For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

By Maha
|

இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான்.

உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகாலையில் எழுவது

அதிகாலையில் எழுவது

தினமானது நன்கு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தண்ணீர் குடிப்பது

தண்ணீர் குடிப்பது

குழந்தைகளைத் தவிர, மற்ற அனைவருக்கும் 6 முதல் 8 மணிநேர தூக்கம் மட்டும் போதுமானது. ஆனால் அதை விட்டு, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு, அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. ஏனெனில் ஆரோக்கியமான பழக்கங்களில் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதும் ஒன்று.

யோகா

யோகா

உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் உடல் எடை குறைவதோடு, மனமானது ரிலாஸ் அடைந்து, உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

உடலில் உள்ள கழிவுகள் காலையிலேயே வெளியேறாவிட்டால், பின் அந்த நாளானது அசௌகரியமானதாக இருக்கும். எனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதுவும் காலையில் செய்யும் ஆரோக்கிய பழக்கங்களில் ஒன்று.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அதிலும் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரெட்மில் எனப்படும் ஜாக்கிங் செய்யும் இயந்திரத்தில் சிறிது நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.

குளிப்பது

குளிப்பது

எப்போதும் காலையில் எழுந்ததும் குளித்துவிட வேண்டும். இதனால் உடலில் உள்ள சோர்வு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். அதைவிட்டு, தாமதமாக குளித்தால், உடலில் உள்ள அழுக்குகள் நீங்குமே தவிர, புத்துணர்ச்சி கிடைக்காது.

ஜூஸ்

ஜூஸ்

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ போன்றவற்றை குடிப்பதற்கு பதிலாக, பழத்தை வைத்து ஜூஸ் போட்டு குளித்தால், உடலுக்கு நல்லது. அதைவிட்டு காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பொருளானது மூளையை தூண்டி, உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காலை உணவு

காலை உணவு

ஒரு நாளைக்கு காலை உணவு தான் மிகவும் முக்கியம். ஏனெனில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதால், காலையில் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டாலும் எந்த ஒரு தவறும் இல்லை. மேலும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே காலையில் ஓட்ஸ், சாண்ட்விச், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடலாம். இதுவும் ஒரு காலையில் செய்யக்கூடிய ஆரோக்கியமான பழக்கம் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Morning Habits To Cultivate

All things you do at the beginning of the day are considered as your morning habits. If you wake up late and sleepy, then it is an unhealthy morning habit that you have. Also, everything you do after you are awake till you leave for work falls under the category of your morning habits. Here is a list of healthy morning habits that everyone should try to cultivate in their lives.
Desktop Bottom Promotion