உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Published: Saturday, August 24, 2013, 6:07 [IST]
 

தாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.

அவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம். பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது, கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா!!!

மன அழுத்தத்தை குறைக்கிறது

உடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்

உடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.

நிம்மதியான தூக்கம் வர உதவுகிறது

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

இதய ஆரோக்கியம்

உடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

சரிவிகித ஹார்மோன்கள்

பெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.

இடுப்பு தசைகள் வலுப்பெறும்

உடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.

அழகு சேர்க்கும்

உடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.

English summary

How Physical Intimacy Heals Your Body

Sex(physical intimacy) is not just about pleasure and getting close to your partner, it is also has certain health benefits that we have mentioned here.
Write Comments

Please read our comments policy before posting

Subscribe Newsletter
Boldsky இ-ஸ்டோர்