For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

பொதுவாக வெண்ணெயில் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இப்படி கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் பெரியோர்கள் தான் சாப்பிடக்கூடாது. ஆனால் குழந்தைகள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதிலும் வேர்க்கடலை வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைகளுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் அதில் நிறைந்துள்ளன.

இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் உடல் பருமனால் அவஸ்தைப்படுவார்கள் என்று வேர்க்கடலை வெண்ணெயைக் கொடுக்காமல் இருப்பார்கள். அப்படி கொடுக்காமல் இருந்தால், அது அவர்களுக்கு வேண்டிய சத்துக்கள் தான் கிடைக்காமல் போய்விடும். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வித பயமும் இல்லாமல், வேர்க்கடலை வெண்ணெயை அவர்களது உணவில் சேர்க்கலாம்.

அப்படி என்ன தான் வேர்க்கடலை வெண்ணெயில் நன்மைகள் நிறைந்துள்ளது என்று பலர் கேட்கலாம். ஆகவே இப்போது குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்தாவது, இனிமேல் உங்கள் குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயைக் கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

வேர்க்கடலை வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்கலாம்.

எனர்ஜியை அதிகரிக்கும்

எனர்ஜியை அதிகரிக்கும்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிக அளவில் எனர்ஜியானது தேவைப்படும். அப்போது அவர்களுக்கு காலை வேளையில் பிரட்டில் வேர்க்கடலை வெண்ணெயை தடவி சாப்பிடக் கொடுத்தால், அவர்களுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்கும்.

பார்வைக் கோளாறு

பார்வைக் கோளாறு

இன்றைய காலத்தில் சிறுவயதிலேயே குழந்தைகள் பார்வை கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயை கொடுத்தால், அவர்களின் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.

வலுவான எலும்புகள்

வலுவான எலும்புகள்

வேர்க்கடலை வெண்ணெயில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுக்க, அவர்களது எலும்புகள் வலுவுடன் இருக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

ஞாபக சக்தியை அதிகரிக்கும்

குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் கொடுக்க வேண்டுமென்பதன் முக்கிய காரணம், குழந்தைகள் அதனை சாப்பிட்டால், அவர்களது ஞாபக சக்தி அதிகரிக்கும்.

பசியைத் தூண்டும்

பசியைத் தூண்டும்

தற்போதைய குழந்தைகள் சரியாக சாப்பிடுவதே இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் புலம்புவதுண்டு. அத்தகைய பெற்றோர்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது. அது என்னவென்றால், குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெயைக் கொடுத்தால், அவர்களது பசியுணர்வு அதிகரித்து, பின் நன்கு சாப்பிட ஆரம்பிப்பார்கள்.

உடல் எடையை அதிகரிக்கும்

உடல் எடையை அதிகரிக்கும்

உங்கள் குழந்தை எடை குறைவாக உள்ளார்களா? அப்படியானால், அவர்களுக்கு தினமும் உணவில் வேர்க்கடலை வெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நல்ல கொழுப்பால், அவர்களது உடல் எடை அதிகரிக்கும். இருப்பினும் அளவாக குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

வேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளின் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் கொண்டவை. எனவே குழந்தைகள் வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடாதெனில், வேர்க்கடலை வெண்ணெயை உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆர்வத்தை தூண்டும்

ஆர்வத்தை தூண்டும்

குழந்தைகளுக்கு காலை வேளையில் வேர்க்கடலை வெண்ணெயை சாப்பிடக் கொடுத்தால், அவர்கள் பள்ளி சென்றதும், படிப்பில் நன்கு ஆர்வத்தை செலுத்துவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Peanut Butter

peanut butter is a must treat as it will provide your child with natural energy which is good for them. Apart from being a source of energy for children it is also beneficial for them in other ways. Below are some of the health benefits of peanut butter which you must pay attention to.
Story first published: Friday, December 20, 2013, 18:59 [IST]
Desktop Bottom Promotion