For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாடையை திடமாக்க உதவும் சில உடற்பயிற்சிகள்!!!

By Ashok CR
|

பொதுவாக உடற்பயிற்சி என்றாலே ஆண்கள் ஜிம்மிற்கு செல்லுதல் அல்லது நடை கொடுத்தல் போன்ற உடல் ரீதியான பயிற்சிகளிலேயே கவனம் செலுத்துவார்கள். தாடையை திடமாக்குவதும் கூட ஒரு முக்கியமான உடற்பயிற்சி என்பது பலருக்கு தெரிவதில்லை. முகம் சம்பந்தப்பட்ட எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் தாடை மற்றும் தாடை எலும்பு திடமாகி சருமம் பொலிவடையும். தாடை மற்றும் இதர முக சம்பந்தப்பட்ட உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. இவைகளை கடைப்பிடிப்பதால் வயதாவதை தடுக்கும் க்ரீம் போன்றவைகளை தவிர்க்கலாம். உங்கள் முகத்தை ஆரோக்கியமாக வைத்து சருமத்தை மின்னிட வைக்கும்.

Chin Firming Exercises: Fitness Tips

தாடை திடமானதாக இருந்தால் பார்ப்பதற்கு அழகாகவும் ஆரோக்கியமாகவும் காட்சி அளிப்பீர்கள். எந்த ஒரு நபரை முதன் முறையாக பார்க்கும் போது முதலில் அவருடைய முகம் தான் நாம் கண்ணில் படும். அவரை பற்றி ஒரு அபிப்பராயம் பெறுவதற்கும் அவரின் முகம் தான் முக்கிய காரணியாக விளங்கும். அதனால் உங்கள் முகம் ஆரோக்கியமாக இருந்தால் உங்களை பற்றி நல்ல அபிப்பராயம் ஏற்பட்டு உங்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகும். உங்கள் நாடி தொங்கி போய் இருந்தாலோ அல்லது அதிக தசையுடன் இருந்தாலோ அது உங்களுடைய ஆரோக்கியமற்ற வாழ்வு முறையை தெளிவாக எடுத்துக்காட்டி விடும்.

தாடையை திடமாக்கும் முக்கால்வாசி உடற்பயிற்சிகள் சுலபமானவையே. அதனை செய்வதற்கு உங்கள் கைகள் மட்டுமே போதுமானது. இவ்வகை உடற்பயிற்சிகளை உங்களின் தினசரி உடற்பயிற்சிகளுக்கு முன்போ பின்போ அல்லது ஓட்டப்பயிற்சிக்கு முன்போ பின்போ செய்யலாம். உங்கள் முகத்தில் நேர்மறையான விளைவுகளை காண இவ்வகை உடற்பயிற்சிகளை சீரான முறையில் செய்ய வேண்டும். மேலும் இது உங்கள் முகத்தில் உள்ள தசைகளுக்கு மசாஜாகவும் அமையும். அதனால் உங்கள் சருமம் பொலிவடைந்து பளபளப்புடன் உயிரோட்டத்துடன் இருக்கும்.

தாடை டோனிங் உடற்பயிற்சி

இந்த உடற்பயிற்சியில் ஈடுபட நேராக பார்த்தபடி உட்கார்ந்து கொள்ளலாம் அல்லது நின்று கொள்ளலாம். உடற்பயிற்சியின் போது உதடுகளை மூடி கொள்ள வேண்டும். மேலும் வாயையும் மூடியே வைத்திருக்க வேண்டும். இப்போது உங்கள் வாயின் கீழ் தாடையை ஒட்டியுள்ள தசைகளுக்கு இறுக்கம் கொடுங்கள். இதனை செய்யும் போது உதடுகளிலோ அல்லது முகத்தின் எந்தப் பகுதியிலோ சுருக்கங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தசைகளுக்கு இன்னமும் இறுக்கம் கொடுக்க கீழ் தாடையை சற்று முன்னே கொண்டு வாருங்கள். குறைந்தது 10 நிமிடத்திற்காவது இந்த இறுக்க நிலையை கடைபிடியுங்கள்.

