For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகு வலியைக் குறைப்பதற்கான சில எளிய வழிகள்!!!

By Super
|

நாம் அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவரை சந்திக்கிறோம். ஆனால், 80% பேர் முதுகு வலிக்காகவே மருத்துவரை சந்திக்கிறார்கள். நாம் அதை எதிர்கொள்ளும் வழியைப் இங்கே பார்ப்போம். நாம் அனைவரும் மனிதர்கள் தானே! நம் அனைவருக்கும் உடலின் பல பாகங்களில் வலி ஏற்படுவது இயல்பான விஷயம் தான். முதுகு வலிக்கான காரணம் பலவாயினும மன அழுத்தமே அவற்றில் முக்கியமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். முறையாக அமராமல் இருத்தல், மோசமான பணி சூழல், மோசமான தூக்கம் ஆகிய இதர காரணங்களும் முதுகு வலிக்கு உண்டு.

உங்களுடைய முதுகு வலியை போக்க, நிச்சயமாக தகுந்த முயற்சியை எடுக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். முதுகு வலியை நாம் பழமையான சிகிச்சைகள் முலம் சரி செய்யலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இது நல்ல செய்தி தானே? எனினும், வயதாகும் போது, முதுகு வலியின் காரணமாக திசுக்கள் நீண்டும், கிழிந்தும் போவது நடக்கும். சில எளிய விஷயங்களை செய்வதன் மூலமாக நம்மால் முறையில் முதுகு வலியை தவிர்க்க முடியும் மற்றும் இதற்காக அதிக சிரமம் எடுக்க வேண்டியதில்லை. இந்த எளிய நுட்பங்களை கற்று செயல்படுத்தி, அதன் மூலம் முதுகு வலியிலிறுந்து நிவாரணம் பெற முடியும்.

இந்த பிஸியான வாழ்க்கையில் நாம் நமது தினசரி பணிகளை செய்ய கூட நேரம் இருப்பதில்லை. சூழ்நிலை இப்படி இருக்கையில் பல மணிநேரத்தை மருத்துவருடன் கழிப்பது வேதனை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் மருத்துவரிடம் செல்லாமலேயே, நமது முதுகு வலியிலிருந்து குணம் பெற முடியும் என்பது இங்கே உங்களுக்கு சொல்லப்படும் நல்ல செய்தி. இங்கே நீங்கள் முதுகு வலியை சரி செய்யவும் மற்றும் எதிர் காலத்திலும் முதுகு வலி வராமல் தவிர்க்கவும் செய்ய வேண்டிய செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரவில் நல்ல ஆழ்த உறக்கம் தேவை

இரவில் நல்ல ஆழ்த உறக்கம் தேவை

இரவில் நன்றாக தூங்குவது முதுகு வலியிலிருந்து நிவாரணம் தரும். தூக்கமின்மை கூட முதுகு வலி ஏற்படுத்தும். நல்ல அமைதியான தூக்கம் கிழிந்த தசைகளையம் வீக்கமுற்ற இனைப்புகளையும் சரி செய்து விடும். நீங்கள் நல்ல மெத்தையில் உறங்க வேண்டியதும் அவசியம். கடினமான மெத்தையில் உறங்கினால் வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆதலால் நல்ல மெத்தையை தேர்ந்தெடுக்கவும், வேறு வேறு நிலைகளில் உறங்கவும் முயற்சி செய்யுங்கள். அதில் உங்களுக்கு வசதியான நிலையை கண்டறியுங்கள். முதுகெலும்பை வளைந்த நிலையில் வைத்து உறங்குவதை தவிர்க்கவும்.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்

முதுகு வலியை சரி செய்யும் முயற்சியின் அடுத்தபடியாக, போதுமான அளவு வைட்டமின்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு பி வைட்டமின் எடுத்துக் கொள்வது முதுகு வலியை பெருமளவு குறைத்து விடும். மத்திய நரம்பு மண்டலம் மற்றும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும்; தருவது வைட்டமின் பி-யின் வேலையாகும். ஓமெகா 3 என்ற கொழுப்பு அமிலத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மக்களால் முதுகு வலியிலிருந்து மீண்டு வர முடியும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடலை சரியான முறையில் பராமரித்தால் முதுகு வலியை சரி செய்ய முடியும். தளர்ந்த வயிற்றுப் பகுதி மற்றும் பின் தசைகள் தான் முதுகு வலியை தருபவை. ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது நல்லது உடற்பயிற்சி தசைகளை விரிவடையச் செய்து, அவற்றை ஓய்வு நிலைக்கு கொண்டு வருகிறது. ஏரோபிக் செய்தோ மற்றும் உங்கள் தோட்டத்தில் நடைபயிற்சி செய்தோ, முதுகு வலியை ஓட ஓட விரட்டலாம். மேலும் இது மனதையும் அமைதிப்படுத்தும்.

வேண்டாமே புகைப்பழக்கம்

வேண்டாமே புகைப்பழக்கம்

‘புகைப்பழக்கம் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற வார்த்தையை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. எனவே, உங்களுடைய முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுங்கள். இதனால் நுரையீரல் மற்றும் இதைய கோளாறுகள் உயர் அழுத்தம் போன்ற பிற நேய்களும் வர வாய்ப்புகள் உள்ளன. முதுகு வலியானது, புகை பிடிக்காதவர்களை விட புகைப்பவர்களுக்கே அதிகம் வரும் என்பது ஆய்வுகள் வழியாக தெரிய வந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோடின் முதுகு வலியை வரவழைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால் முதுகு வலியை போக்க புகைபிடித்தலை விட்டு விடுவது நல்லது.

முதுகுக்கு தேவை மசாஜ்

முதுகுக்கு தேவை மசாஜ்

உங்கள் முதுகுப் பகுதியில் ஒரு நல்ல மசாஜ் செய்வதன் மூலம், முதுகு வலியை நிறுத்தவும் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறுவும் முடியும். இதற்காக கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும், எனவே உங்கள் பாக்கெட்டை பணத்தால் முதலில் நிரப்புங்கள். அப்படி பணம் இல்லையானால், ஒரு டென்னிஸ் பந்தைக் கொண்டு வலியுள்ள இடங்களில் மசாஜ் செய்தால் அது மிக அற்புதமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Things For Back Pain Relief

Life is getting too busy, and we don’t find time even for our daily tasks, when this is the situation, visiting a doctor and spending hours in the doctor’s clinic can be cumbersome. The good thing about back pain is that you can feel alright, even if you don’t visit a doctor. Here are a few things you can try to cure back pain and prevent further problems in future.
Desktop Bottom Promotion