For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Boopathi Lakshmanan
|

வெண்ணெய் பழம் மத்திய தரைக் கடல் பருவ தாவர வகையைச் சேர்ந்த இந்த பழம் உடல் நலத்திற்கு அற்புதமான பலன்களைத் தருவதாகும். பேரிக்காய் அல்லது கோள வடிவ தாவரமான இது பச்சை நிறத்தில் இருக்கக் கூடியதாகும். வெண்ணெய் பழத்தை பொதுவாகவே அப்படியே சாப்பிடவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். சைவ உணவுகளில் கறிக்கு பதிலாகவும் மற்றும் மில்க் ஷேக் மற்றும் ஐஸ் க்ரீம்களில் இனிப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் பழமாகவும் வெண்ணெய் பழம் உள்ளது.

அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வெண்ணெய் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இதில் மிகவும் அதிகமான கொழுப்புச் சத்தும் உள்ளது. அதிகமான கலோரிகளை கொண்டுள்ள பழமாகவும் இது உள்ளது. இதில் உள்ள கொழுப்புச்சத்து, இயற்கையாகவே தனித்து செறிவூட்டப்படுவதால் உடலுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது.

இது போன்ற புரோட்டீன், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகிய பல்வேறு சத்துக்கள் உள்ளதால் வெண்ணெய் பழத்தில் மிகவும் அதிகமான பலன்கள் உள்ளன. மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்றான இதில், சில நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களும் உள்ளன. அது போன்று வெண்ணெய் பழம் தீர்க்கும் நோய்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

 Amazing Health Benefits Of Avocado

1. எடை அதிகரிப்பவர்களுக்காக - வெண்ணெய் பழத்தில் அதிக கலோரியும், கொழுப்பும் உள்ளதாக முன்னர் குறிப்பிட்டோம். எனவே, எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களில் ஒன்றாக இது உள்ளது. வெண்ணெய் பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நல்ல அளவில் உள்ளன. 100 கிராம் வெண்ணெய் பழத்தில் 60-80 கலோரிகள் உள்ளன. எனவே, தங்களுடைய எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாக வெண்ணெய் பழம் உள்ளது.

2. இதயத்திற்கு ஏற்றது - இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை வெண்ணெய் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கும் பழமாகவும் உள்ளது.

3. தோலுக்கு ஏற்றது - வெண்ணெய் பழ எண்ணெய் தோலின் அமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயை காய்ந்திருக்கும் தோலில் போட்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலில் உள்ள வறண்ட பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு, மீண்டும் அழகுற காட்சியளிக்கும். எனவே தான், வெண்ணெய் பழ எண்ணெயை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

4. நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது - மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால் வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே தான், வெண்ணெய் பழம் குறைவான சர்க்கரை உள்ளவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

5. வலி நிவாரணி - மூட்டு வலிக்கு முதன்மையான மருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. இதிலுள்ள எரிச்சலை தடுக்கும் பொருட்கள், மூட்டுகள் இணையும் இடத்தல் வரும் வலியைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. வெண்ணெய் பழத்தில் உள்ள கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற தாதுக்களுக்கு வலியை நீக்கும் தன்மைகள் உள்ளன. நெடுங்காலமாக இருக்கும் உடல் வலிகளையும் கூட வெண்ணெய் பழ எண்ணெய் மசாஜ் மூலம் குணப்படுத்த முடியும்.

இவையெல்லாம் வெண்ணெய் பழத்தின் பலன்கள் பற்றிய சில தகவல்கள் மட்டுமே. மூப்படைவதை தள்ளிப் போடுவதற்கும், இளமையான தோற்றத்திற்கும் கூட வெண்ணெய் பழம் உதவுகிறது. புற்றுநோயை தவிர்க்கவும் மற்றும் நீரிழிவை கட்டுப்படுத்தவும் வெண்ணெய் பழம் உதவுகிறது. இதயம், தோல் மற்றும் தசைகள் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவும் சிறந்த நிவாரணியாக வெண்ணெய் பழம் கருதப்படுகிறது.

மேலே கண்ட தகவல்கள் அனைத்தும் வெண்ணெய் பழம் உடல் நலனுக்கு சிறந்த பலன்களை கொடுப்பதை உறுதி செய்யும் தகவல்களாகும். எனவே அடுத்த முறை இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம். இந்த பழத்தை தொடர்ச்சியாக சேர்த்துக் கொள்வதால் உங்களுடைய சருமம் மேம்படும், எடை உயரும் மற்றும் நீங்கள் அழகாக, இளமையாக தோற்றமளிப்பீர்கள். அது மட்டுமல்லாமல் நீரிழிவு மற்றும் மூட்டு வலி போன்ற நோய்களில் இருந்தும், உங்களை தள்ளி இருக்கச் செய்யும். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லத் தேவையில்லை என்று சொல்வதைப் போல, வெண்ணெய் பழத்தையும் பெருமையுடன் சொல்லலாம். இந்த பழத்தின் அனைத்து பலன்களையும் நீங்கள் பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

English summary

Amazing Health Benefits Of Avocado

A Mediterrenean origin fruit that has been found to have a lot of health benefits. Avacado is a pear shaped or spherical shaped plantthat is greeniah brown in color.
Story first published: Wednesday, November 27, 2013, 18:58 [IST]
Desktop Bottom Promotion