For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது குடிப்பதால் தூக்கம் கெடும்... நிபுணர்கள் எச்சரிக்கை!!

By Super
|

தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான்.

தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே. இது உங்கள் ஆக்கத்திறன், மனது, உடல்நிலை மற்றும் வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இதுவே கரனிக் இன்சோம்னியா என்றால் பல உடல்நல கோளாறுகள் கூட வரும். வாழ்வு முறை மற்றும் தினசரி பழக்க வழக்கத்தில் எளிய மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கமில்லாமைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேலை நேரம்

வேலை நேரம்

இரவு நேரங்களில் வேலையில் ஈடுபட்டிருப்பதால் பகலில் தூங்குகிறீர்களா? அப்படியானால் இயல்பான தூக்க சுழற்சியில் மற்றம் ஏற்பட்டும் . தூக்க சுழற்சி மாறியிருப்பதால், உடம்புக்கு கிடைக்க வேண்டிய சீரான, தேவையான அளவு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் போதிய தூக்கம் கிடைக்காமல் முழித்திருக்கும் நேரத்தில் கூட தலை குடைச்சல் ஏற்படும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

நம் உடல் போதிய அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் மெட்டபாலிசத்தின் செயல்பாடு குறைந்து விடும். இதனால் சோம்பல் ஏற்பட்டு எப்போதும் தூக்க கலக்கத்தோடு இருப்பீர்கள்.

அதிகமான எடை

அதிகமான எடை

அதிக எடை அல்லது கொழுத்த உடலை கொண்டவர்களுக்கு ஹைபர்சோம்னியா என்ற தூக்கமிகைப்பு இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிக எடை இருந்தால் உடலில் உள்ள மெட்டபாலிச வீதம் குறைத்து விடும். இதனால் ஆக்கத்திறனும் குறைந்து விடும். இதன் விளைவு அதிகப்படியான பகல்நேர தூக்கம் ஏற்படும்.

செல்லப்பிராணிகள்

செல்லப்பிராணிகள்

பல பேர் படுக்கையில் செல்லப்பிராணிகளை படுக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் பிராணிகள் நம்முடன் படுக்கையில் படுக்கும் போது நமக்கு தூக்கம் வருவது கடினமாக இருக்கும் என்று சான்றுகள் கூறுகின்றன. அதேபோல் மயோ கிளினிக் ஸ்லீப் டிஸ்ஆர்டர் மையம் நடத்திய சர்வேயின் படி, மிருகங்கள் தூக்கத்தை கெடுக்கின்றன என்று மிருகங்களுடன் படுக்கும் 53% மக்கள் தெரிவுத்துள்ளனர்.

மதுபானங்கள்

மதுபானங்கள்

மதுபானம் பருகுவது தூக்கம் இழப்புக்கு காரணம் என்று சொல்வது நம்மை வியப்புக்குள் ஆழ்த்தலாம். மது நம் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். முதலில் போதையை தந்தாலும், சில மணி நேரங்கள் பிறகு இரத்தத்தில் உள்ள அல்கஹால் அளவு குறைந்தவுடன், தூக்கம் களைந்து விடும்.ஒரு கோப்பை வைன் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்றால், படுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் குடிப்பதை நிறுத்துங்கள்.

ஜி.இ.ஆர்.டி

ஜி.இ.ஆர்.டி

ஜி.இ.ஆர்.டி(gastro esophageal reflux disorder) உள்ளவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் படுக்கையில் படுக்கும் போது, உடம்பில் உள்ள அமிலம் ஈசோஃபேகஸ் நுழையும். இதனால் இதயத்தில் எரிச்சல் ஏற்பட்டு வலியும் எடுக்கும். சில பேர் தலையனைகளுக்கு நடுவில் படுத்து உறங்க முயற்சிப்பர்.

மருந்துகள்

மருந்துகள்

உங்கள் தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உங்கள் மருந்துப் பெட்டியிலேயே உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் சந்தேகப்படுவதில்லை. ஆஸ்துமாவிற்காக பயன்படுத்தும் ஊக்க மருந்து மற்றும் அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக பயன்படுத்தும் பீட்டா-ப்ளாக்கர்ஸ்(beta-blockers) போன்ற மருந்துகள் இரவில் விழித்திருக்கச் செய்யும்.

வலி

வலி

உடம்பில் எந்த ஒரு வலி இருந்தாலும் அது தூக்கத்தை கெடுக்கும். தலைவலி, முதுகு வலி, கீல்வாதம், தசை வலி மற்றும் மாதவிடாயினால் ஏற்படும் வலி போன்றவைகள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும். வலி அதிகமாக இருந்தால் தான் தூக்கம் கெடும் என்பதில்லை.

தூக்க பிரச்சனை

தூக்க பிரச்சனை

உங்கள் வாழ்க்கை துணைக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருந்தாலோ அல்லது உங்களை மிதிக்கும் பழக்கம் இருந்தாலோ, உங்கள் இருவரின் தூக்கமும் கெட்டுப்போகும்.

படுக்கையறையின் அமைப்பு

படுக்கையறையின் அமைப்பு

உங்கள் படுக்கையறை அதிக வெப்பமாக அல்லது அதிக குளிராக இருக்கிறதா? அல்லது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வர்ணம், வெளிச்சம் வராமல் தடுக்கிறதா? இதனை போன்ற பல அமைப்பின் காரணமாக உங்கள் தூக்கம் கெடும்.

பதற்றம் மற்றும் மன அழுத்தம்

பதற்றம் மற்றும் மன அழுத்தம்

பல பேருக்குபதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் தூங்குவதில் பிரச்சனை ஏற்படும். தூக்கம் கெட்டுப் போவதால் இந்த பதற்றமும் அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டு காரணங்களால் தூக்கம் கெடுகிறது என்றால் இந்த மன ரீதியான பிரச்னைக்கு முதலில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

குட்டித் தூக்கம்

குட்டித் தூக்கம்

பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போட்டால் இரவு நேரத்தில் தூங்குவதில் சிரமம் ஏற்படும். குட்டித் தூக்கம் போட வேண்டுமென்றால் மதியம் 3 மணிக்கு முன் அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்கு மேல் தூங்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lack of sleep, know the reasons

Whilst many suffer conditions like insomnia, resulting in lack of sleep for nights together, there are others who suffer the other extreme condition – excessive sleepiness.
Desktop Bottom Promotion