For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

By Maha
|

தூக்கம் என்பது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் உள்ள அழுத்தம் மற்றும் இறுக்கம் குறையத் தூக்கம் உதவுகிறது. பகலில் உடல் வருத்தி உழைக்கும் போதும் .உடற்பயற்சி செய்யும் போதும் ஏற்படும் தசைக் கிழிவுகளை (muscle damage), நாம் தூங்கும் பொழுது உடல் தானே சரி செய்து கொள்கிறது.

நம்மை தூங்க வைப்பது எது என்று தெரியுமா? மூளையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் "மெலடோனின்" என்னும் சுரப்பி தான். இந்த சுரப்பியில் இருந்து வரும் நீர்மமானது இரத்தத்தில் கலந்து, உடலின் வெப்பத்தையும் விழிப்புவுணர்வையும் குறைப்பதனால் நமக்கு தூக்கம் வருகிறது. வெயில் மற்றும் வெளிச்சம் இந்த சுரப்பியின் தயாரிப்பைத் தடுப்பதனாலேயே பகலில் நாம் தூங்குவது குறைவாக உள்ளது. எனினும் நம்மில் சிலர் வெயிலோ, மழையோ, புயலோ, இடியோ, எந்த நேரத்தில் வந்தாலும் தூங்கத் தயாராக இருப்போம், அது நமது சிறப்பு அப்படித்தானே?

உங்களுக்கு தெரியுமா உடலில் ஒரு கடிகாரம் இருக்கிறது, அது 24 மணி நேரமும் நமது உடலில் ஒவ்வொரு வேலைகளையும் சுரப்பிகளின் மூலமாக செயல்படுத்தும். சீனா மக்கள் இதனை 2 மணி காலவரையாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு 2 மணி நேரத்திலும், ஒவ்வொரு உறுப்பு சுத்திகரிக்கப்பட்டு ,பின்னர் செயல்படுத்தப்படுகிறது. தூக்கம் கெடுவதினாலும், பகலில் தூங்குவதினாலும் இந்த சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. சரி, இப்பொழுது எப்படி தூக்கத்தை சரிசெய்வது என்றும், எப்படி நன்றாக தூங்குவது என்பதையும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Restore Your Sleep Cycle | நடுவுல கொஞ்சம் தூக்கத்தைக் காணோம்!!!

Sleep is important, as it actually helps the body to cope with stress. The body prepares for sleep at night by secreting the hormone melatonin into the bloodstream, which causes the body to experience a decrease in temperature and alertness. However, just a few steps can help you to restore your sleep cycle effectively.
Desktop Bottom Promotion