For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான வழியில் பாலை சாப்பிட சில டிப்ஸ்.....

By Maha
|

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அன்றாடம் காலையில் எழுந்ததும், முதலில் தண்ணீர் குடிக்கிறோமோ இல்லையோ பாலை, டீ அல்லது காபி போட்டு குடிக்காமல் இருக்கமாட்டோம். அந்த அளவில் பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. குறிப்பாக பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்று.

மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள். அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும்.

ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதில் பிடித்த முறையில் செய்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

வெதுவெதுப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தும். ஆகவே பாலை காய்ச்சி குளிர வைத்து குடித்தால், அது அசிடிட்டியை போக்கவல்லது.

பால் மற்றும் புரோட்டீன் பவுடர்

பால் மற்றும் புரோட்டீன் பவுடர்

புசில நேரங்களில் சாதாரண பாலில் போதிய புரோட்டீன் சத்துக்கள் இருக்காது. இவ்வாறு உடலுக்கு போதிய புரோட்டீன் கிடைக்காவிட்டால், உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே அப்போது பாலுடன் சிறிது புரோட்டீன் பவுடரை சேர்த்து குடிக்கலாம்.

மில்க் ஷேக்

மில்க் ஷேக்

பாலை குடிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்றவற்றால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது. இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்களும் சேர்ந்து உடலுக்கு கிடைக்கும்.

தயிர்

தயிர்

பாலாக குடிக்க விரும்பாதவர்கள், பாலை தயிர் போன்று செய்து குடிக்கலாம். அதற்கு பாலில் சிறு துளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து, 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகிவிடும். இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைக்கும்.

பால் மற்றும் ஆரோக்கிய பால் பொடிகள்

பால் மற்றும் ஆரோக்கிய பால் பொடிகள்

குழந்தைகளுக்கு பால் வாசனை பிடிக்காவிட்டால், அப்போது பாலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய பால் பொடிகளை சேர்த்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

ஸ்மூத்தியும், மில்க் ஷேக் போன்றது தான். ஆனால் ஸ்மூத்தி சற்று கெட்டியாக இருக்கும்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

நீரிழிவு நோயாளிகள் அல்லது எடையை குறைக்க விரும்புபவர்கள், பாலில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால், பால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

கோல்டு காபி

கோல்டு காபி

மதிய வேளையில் உடல் மிகவும் சூடாக இருக்குமாறு உணரும் போது கோல்டு காபி குடிக்கலாம். அந்த காபி செய்ய வேண்டுமெனில், குளிர்ந்த பாலில், காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டும்.

ஹாட் சாக்லெட்

ஹாட் சாக்லெட்

மாலை வேளை மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், அப்போது ஹாட் சாக்லெட் சாப்பிடலாம். இதற்கு சூடான பாலில் சிறிது கொக்கோ பவுடரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையில் பாலை குடித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும்.

பால் மற்றும் குங்குமப்பூ

பால் மற்றும் குங்குமப்பூ

அழகாகவும், பொலிவோடும் ஆக வேண்டுமெனில், பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் பாலின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, சருமமும் அழகாக மின்னும்.

பால் மற்றும் முட்டை

பால் மற்றும் முட்டை

உடலை அழகாக வைத்திருக்க, ஜிம் செல்பவர்களுக்கு தேவையான சக்தியை அளிக்கும் வகையில் பாலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலந்து, ஒரே கல்ப் அடிக்க வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் எளிதில், இந்த முறையின் மூலம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Ways To Have Milk | ஆரோக்கியமான வழியில் பாலை சாப்பிட சில டிப்ஸ்.....

Milk is one of the most nutritious foods ever. It is protein rich and also contains lots of calcium. If you are picky eater, then here are some very easy and healthy ways to have milk.
Desktop Bottom Promotion