்

எப்போதாவது, கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் ஏற்படும் தசை பிடிப்பு, தலைவலி தாக்குதலை தூண்ட முடியும். ஆகவே அப்போது ஒரு நல்ல மசாஜை தசைகளுக்கு செய்தால், தசைகள் ஓய்வு எடுப்பதோடு ஒரு சுகமான அனுபவத்தையும் ஏற்படுத்தும்.

மக்னீசியத்தின் ஆற்றல்

மக்னீசியத்தின் ஆற்றல்

மக்னீசியம் தலைவலி நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரைக்கும் சஞ்சீவியாக கருதப்படுகிறது. மக்னீசியம் திறம்பட பல்வேறு தலைவலி தூண்டல்களை எதிர்கொள்கிறது மற்றும் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவுகளை ஒழுங்குபடுத்தும். உணவில் 500 மில்லி கிராம் டோஸ் மக்னீசியம் எடுத்துக் கொண்டால், திறம்பட தலைவலி தாக்குதல்களில் இருந்து விடுபட முடியும். அதிலும் பால்

யோகா

யோகா

யோகா, ஒற்றை தலைவலிக்கான சிறந்த மாற்று சிகிச்சை முறைகளில் ஒன்றாகும். யோகா உடலின் உயிர்வேதியியல் மற்றும் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுக்க முடியும். மூச்சு பயிற்சிகள் மற்றும் பிற யோகா நிலைகள், ஒற்றை தலைவலி தாக்குதல்களின் நிகழ்வுகளை குறைக்க உதவும்.

தண்ணீர் மருத்துவம்

தண்ணீர் மருத்துவம்

தண்ணீர் மருத்துவம் மிகவும் எளிதானது. இது உடலின் இரத்த ஓட்டத்தை திறம்பட சீராக வைக்கிறது. தலைக்கு வெளியே இரத்த ஓட்டத்தை சீராக இயக்குவதின் மூலம் வலியை சற்று குணப்படுத்த உதவுகிறது. குளிர்ந்த நீரில் கால்களை வைத்து, சூடான பாட்டில் நீரை தலைக்கு பின்புறம் வைப்பதின் மூலம், தலைவலியை கட்டுப்படுத்த முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Migraine headaches remedies | கடுமையான ஒற்றை தலைவலிக்கான சிகிச்சை முறைகள்!!!

Migraine is a severe form of headache which can make leading a normal and healthy life quite difficult. This disorder has symptomatic of nausea, increases photosensitivity, blind spots, flashes of light and pain in neck. Though migraine is a serious disorder, it can be effectively treated with the help of some simple remedies. Below are listed some of the most effective ways to counter migraine.
Desktop Bottom Promotion