For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோதுமையை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

அனைவருக்கும் கோதுமை சாப்பிட்டால் நல்லது என்று தெரியும். ஆனால் அந்த கோதுமையில் என்ன நன்மை கிடைக்கும் என்று யாருக்குமே சரியாக தெரியாது. மேலும் மைதா சாப்பிடுவதை விட, கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பி, உண்மையில் அதில் என்ன உள்ளது என்று தெரியாமல் சாப்பிடுவார்கள்.

மேலும் தற்போது பெரும்பாலானோர் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைத் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அப்படி கண்மூடித்தனமாக சாப்பிடும் கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேலாவது அதன் நன்மையை புரிந்து கொண்டு சாப்பிடுங்கள். சரி, கோதுமையில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.

உடல் எடை குறையும்

உடல் எடை குறையும்

பெரும்பாலானோருக்கு கோதுமைப் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று தெரியும். இருப்பினும் உடல் எடையை குறைக்க நினைப்போர் மைதாவை தவிர்த்து, கோதுமையை சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமானத்தை சீராக வைக்கும்

செரிமானத்தை சீராக வைக்கும்

மைதாவை அதிகம் சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும். ஆனால் கோதுமையை சாப்பிட்டால், அது எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.

இதய நோய்

இதய நோய்

இதய நோய் உள்ளவர்கள், கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இதயம் வலிமையாக இருக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை தடுக்கும்

உங்களுக்கு தெரியுமா கோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் உள்ளதா? அப்படியானால் மைதா ரொட்டி சாப்பிடுவதை நிறுத்தி, கோதுமை ரொட்டியை சாப்பிடுங்கள். இது உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

தைராய்டு

தைராய்டு

தற்போது நிறைய மக்கள் தைராய்டினால் அவஸ்தைப்படுகின்றனர். அத்தகையவர்கள் கோதுமையை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள், கோதுமை உணவை அதிகம் சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குறிப்பிட்ட வைட்டமின்கள் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

எலும்பு அழற்சி

எலும்பு அழற்சி

எலும்பு அழற்சி உள்ளவர்கள் தினமும் டயட்டில் கோதுமை ரொட்டி அல்லது பிரட் சேர்த்து வந்தால், அது எலும்புகளில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும்.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள், இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமையை உணவில் சேர்த்து வருவது நல்லது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள பிரச்சனையை சரிசெய்து, மலச்சிக்கலில் இருந்து விடுதலைத் தரும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை

30 வயதிற்கு மேல் சிறுநீரக பிரச்சனைகள் ஆரம்பித்துவிடும். ஆகவே அத்தகைய பிரச்சனையில் இருந்து தள்ளி இருக்க வேண்டுமானால், தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இரத்த சோகை

இரத்த சோகை

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், கோதுமை உணவுப் பொருட்களை உணவில் சேர்த்து வாருங்கள். இது சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை.

புரோட்டீன் நிறைந்தவை

புரோட்டீன் நிறைந்தவை

கோதுமையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள், கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை பிரட் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Wheat

The health benefits of wheat are commonly unknown to many people. Even we blindly opt for wheat and do not know the real reasons as to why wheat is healthy. Therefore, Boldsky shares with you some of the reasons as to why wheat rotis and all other wheat products should be consumed.
Desktop Bottom Promotion