For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருதாணி இலைகளில் உள்ள உடல்நல பயன்கள்!!!

By Super
|

மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மருதாணியை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் கைக்கு அலங்கரிக்க என்று தான் அனைத்து பெண்களும் ஒரே மாதிரி சொல்வார்கள். மருதாணியை பொதுவாக ஹென்னா அல்லது மெஹந்தி என்று நம் நாட்டில் அழைப்போம். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். பண்டிகை மற்றும் திருமண விழாக்களின் போது அதனை கொண்டு பெண்களின் கைகளில் அழகிய டிசைன்களை வரையலாம். மிகவும் புனிதமானதாகவும் சமயப்பற்றானதாகவும் கருதப்படும் மருதாணி பெண்களின் 7 ஸ்ரிங்காரத்தில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

மருதாணி பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அதனை தடவினால் பொருட்களை சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தில் மாற்ற கூடிய தன்மையை கொண்டுள்ளது. அதனால் சரும டிசைன் மற்றும் நரைத்த தலை முடியை கலரிங் செய்வதற்காகவும் இதனை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகின்றார். மருதாணியை கொண்டு பல அழகு வேலையில் ஈடுபடலாம். இது போக இதில் பல உடல்நல நன்மைகளும் அடங்கியுள்ளது.

மருதாணி இலைகள் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. அந்த இலைகளை பொடியாக்கி, அல்லது பேஸ்டாக்கி அல்லது இல்லை வடிவத்திலேயே பல காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி அது எதற்கு உபயோகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை

குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை

மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

தலை முடி காப்பான்

தலை முடி காப்பான்

அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை யங்கள் தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் அதனை பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் உங்கள் முடிகளை சரி செய்து மீண்டும் பொழிவை பெறச் செய்யும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான் - சீரான முறையில் மருதாணியை பயன்படுத்த வேண்டும்.

தீக்காயம்

தீக்காயம்

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். ஏற்கனவே சொன்னதை போல மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்டை நெத்தியில் தடவினால் தீவிரமான தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும். அதனை சீராக பயன்படுத்தினால் மைக்ரைன் பிரச்சனைக்கும் நிவாரணியாக விளங்கும். ஆஸ்பிரின் மாத்திரைக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது மருதாணி.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரல் பாதுகாப்பு

மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. மஞ்சள் காமாலை என்பது ஆபத்தான காய்ச்சலாகும். சில நேரம் அதற்கான சிகிச்சையும் சிக்கலாகி விடும். அதனால் மஞ்சள் காமாலையை குணப்படுத்த நல்ல ஆயுர்வேத மருந்தாக மருதாணியை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

காசநோய் எதிர்ப்பான்

காசநோய் எதிர்ப்பான்

TB என்று அழைக்கப்படும் காசநோயை குணப்படுத்த மருதாணி பெரிதும் உதவுகிறது. காசநோய்க்கு எதிராக மருதாணி இலைகள், பவுடர் மற்றும் பேஸ்ட் செயல்படும். இருப்பினும் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும்.

மருதாணியின் மற்ற நன்மைகள்

மருதாணியின் மற்ற நன்மைகள்

மருதாணியில் இன்னமும் கூட பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அதனை ஆன்டி-பாக்டீரியல் பேஸ்ட் அல்லது ஆன்டி-ஃபங்கல் பேஸ்ட்டாக பயன்படுகிறது. முடி வளர்ச்சிக்கும் இதனை பயன்படுத்தலாம். மருதாணியில் இனிமையான நறுமணமும் வீசும்.

மருதாணி இலைகளோடு, மருதாணி பட்டையும் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. சமயஞ்சார்ந்த காரணங்களை தவிர்த்து பயனுள்ள முக்கியமான ஆயுர்வேத செடியாக விளங்குகிறது மருதாணி. இச்செடியின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பயனை அளிக்கிறது. அதனால் மருதாணி என்பது கைகளுக்கு வர்ணம் சேர்க்க மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Henna Leaves

Henna is black or brown in color and has the property of coloring objects to red or brown where it is applied. Hence, it is used as a cosmetic for designing skin and coloring white or dull hair. Henna has a lot of cosmetic applications. Henna is also been found of having many health benefits.
Story first published: Friday, November 15, 2013, 19:52 [IST]
Desktop Bottom Promotion