Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்!!!

Posted by:
Updated: Tuesday, February 19, 2013, 10:49 [IST]

இன்றைய காலத்தில் இருக்கும் பிரச்சனைகளில் கூந்தல் உதிர்தலும் ஒன்று. அனைவருக்குமே நல்ல அடர்த்தியான, நீளமான, பட்டுப் போன்ற கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போது அத்தகைய கூந்தலை பெறுவது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு காரணம், போதிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாததும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், அதிகப்படியான மனஅழுத்தமும் தான் காரணம். இத்தகைய பிரச்சனைகள் இருப்பதால், அழகில் குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக கூந்தல் மற்றும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் இந்த உலகில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இல்லாமல் இல்லை. அதிலும் கூந்தல் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அதில் புரோட்டீன் உணவுகள் முக்கியமானவை. எனவே அத்தகைய புரோட்டீன் உணவுகளை உண்டால், புரோட்டினால் உருவான கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் அந்த உணவுகளில் உள்ள மற்ற சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஜிங்க் மற்றும் தேவையான ஃபேட்டி ஆசிட்களும் உடலுக்கு கிடைத்து, கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இப்போது அத்தகைய சத்துக்கள் நிறைந்த மற்றும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

மீன்

மீன் அதிகம் சாப்பிட்டாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். எப்படியெனில் மீனில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், கூந்தல் வறட்சியின்றி காணப்படும். அதிலும் சால்மன், ஹெர்ரிங் போன்றவை மிகவும் சிறந்தது.

நட்ஸ்

நட்ஸில் பாதாம் மற்றும் வால் நட் இரண்டிலும் போதுமான அளவில் ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளதால், முடி செல்கள் பாதிப்படையாமல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். அதிலும் வால் நட்ஸில் காப்பர் உள்ளதால், கூந்தலுக்கு வேண்டிய கருமை நிறம் கிடைத்து, கூந்தலும் பட்டுப் போன்று மின்னும்.

கடல் சிப்பி

கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. பொதுவாக கூந்தல் உதிர்தல் ஜிங்க் குறைபாட்டினால் தான் ஏற்படுகிறது. எனவே கடல் சிப்பி, முட்டை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

உருளைக்கிழங்கு

வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளான உருளைக்கிழங்கு, கேரட், மாம்பழம் மற்றும் பூசணிக்காய் போன்றவை கூந்தலுக்கு மிகவும் நல்லது. இந்த உணவுகளை சாப்பிட்டால், தலையில் ஸ்கால்ப்பில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள், தலைக்கு வேண்டிய எண்ணெயை சுரந்து, தலையை வறட்சியடையாமல் தடுக்கும்.

முட்டை

அனைவருக்குமே முட்டையில் தலை முதல் கால் வரை வேண்டிய சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளது என்பது தெரியும். எனவே இதனை தினமும் 1-2 சாப்பிட்டு வந்தால், கூந்தலுக்கு நல்லது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளான பசலைக் கீரை மற்றும் கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் மயிர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களான பீட்டா கரோட்டின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

சோயா பீன்ஸ் மற்றும் காராமணி

நிறைய பேர் வாயுத்தொல்லையின் காரணமாக இந்த பீன்ஸ்களை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால் இந்த பீன்ஸ்களில் கூந்தலை ஆரோக்கியமாகவும், வலுவோடும் வைத்துக் கொள்ளும் புரோட்டீன், இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் பயோடின் போன்றவை உள்ளது.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது என்று நிறைய மக்கள் இதனை அதிகம் சாப்பிட பயப்படுகின்றனர். ஆனால் நல்ல வலுவான மற்றும் நீளமான கூந்தல் வேண்டுமென்றால், இந்த உணவுகளை நிச்சயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் பொருட்களல் வைட்டமின் பி5, வைட்டமின் டி மற்றும் அதிகப்படியான கால்சியம் சத்துக்கள் உள்ளன.

பெர்ரிஸ்

பெர்ரிப் பழங்களில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இந்த சத்து கூந்தலின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கூந்தல் உதிர்தலைத் தடுத்து, கூந்தலை வலுவோடு வைத்துக் கொள்ளலாம்.

சிக்கன்

சிக்கனிலும் புரோட்டீன் மற்றும் ஜிங்க் சத்து அதிக அளவில் உள்ளது. ஆகவே அசைவ உணவுகளில் சிக்கனையும் அதிகம் சேர்த்து, நல்ல அழகான கூந்தலைப் பெறுங்கள்.

Story first published:  Monday, February 18, 2013, 11:16 [IST]
English summary
Everybody wants to have long and strong hair. To increase hair growth, we end up spending a good fortune on the chemical products but with no avail. In the meantime, it is important for us to know that hair is generally made up of proteins and in order to make our hair thick, long and strong, a protein diet is essential for helping it grow healthy. Here are some of the healthy foods that helps increase hair growth.
Subscribe Newsletter

Bold Talk