For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

கூம்பு வடிவத்தில் உள்ள அத்திப் பழங்கள் அகண்ட, சப்பட்டையான அடிப்பாகத்துடன் உள்ளன. பழுத்தவுடன் மேல் பாகம் வளைந்து கழுத்து போல தோற்றமளிக்கிறது. ப்ரௌன், ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களிலும் பல அளவுகளிலும் உள்ளன. சுருக்கங்கள் நிறைந்த தோல் கொண்ட இந்தப் பழம் சீக்கிரம் அழுகிப்போகும் தன்மை உடையதால், பெரும்பாலும் காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது.

அத்திப் பூக்கள் பழத்தின் உள்ளேயே உருவாவதால் நம்மால் காண முடியாது. சிலர் இந்த பழத்தைப் பார்த்தாலே ஓடிவிடுவார்கள். ஆனால் இதில் உடல் ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், தாதுக்களும் அத்திப் பழத்தில் அதிகமாக உள்ளன. குறிப்பாக உலர் அத்திப்பழத்தில் இன்னும் நிறைய நன்மைகள் நிறைந்திருப்பதோடு, இன்னும் சுவையானதாக இருக்கும். எனவே இந்த பழத்தை அதிகம் உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். சரி, இப்போது அந்த அத்திப் பழத்தின் உடல்நல நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல்

மலச்சிக்கல்

காய்ந்த அல்லது புதிய அத்திப்பழங்கள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருக்கும் இதை உண்ணுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் சீராகிறது. ஒவ்வொரு முன்று கிராம் பழத்திலும் 5 கிராம் நார்சத்து இருப்பது இதன் சிறப்பம்சம்.

எடை குறைப்பு

எடை குறைப்பு

நார்ச்சத்து அதிகமிருக்கும் பழங்களையும், உணவுகளையும் உண்ணுதல் எடை குறைப்புக்கு மிகவும் உதவும். அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொண்ட பெண்கள் கலோரி அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க ஆரம்பித்தார்கள். அதே நேரத்தில் அவர்களின் பசியும் கட்டுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே நார்ச்சத்து அதிகமாக உள்ள அத்திப் பழம் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

கொழுப்புச்சத்தை குறைத்தல்

கொழுப்புச்சத்தை குறைத்தல்

நார்ச்சத்து அதிகமுள்ள அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த நார்ச்சத்து உள்ளது. இது ஜீரணத்தின் போது உடலின் உள்ளே உள்ள கொழுப்பை வெளியேற்றுகிறது. தினமும் அத்திப்பழம் சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.

கரோனரி இதய நோய்கள்

கரோனரி இதய நோய்கள்

அத்திப்பழத்தில் ஃபீனால் மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இயற்கையாகவே இதயத்திற்கு வலு சேர்த்து, இதய நோய்களை தவிர்க்க உதவும் சத்துக்களாகும்.

பெருங்குடல் புற்றுநோய்

பெருங்குடல் புற்றுநோய்

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி புற்றுநோயை, குறிப்பாக குடல் புற்றுநோயை தடுக்கிறது.

மாதவிடாய் நிறுத்த மார்பக புற்றுநோய்

மாதவிடாய் நிறுத்த மார்பக புற்றுநோய்

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோயை தடுக்கிறது. ஆய்வு ஒன்றில் 51,823 மாதவிடாய் நிறுத்தப் பெண்களை நார்ச்சத்து மிக்க பழங்களை உட்கொள்ள வைத்து, 8.3 ஆண்டுகள் கண்காணித்ததில் மார்பக புற்றுநோய் சதவீதம் 34 சதவீதம் குறைந்தது. அதே நேரத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் பெறாத, நார்ச்சத்து அதிகம் உண்ணும் பெண்களுக்கு 50% வரை மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு குறைந்தது. அதுமட்டுமின்றி ஆப்பிள், பேரிச்சை, பேரிக்காய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கண்டிப்பாக அதிக நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். அத்திப்பழ மரத்தின் இலைகளில் கூட நார்ச்சத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்த அத்திப்பழ இலைகளை உட்கொள்வதால், இன்சுலின் சுரப்பதை சீராக வைத்துக் கொள்ளலாம்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உப்பு வடிவத்தில் சோடியம் அதிகமாகவும், பொட்டாசியம் குறைவாகவும் உட்கொள்ளும் மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருகிறது. அத்திப் பழங்களில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. எனவே அத்திப் பழங்கள் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.

உடலியல் கோளாறுகள்

உடலியல் கோளாறுகள்

தாம்பத்தியம் சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்யவும் அத்திப்பழங்கள் உதவுகின்றன. அதிலும் 2-3 அத்திப்பழங்களை பாலில் முழு இரவும் ஊற வைத்து காலையில் உட்கொள்வது உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை கூடுவதற்கும் உதவி செய்யும்.

மூலநோய்

மூலநோய்

ஜீரணத்திற்கு அத்திப்பழங்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் அவற்றை உட்கொள்வது சிறப்பான ஜீரணத்திற்கு உதவி, மூலநோயில் இருந்து காக்கிறது.

சிறுநீரகம்

சிறுநீரகம்

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களோ, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையோ கொண்டவர்கள் அத்திப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Figs

Fig is naturally rich in health benefiting phyto-nutrients, anti-oxidants vitamins and minerals. Dried figs contains concentrated source of minerals and vitamins.
Story first published: Tuesday, September 10, 2013, 8:20 [IST]
Desktop Bottom Promotion