For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயரமாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

By Maha
|

இந்த உலகில் குறை இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. நிச்சயம் அனைவருக்கும் ஒருசில குறைகள் இருக்கும். அந்த வகையில் சிலருக்கு உயரக் குறைபாடு இருக்கும். இவ்வாறு கடவுள் விதித்த உயரத்தை மாற்றுவது சற்று கடினம் என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் உயரக் குறைபாடு உள்ள மக்கள், தங்கள் உயரத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமென்று அறிய ஆவலோடு இருக்கிறார்கள். உயரத்தை அதிகரிக்க எத்தனையோ பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இயற்கை முறையையே அனைவரும் விரும்புகின்றனர்.

உயரம் குறைவா இருக்கீங்களா? கவலைய விடுங்க....

பெரும்பாலும் உயரக் குறைபாடு ஏற்படுவதற்கு ஜீன்கள் ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை ஜீன்களில் வளர்ச்சியை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று இருந்தால், நிச்சயம் உயரமாகலாம். இல்லாவிட்டால், முடியாது. மேலும் உயரத்தை அதிகரிக்க பல உணவுகள், உடற்பயிற்சிகள் உதவியாக உள்ளன.

அதிலும் 21 வயதிற்குட்டவர்கள், இத்தகைய உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் எளிதில் உயரமாகலாம். ஏனெனில் 21 வயதிற்கு மேல், உடலின் வளர்ச்சியானது நின்றுவிடும். ஆனால் ஒருவேளை அதிர்ஷ்டம் இருந்தால், சரியான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சியை காணலாம். சரி, இப்போது இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

உயரத்தை அதிகரிக்க வேண்மெனில், தினமும் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளில் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

பால்

பால்

பாலில் உள்ள கால்சியம், வைட்டமின் டி மற்றும புரோட்டீன் ஆகிய மூன்று சத்துக்களும், உடலின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவை. எனவே பாலை தினமும் தவறாமல் 2-3 டம்ளர் குடித்து வர வேண்டும்.

தொங்குதல்

தொங்குதல்

கம்பியை பிடித்துக் கொண்டு தொங்குவதன் மூலம் உயரத்தை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இளம் வயதில் அதிகம் செய்து வந்தால், தண்டுவடமானது நன்கு வளர்ச்சியடையும். இது உயரமாவதற்கு உதவியாக இருக்கும்.

முட்டை

முட்டை

முட்டையிலும் பாலில் நிறைந்துள்ள சத்துக்களான கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்களுடன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் நிறைந்துள்ளது. எனவே உயரமாக வளர ஆசைப்பட்டால், தினமும் பாலுடன், வேக வைத்த முட்டையையும் சாப்பிட வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

புஜங்காசனம்

புஜங்காசனம்

தினமும் புஜங்காசனத்தை செய்து வருவதன் மூலமும், உயரமாகலாம். அதற்கு தடையில் குப்புற படுத்து, இரண்டு கைகளையும் தரையில் மார்ப்புக்கு பக்கவாட்டில் பதித்து, முதுகை மேலே தூக்க வேண்டும். இதனால், உடலின் மேல் பகுதியில் உள்ள தசைகளானது மேல் நோக்கி நீண்டு, உயரமாவதற்கு உதவி புரியும்.

இறைச்சி

இறைச்சி

இறைச்சிகளான சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம், தசைகள் வளர்ச்சியடையும். ஏனெனில் இதில் தசைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீனானது அதிக அளவில் நிறைந்துள்ளது.

நேராக எழுதல்

நேராக எழுதல்

படத்தில் காட்டியவாறு, நேராக நின்று கொண்டு, இரண்டு குதிகால்களை மேலே தூக்கி (பாதவிரல்களால் நின்று), இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி, முடிந்த அளவில் கைகளை நீட்ட வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து தசைகளும் நீண்டு, உயரமாக உதவியாக இருக்கும்.

சோயா பொருட்கள்

சோயா பொருட்கள்

சைவ உணவாளர்களுக்கு, ஒரு சிறந்த புரோட்டீன் உணவு என்றால் அது சோயா பொருட்கள் தான். எனவே சோயா பால், டோஃபு போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து, தசைகளும் வளர்ச்சியடையும்.

காலை உதைத்தல்

காலை உதைத்தல்

கராத்தே பயிற்சியில் செய்யப்படும் ஒரு முறை தான் காலை உதைத்தல். இதற்கு படத்தில் காட்டியவாறு நின்று, ஒரு காலை மட்டும் மேல் நோக்கி உதைக்க வேண்டும். இது போன்று மற்றொரு காலையும் செய்ய வேண்டும். இந்த முறையை தினமும் குறைந்தது 10 முறை செய்து வந்தால், கால்கள் வளர்ச்சியடைய உதவும்.

கோரல் கால்சியம்

கோரல் கால்சியம்

கடல் பவளப் பாசிகளில் இருந்து செய்யப்படுவது தான் கோரல் கால்சியம். அந்த கால்சியத்தை சாப்பிடுவதன் மூலம், எலும்புகள் வலுவுடன் இருப்பதோடு, நன்கு வளர்ச்சியடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Increase Your Height Naturally?

If you want to know how to increase your height before 21 years, then it is easier. After 21, growth is usually stunted. But there is no harm in eating the foods to increase height. A combination of the right diet and exercises will increase your height naturally. Here are some tips that entail how to increase your height without any cosmetic procedures.
Desktop Bottom Promotion