For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!!!

By Super
|

வால்நட்ஸ்(WALNUTS) எனப்படும் அக்ரூட் பருப்புகளில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் இருக்கிறது. வால்நட் பிற பருப்புகள் போலவே வளர்க்கப்பட்டாலும், இதில் எண்ணில் அடங்கா நன்மைகளை கொண்டுள்ளது. இத்தகைய வால்நட்ஸை நம் உணவு முறையில் தினமும் சேர்க்க வேண்டும்.

குறிப்பாக இந்த பருப்புகள் பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் பாலூட்டுவது போன்ற நேரங்களில் சிறப்பு அனுகூலங்களை கொடுக்கிறது. வால்நட்ஸ் உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்று அறியப்படுகின்றன. இது பண்டைய காலத்திலிருந்தே மிக அதிகமாக உணவு தயாரிப்பில் அதன் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயெதிர்ப்பு சக்தி

நோயெதிர்ப்பு சக்தி

உணவுக்கட்டுப்பாட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது. எவ்வித முயற்சி இல்லாமல் தினசரி உணவை சமப்படுத்த உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு, தினமும் 8-10 பருப்புகள் உண்பதன் மூலமாக வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்களையும் அதிக அளவில் பெறலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான முக்கிய காரணியாக இருக்கிறது.

இதயம்

இதயம்

வால்நட் உட்கொள்வதால், இதயம் வலிமை அடைகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த ஓட்ட அமைப்பில் சாதகமான மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் கொழுப்பை குறைப்பதால் கிடைக்கும் நன்மைகளான இளமை மற்றும் நோயற்ற இதயத்தை அடைய வழிவகுக்கிறது.

புரதச்சத்து

புரதச்சத்து

வால்நட்ஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைக்கு சமமான புரதங்களை உடலுக்கு வழங்குகிறது. இது, குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் நிறைந்த உணவுகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

இந்த பருப்பை ஒவ்வொரு நாளும் சாப்பிடுவதால் புற்றுநோயை தடுக்க முடியும். குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ள பெண்களுக்கு மிகவும் உதவுகிறது.

வலிமையான எலும்புகள்

வலிமையான எலும்புகள்

வால்நட்ஸ் பற்றிய மற்றொரு உடல் நன்மையானது, எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். நிறைய பெண்கள் 40 வயதில் சந்திக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்னும் பிரச்சனையை, வால்நட் பருப்புகளின் வழக்கமான பயன்பாட்டினால் நிச்சயம் தடுக்க முடியும்.

நினைவாற்றல்

நினைவாற்றல்

வால்நட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்யும். இந்த நலனுக்காக, இதனை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

தூக்கம்

தூக்கம்

வால்நட்ஸ், தூக்கமின்மை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி எதிர்கொள்ளும் அமைதியின்மையை குணப்படுத்துகிறது . இந்த அறிகுறி கர்ப்பிணி பெண்களுக்கு மத்தியில் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே வால்நட்ஸ்களை சாப்பிடுவதால், இந்த சிக்கலிலிருந்து விடுபடலாம். மேலும் அமைதியான தூக்கம் கண்டிப்பாக ஒரு மனஆற்றல் நிறைந்த மனநிலையை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Walnuts

Walnuts are one of those nuts that have innumerable benefits attached to it. It has special advantages for women especially those with special cases like pregnancy and lactation.
Desktop Bottom Promotion