For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல்நலத்தைப் பற்றி தலைமுடி கூறும் 5 உண்மைகள்!!!

By Ashok CR
|

நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். உடல் நலத்தில் குறைபாடு ஏற்பட்டால் அது பலவகை நோய்களை வரவழைக்கும். இதனால் நமது உடல் நலத்தில் மிகுந்த கவனம் கொண்டு பேணி பாதுகாக்க வேண்டும்.

ஒரு முழுமையான அழகு என்பது அழகான தலைமுடியையும் நகங்களையும் வைத்தே எடைபோடப்படுகின்றது. நமது உடலில் நகங்களை போலவே நமது தலைமுடியும் வளரக்கூடிய ஒன்றாகும்.சிலர் தலைமுடியை நமது உடலில் ஒரு பகுதிதான் என்று நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறானது. அழகான தலைமுடியை விரும்பாதவர் எவரும் இருக்கமாட்டார்கள். நமது அழகு பராமரிப்பில் தலைமுடி பராமரிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும், நகங்களை போலவே தலைமுடியும் உங்கள் உடல்நலத்தைப் பற்றி சுட்டிக்காட்டும். உங்கள் தலைமுடி உங்கள் உடல்நலத்தை பற்றி கூறும். இவை ஒன்றோடு ஒன்று சார்ந்தவைகளாகும்.மேலும், உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்கள் தலைமுடி சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

நீங்கள் உங்கள் தலைமுடியிலோ அதன் அமைப்பிலோ மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். உங்கள் உடல் நலத்தை சுட்டிக் காட்டுவது உங்கள் தலைமுடி தான். இதன் மூலமாக உங்கள் உடல்நலத்தில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து அதிக கவனம் செலுத்த வேண்டும். இவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பதால் தலைமுடியின் மாற்றங்களை எளிதாக கண்டறியலாம். உங்கள் நீண்ட அடர்த்தியான தலைமுடி குறையத் தொடங்கினால் டாக்டரை அணுகி உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உங்கள் உடல்நலத்தை பற்றி உங்கள் தலைமுடி காட்டும் அறிகுறிகள் சில இதோ உங்களுக்காக

5 Things Your Hair Can Say About Your Health

அடர்த்தியான கூந்தல்

தீடீரென உங்கள் அழகான கூந்தலின் அடர்த்தி குறையத்தொடங்கினால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நல்ல மணவாழ்க்கை அமையாத அல்லது நல்ல வேலை இல்லாத காரணங்களால் ஏற்படும் மனஅழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். அடுத்தது, உங்கள் முடி இழப்பிற்கு அசாதாரண ஹார்மோன் அளவுகள், PCOS அல்லது ஹைப்பர் தைராயிடு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம்.

வெள்ளை செதில்கள் (பொடுகு)

எல்லோரும் பாதிக்கப்படும் பொதுவான ஒன்று இந்த பொடுகு பிரச்சனையை தான். உங்களுக்கு பொடுகு இருந்தால் அது வெள்ளை செதில்களாக வெளியில் வரும் அதனால் கவனம் தேவை. சொரியாசிஸ் நோய் வரும் வாய்ப்பை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் கிரோன் நோயால் தாக்கப்பட்டுள்ளதையும் தெரிவிக்கும். இதன் மூலம் உடல் நலமும் தலைமுடியும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவை என உணருவீர்கள்.

வறண்ட உணர்வு

நீங்கள் நீண்ட நேரம் குளோரின் உள்ள தண்ணிரில் நீச்சல் அடித்தாலோ அல்லது கூந்தலுக்கு டை அடித்தாலோ உங்கள் கூந்தல் நிச்சயமாக வறண்டு போய்விடும். நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் தலைமுடி காட்டிகொடுத்துவிடும். உங்கள் கூந்தல் வறண்டு போவதற்கு ஹைப்பர் தைராய்டு கூட இன்னொரு காரணமாக இருக்கலாம். கடந்த சில மாதங்களாகவே உங்கள் கூந்தல் வறண்டு காணப்பட்டால் உங்கள் தைராயிட் அளவுகளை கண்காணிக்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு, குளிர்ச்சியாக உணர்வது போன்றவை ஹைப்பர் தைராய்டு நோய்க்கான மற்ற அறிகுறிகளாகும். அதனால் உங்கள் கூந்தலையும் உடல்நலத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

தைராய்டு பிரச்சனை

புரோட்டீன் குறைப்பாடு இருந்தால் உங்கள் கூந்தலில் வெடிப்பு ஏற்படும். உங்கள் கூந்தலும் உடல்நலமும் ஒன்றோடு ஒன்று சார்ந்தவை என்பதால் உங்கள் டயட்டில் போதுமான புரோட்டீன் இல்லையென்றால் கூந்தலில் வெடிப்பு ஏற்படும். தலைமுடி கேரட்டின் என்ற புரோட்டீனால் ஆனது. அதனால் உங்கள் கூந்தலில் வெடிப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

நரை முடி

உங்கள் தலைமுடி நரைக்க தொடங்கினால் உங்கள் உடல் நலத்தில் குறைபாடு உள்ளது என்பதாகும். நரை முடியானது உங்கள் மனஅழுத்த அளவுகளைக் குறிக்கின்றது. அதிக மனஅழுத்த அளவுகள் ஹார்மோன் ஒழுங்கீட்டையும் உண்டாக்கும். அதனால் கவனமாக இருப்பது நல்லது.

English summary

5 Things Your Hair Can Say About Your Health

If you are noticing considerable changes in your hair and its texture then take a clue! Your hair indicates health! So start searching what went wrong? This would certainly help you find what’s wrong within you and take proper care and medication.
Story first published: Sunday, December 1, 2013, 17:27 [IST]
Desktop Bottom Promotion