For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய முக்கிய 8 அறிகுறிகள்!!!

By Super
|

Recommended Video

மூளை பக்கவாதம் இருந்தால் ஏற்படக்கூடிய முக்கிய அறிகுறிகள்! | Warning Signs Of Brain Stroke

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளினால் மூளையின் செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறையும் நிலையே மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்:

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதான இஸ்கீமியா என்றழைக்கப்படும் நிலையினாலோ அல்லது இரத்த ஒழுக்கினாலோ மூளை பக்கவாதம் ஏற்படக்கூடும். ஆனால் சாமான்ய மக்கள், மூளை பக்கவாதம் என்றால் என்ன என்றோ, அதன் வெளிப்பாடுகள் பற்றிய தெளிவோ, அதற்கான உடனடி சிகிச்சைககள் பற்றியோ, இதனால் பாதிக்கப்பட்டோரை இதிலிருந்து மீட்பது எப்படி என்பது பற்றியோ பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை.

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக கொழுப்புச்சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கிய அபாயகரமான காரணிகளாக விளங்குகின்றன. இங்கு அந்த மூளை பக்கவாதத்தின் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகச் சாய்வு

முகச் சாய்வு

நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம். இதற்கிடையில், நோயாளியை புன்னகைக்கச் சொல்ல வேண்டும். ஒருவேளை அவரால் சரியாக புன்னகைக்க இயலவில்லையெனில், தாமதிக்காது மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.

கைகள் வலுவிழத்தல்

கைகள் வலுவிழத்தல்

பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.

பேசுவதற்கு சிரமப்படுதல்

பேசுவதற்கு சிரமப்படுதல்

பக்கவாதத்தினால் பாதிக்கப்படும் போது நோயாளிகளின் பேச்சு குழறுவதைக் காணலாம். சுலபமான கேள்விகள் சிலவற்றை கேளுங்கள்; பொதுவாக அவர்களால் சரியாக பதிலளிக்க முடியாது. அதனால் அவர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும் அவர்களை பதிலளிக்கச் சொல்லி சோதித்துப் பாருங்கள்.

சமன்பாட்டை இழத்தல்

சமன்பாட்டை இழத்தல்

பக்கவாத நோயாளிகள் அவர்களது உடலின் சமன்பாட்டை இழந்து, சிறு அசைவுக்கும் சிரமப்படுவதோடு, ஒருங்கிசைவு இன்றியும் அவதிப்படுவர்.

குடையும் தலைவலி

குடையும் தலைவலி

காரணம் ஏதுமின்றி, ஒருவர் திடீரென தாங்கவியலாத தலைவலியால் அவதிப்படுவாராயின், அது பெரும்பாலும் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.

குறைந்த கால நினைவிழப்பு

குறைந்த கால நினைவிழப்பு

நினைவிழத்தலினால் நோயாளி பெரும் அவதிக்குள்ளாவார். குறைந்த கால அவகாசத்திற்குள்ளாகவே, சற்று முன் நிகழ்ந்த எதையும் அவர்களால் நினைவில் நிறுத்திக் கொள்ள இயலாது.

 பார்வைக் கோளாறு

பார்வைக் கோளாறு

திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.

தலைசுற்றல்/சமநிலை இழத்தல்

தலைசுற்றல்/சமநிலை இழத்தல்

மூளை பக்கவாதம், ஒருவர் தன் சமன்பாட்டை இழக்கும் படி செய்யும். இதனார் பாதிக்கப்பட்ட ஒருவர் தகுந்த காரணம் ஏதுமின்றி தன் உடலின் சமநிலையை இழக்க நேரிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Warning Signs Of Brain Stroke

Stroke is the rapid loss of brain function due to disturbance in the blood supply to the brain. Learn the stroke warning signs and symptoms today. Time lost is brain lost.
Desktop Bottom Promotion