For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்!!!

By Maha
|

காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதன் சுவையாலேயே, இதனை அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும். இத்தகைய கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அனைவருக்கும் தெரிந்தது, கண் பார்வை கூர்மையாகும் என்பது தான்.

ஆனால் அதைத் தவிர, அதனை சாப்பிட்டால் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய கேரட்டை உணவில் அதிகம் சாப்பிட்டால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

இப்போது அந்த கேரட் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புற்றுநோய்

புற்றுநோய்

நிறைய ஆய்வுகளில் கேரட் அதிகம் சாப்பிட்டால், மார்பகம், கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கலாம் என்று கூறுகிறது. அதுமட்டுமின்றி தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்விலும், கேரட்டில் ஃபால்கரிநால் எனப்படும் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

பார்வை கோளாறு

பார்வை கோளாறு

கண்களில் உள்ள ரெட்டினாவின் செயல்பாட்டிற்கு வைட்டமின் ஏ சத்து மிகவும் இன்றியமையாதது. அத்தகைய வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் தான், மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டின், கண்களுக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்தைக் கொடுக்கும்.

இதய நோய்

இதய நோய்

ஆய்வுகளில் கேரட்டில் கரோட்டினாய்டுகள் அதிகமான அளவில் இருப்பதால், அதனை அதிகம் சாப்பிடுவோருக்கு, இதய நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டல், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்துவிடும்.

பக்கவாதம்

பக்கவாதம்

ஹாவர்ட் பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், வாரத்திற்கு ஆறு கேரட்டிற்கு மேல் சாப்பிடுபவர்களை விட, குறைவாக சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் விரைவில் தாக்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

கேரட்டில் நல்ல அளவில் கிளின்சிங் தன்மை இருப்பதால், அதனை சாப்பிட கல்லீரலில் தங்கும் கொழுப்புக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேறுவதோடு, இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை அகற்றி, முகப்பருக்கள் வருவதை தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் இதர சத்துக்கள், சரும வறட்சியை போக்கி, முகத்தை பொலிவோடு வைக்க உதவும்.

முதுமை

முதுமை

கேரட்டில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டினால், உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் முதுமைத் தோற்றத்தை தரும் பாதிக்கப்பட்ட சரும செல்களை குணப்படுத்தி, இளமையான தோற்றத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்க உதவும்.

ஆரோக்கியமான பற்கள்

ஆரோக்கியமான பற்கள்

கேரட் சாப்பிட்டால், பற்கள் நன்கு சுத்தமாக இருக்கும். மேலும் இது பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகளை முற்றிலும் அகற்றிவிடும். அதுமட்டுமின்றி, கேரட் சாப்பிட்டால், வாயில் எச்சிலின் சுரப்பு அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Health Benefits Of Carrots–Nutritional Value Of Carrot | பார்வை கோளாறை சரிசெய்யும் கேரட்டின் மற்ற நன்மைகள்!!!

Carrots are one of the most popular and well-loved vegetables. This because it provides a lot of nutrition to the body. Apart from that, carrots are also good sources of vitamin B1, vitamin B2, vitamin B6, vitamin K, biotin, fiber, potassium and thiamine. Here are 7 health benefits of carrots for human body.
Story first published: Saturday, May 25, 2013, 19:20 [IST]
Desktop Bottom Promotion