For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன அழுத்தத்தை குறைப்பதற்கு நொறுக்குத்தீனி சிறந்த வழி தானா?

By Ashok CR
|

இன்று பெருகி வரும் நவீன உலகத்தில் நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறுகின்றோம். இதனால் நமது உடல் வலிமை குறைந்து பல நோய்கள் வரும் அபாயம் உள்ளது. ஆகவே, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மனவலிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது எல்லோர் வாழ்விலும் மன அழுத்தம் என்பது அவர்களது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. மனஅழுத்தம் ஒரு நோயாகவே மாறி மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரச்சனைகளை உருவாக்குகின்றது. இந்த நோய்க்கு காரணமாக இருப்பது அதிக வேலைப்பளு, ஒழுங்கற்ற வாழ்க்கைமுறை மற்றும் ஊட்டச்சத்து இல்லா உணவு பழக்கவழக்கங்கள் தான். இதுவே அதிக மன அழுத்தம், மன மற்றும் உடல் வலுக்குறைகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறாக, மன அழுத்தம் ஒருவரது வாழ்வில் பெரிதான பிரச்சனையாக மாறி வருகின்றது. அதனால் இதனை தவிர்த்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

Is Snacking The Best Way To Curb Stress?

மனஅழுத்தம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் நொறுக்கு தீனி. நீங்கள் டென்சனாகவோ சோகமாகவோ இருக்கும் போது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்க ஏதாவது சாப்பிட வேண்டும். உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி நொறுக்கு தீனி சாப்பிடுவது தான். குறிப்பாக, இனிப்பு வகைகள் மிகுந்த பலனை அளிக்கும். இதனை சிலர் நம்ப மறுப்பார்கள். ஆனால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நொறுக்குத்தீனி உங்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

ஊக்கிகள்

நாம் அதிக டென்சனாகவோ, வேலைப்பளு அதிகமாக இருந்தாலோ, கலக்கம் இருந்தாலோ நமது உடல் சில மனஅழுத்தம் உண்டாக்கும் ஊக்கிகளை உற்பத்தி செய்யும். இந்த ஊக்கிகளின் காரணமாக நமது உடலில் மனஅழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் நமது உடல் மிகவும் தளர்வடைந்து சக்தியின்றி மாறிவிடும். இந்த சமயங்களில், இனிப்பு நொறுக்குத் தீனி நமது மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருக்கும். இனிப்பு நொறுக்கு தீனிகள் மனஅழுத்தம் தொடர்பான ஊக்கிகளை குறைக்கச்செய்யும். குறைவான ஊக்கிகள் உற்பத்தியினால் மனஅழுத்தம் குறையக்கக்கூடும்.

சுகாதாரம்

நொறுக்குத் தீனி என்பது மனஅழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழிமட்டும் அல்லாது மிகவும் சுகாதாரமான வழியாகும். ஆம், நீங்கள் மனஅழுத்தத்தின் போது உட்கொள்ளும் உணவு சுகாதாரமாக இருந்தால் தான் நன்மையை அளிக்கும். ஊட்டச்சத்து உணவுகளான பழங்கள், பெர்ரீஸ், டார்க் சாக்லேட், பால் பொருட்கள் போன்றவை மனஅழுத்தத்தை குறைக்க உதவும். மனஅழுத்தம் தொடர்பான ஒழுங்கின்மையையும் சரிசெய்யும்.

அமைதியாக்குதல்

நொறுக்குத் தீனி மனஅழுத்தத்தை குறைக்கும் வழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாது நமது மூளையையும் உடலையும் அமைதிப்படுத்துக்கின்றது. உங்கள் மனதை அமைதிப்படுத்துவது மற்றும் தணிப்பது என்பது மிகவும் அவசியமானதாகும். எதிர்பாராமல், மனஅழுத்தத்தின் போது உங்கள் மனதிற்கு ஓய்வு கிடைப்பது இல்லை. அதனால், நொறுக்கு தீனி உங்கள் மனதை எளிதாக்கும்.

மெட்டபாளிசத்தை மேம்படுத்துதல்

ஊட்டச்சத்து உள்ள உணவை நொறுக்கு தீனியாக உட்கொண்டால், மனஅழுத்த ஊக்கிகளால் குறையும் மெட்டபாளிசத்தை மேம்படுத்த உதவும். ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளுவதால் நமது உடல் பழைய நிலையை அடைவதோடு பழுதடைந்துள்ள நிலையில் இருந்து நமது உடலை மீட்கச்செய்யும். மேலும் இவ்வகை உணவுகள் நமது உடலில் உள்ள ஊட்டச்சத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கும் சக்தியைத் தரும். அதனால், மனஅழுத்த நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது மிகவும் நன்று.

மனநிலை மாற்றங்கள்

கொடிய மனநிலைக்கு மனஅழுத்தமே காரணமாகும். இது ஒருவரை நிலைகுலைய வைத்து கவலையில் ஆழ்த்தும். இந்த சமயங்களில் டார்க் சாக்லேட் போன்றவை மனநிலையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். மனஅழுத்தம் தொடர்புடைய ஊக்கிகளை குறைத்து நல்ல மனநிலைக்கு கொண்டு வரும். நீங்கள் இந்த மனநிலை மாற்ற பொருட்களை கவலையாக இருக்கும் போது உபயோகிக்கலாம். இவ்வகை உணவினால் மனநில அளவுகள் மாறுபட்டு மனஅழுத்தத்தை குறைக்கும். இதனால், மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் இந்த நொறுக்குத் தீனி சிறந்த முறையாகும்.

மேற்கூறிய இவை அனைத்தும் நொறுக்குத் தீனி தான் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு சிறந்த வழியாக இருக்கின்றது என்பதை கூறுகின்றது. மனஅழுத்தத்தை குறைக்கும் வேறு சில வழிகள் : புத்தகம் படிப்பது, தூங்குவது, பாட்டு கேட்பது, சுற்றுலா செல்லுவது போன்றவை ஆகும். மற்றவரிடம் பகிர்தல் அல்லது பேசுதல் போன்றவையும் மனஅழுத்தத்தை குறைக்கும்.

இந்த டிப்ஸ் அனைத்தும் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் என்று நம்புகின்றோம். ஊட்டச்சத்து நிறைந்த நொறுக்கு தீனி உங்களுக்கு கண்டிப்பாக உதவி புரியும்.

English summary

Is Snacking The Best Way To Curb Stress?

Snacking is supposedly one of the best ways to curb stress. Especially, sweet snacks are said to be very effective. Though some people do not believe this fact, it is proven. Some such reasons that show that snacking is best methods to curb stress are discussed below.
Story first published: Saturday, December 14, 2013, 18:32 [IST]
Desktop Bottom Promotion