For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மல்லித் தூளை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Super
|

மேற்கு நாடுகளெல்லாம் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு நம் நாட்டில் எண்ண முடியாத பத்திரிக்கைகளும், செய்தித்தாள்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் "உடல்நல ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்புகள்" பற்றிய விஷயங்கள் இல்லாமல் இருப்பதில்லை. நம் நாட்டில் கிடைக்கும் பழமையான மூலிகையெல்லாம் சஞ்சீவியாக விளங்குகிறது. அவைகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கும். உதாரணத்திற்கு, மல்லி பொடியின் குணங்களை எடுத்துக் கொள்வோம். மல்லி பொடி அளிக்கும் உடல்நல பயன்கள் நம்மை பிரமிக்க வைக்கும். அதனை எப்படி அழைப்பது? இயற்கையின் வரப்பிரசாதம்? ஆம், சொல்லலாம். கடவுள் நம் மீது அருளை பொழிந்து, நமக்கு இந்த அழகான பூமியையும், அதில் இவ்வகை அழகான பொருட்களையும் தந்துள்ளார்.

நம் நாட்டில் விளையும் மற்ற மசாலாப் பொருட்களை போலவே, மல்லியும் வருடம் முழுவதும் கிடைக்கும் ஒரு மசாலா பொருளே. இந்த செடியின் உள்ள பழத்தை காய வைத்து மசாலா பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதனை பொடியாக்கியும் உபயோகிக்கலாம். அதிலுள்ள ஊட்டச்சத்து அட்டவணை இவ்வாறு கூறுகிறது - 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அதில் அடங்கியுள்ளது. அதனால் ஆரோக்கியமான மசாலா பொருட்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. உணவை தரம் பிரிக்கும் அமைப்பு ஊட்டச்சத்து வளமையாக உள்ள பொருளாக மல்லியை அறிவித்துள்ளது. குணப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளதால் மல்லி பொடிக்கு தனியாக ஒரு மவுசு இருந்து கொண்டு உள்ளது. ஐரோப்பியாவில் பல இடங்களில் இதனை "ஆன்டி-டயபெடிக்" செடி என்று கூட அழைக்கின்றனர். மருத்துவ குணங்களை கொண்டுள்ள மல்லி பொடியை பற்றி இன்னும் அறிந்து கொள்ள விரிவாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும்

சர்க்கரை நோய் என்பது உலகம் முழுவதும் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான் வியாதி தான். அது இன்றைய கால சூழலில் அதிகமாக காணப்படுகிறது. அதனை தடுத்து குணப்படுத்த நாம் கண்டிப்பாக ஒரு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். இதற்காக தான் இயற்கை அன்னை நமக்கு மல்லியை ஒரு தீர்வாக அளித்துள்ளார். மல்லி பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்சிகள் கூறுகிறது. மல்லிப்பொடியில் உள்ள குணப்படுத்தும் குணமே அதற்கு காரணமாக விளங்குகிறது. மல்லி பொடி நமக்கு அளிக்கும் விசேஷ மருத்துவ குணம் தானே இது?

சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும்

சால்மோனெல்லா என்ற நுண்ணுயிரை அடக்கும்

மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். உங்கள் உணவுகளில் மல்லி போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

அடர்த்தியான மூலிகை

அடர்த்தியான மூலிகை

மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. அதிலுள்ள ஆவியாகும் எண்ணெய்யில் லினலூல், பார்நியோல், கார்வோன், எபிஜெனின், சூடம் என பல பைடோந்யூட்ரியெண்ட்கள் உள்ளது.

பருக்களுக்கு நிவாரணி

பருக்களுக்கு நிவாரணி

உடல்நல பலன்களை தவிர மல்லி பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. இளைஞர்களுக்கு பருக்கள் என்றாலே பெரிய பயம். மல்லி பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

மல்லி பொடியில் உள்ள மற்றோடு மிகப்பெரிய மருத்துவ குணம் என்ன தெரியுமா? அது கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தொற்று ஏற்படுத்தும் வியாதிகளின் மீது அதன் தாக்கம்

தொற்று ஏற்படுத்தும் வியாதிகளின் மீது அதன் தாக்கம்

பெரிய அம்மை போன்ற பல வியாதிகள் தொற்றுக்களை விளைவிக்கும். மேலும் அது சுலபமாக பரவக் கூடிய வியாதிகளாகும். மல்லியில் உள்ள மருத்துவ குணங்கள் இந்த கிருமிகளுக்கு எதிராக போராடி அதனை அழிக்கும் ஆற்றலை ஓரளவுக்கு பெற்றுள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும் கருவி

மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்கும் கருவி

ஆரோக்கியமான மசாலாக்களில் ஆரோக்கியமான குணங்கள் அடங்கியிருக்கும். மல்லியில் அப்படி பட்ட ஒரு குணம் தான் மாதவிடாயை சீராக்குவது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லி பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள்.

இயக்க உறுப்பு எதிராக போராடும்

இயக்க உறுப்பு எதிராக போராடும்

மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Coriander Powder

Coriander powder is placed high on reputation because of the healing properties of the spice. In fact, it is referred to as an “anti-diabetic” plant in several parts of Europe. To know more about the health benefits coriander powder offer, read on.
Desktop Bottom Promotion