தாடையை உயர்த்துதல்

தாடையை உயர்த்தும் உடற்பயிற்சியில் ஈடுபட உங்கள் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு உட்காரவோ அல்லது நிற்கவோ வேண்டும். உத்திரத்தை பார்த்தவாறு தலையை பின்னோக்கி சாய்த்துக் கொள்ளுங்கள். உத்திரத்தை முத்தமிடுவதை போல் உதடுகளை இறுக்கமாக மடித்துக் கொள்ளுங்கள். ஐந்து எண்ணும் வரை உதடுகளை அப்படியே வைத்துக் கொண்டு பின் சாதாரண நிலைக்கு திரும்புங்கள். இதை தொடர்ச்சியாக 5-10 முறை வரை செய்யுங்கள்.

கழுத்தை சுற்றுதல்

கழுத்தை சுற்றும் உடற்பயிற்சி என்பது தாடையை இரண்டு பக்கமும் சுழற்றும் உடற்பயிற்சியாகும். இதனை செய்வதற்கு உங்கள் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு உட்காரவோ அல்லது நிற்கவோ வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது முகத்தை ஒரு பக்கமாக திருப்பி உங்கள் தாடையை உங்கள் தோல் பட்டையின் மீது தொடவும். ஒரு பக்கமாக பார்க்க வேண்டும். மூச்சை வெளியேற்றும் போது தலையை மெதுவாக கீழ்நோக்கி உங்கள் தாடை நெஞ்சை தொடும்படி செய்யவும். மீண்டும் மூச்சை உள்ளிழுக்கும் போது தலையை மெதுவாக உயர்த்தி அந்த பக்கம் உள்ள தோள்பட்டையின் மீது தாடையை சாய்க்கவும்.

தாடையை விடுவித்தல்

தாடையை விடுவிக்கும் உடற்பயிற்சியில் ஈடுபட உங்கள் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு உட்காரவோ அல்லது நிற்கவோ வேண்டும். மூக்கின் வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும்; பின் மெதுவாக மூச்சை வெளியேற்றவும். அப்படி செய்யும் வேளையில் உதடுகளை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றும் போது தாடையை மெல்லும் தோரணையில் வைத்துக் கொள்ளுங்கள். மூச்சை வெளியேற்றிய பின்பு வாயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அகலமாக திறந்து கொள்ளுங்கள். பின், திறந்த வாயுடன் 'ஆஹ்' என்ற சத்தத்துடன் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். நாக்கின் நுனியை மெதுவாக உங்களின் கீழ் பற்களுக்கு பின்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் தாடையை அமைதி பெறச் செய்யும். நல்ல பலனை பெற இதனை 5-6 முறைகள் செய்யவும்.

தட்டை உடற்பயிற்சி

ஈடுபட உங்கள் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு உட்கார்ந்து அல்லது நின்ற நிலையில் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது, உதடுகளை பற்களுக்கு பின்னால் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் வாயின் ஓரங்களை கீழ்புறமாக திருப்பிக் கொள்ளுங்கள். வாயை மெதுவாக திறந்து கொண்டு தாடை தசைகளை செயல்படுத்துங்கள். உதடுகளை பற்களில் அழுத்தி வைத்துக் கொண்டு மீண்டும் வாயின் ஓரங்களை கீழ்புறமாக திருப்பிக் கொள்ளுங்கள். உங்கள் கீழ் தாடையை அப்படியும் இப்படியும் மேலும் கீழுமாக வேகமாக 5-10 முறை அசைக்கவும்.

English summary

Chin Firming Exercises: Fitness Tips

Most of chin firming exercises are simple and requires no more than your hands for support. These exercises can be done before or after regular physical exercises, stretching and running. By doing these chin firming exercises, you give your facial muscles a virtual massage to rejuvenate it and make it glow with life.
Story first published: Saturday, December 14, 2013, 12:47 [IST]
Desktop Bottom Promotion