For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Super
|

இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். 'சிக்கு' என்ற பெயர் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும் வெப்ப மண்டலத்தில் எப்போதும் பசுமையான பழங்களை தாங்கியிருக்கும் மரமாக குறிப்பிடப்படுவதும் இதுவே ஆகும். சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு ருசியான கலோரிகள் நிறைந்த பழமாக இருக்கிறது.

சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. ஏற்கனவே கூறியது போல், இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது. அதனுடைய சர்க்கரை சுவை காரணமாக, பரவலாக மில்க் ஷேக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.

ஆற்றலுக்கு ஆதாரமானது

ஆற்றலுக்கு ஆதாரமானது

சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட்

அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட்

டானின் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், சப்போட்டா அல்லது சிக்கு ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை தடுத்தல்

குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை தடுத்தல்

வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

ஆரோக்கியமான எலும்புகள்

ஆரோக்கியமான எலும்புகள்

கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. இத்தகைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.

மலச்சிக்கல் நிவாரணம்

மலச்சிக்கல் நிவாரணம்

சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து (5.6/100g) அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.

கர்ப்பக் காலத்தின் போது ஏற்படும் நன்மைகள்

கர்ப்பக் காலத்தின் போது ஏற்படும் நன்மைகள்

கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டா பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது.

கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள்

கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள்

சப்போட்டாவின் மூலிகையானது இரத்த இழப்பு நிறுத்தும், அதாவது அதன் கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளவை என்று அறியப்படுகிறது. அதிலும் இந்த மூலிகை மூல வியாதி மற்றும் காயங்களால் ஏற்படும் இரத்தப்போக்கைக் குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக இந்த விதைகளை அரைத்து கொட்டுவாயிலிருக்கும் கொடுக்குகள் எடுப்பதற்கும் மற்றும் பூச்சி கடியிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்

பாலிஃபீனாலி்க் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஒட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியாசின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரித்து, அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் சி, தீங்கு விளைவிக்கும் தீவிரப்போக்கினையும் அழிக்கிறது.

வயிற்றுப்போக்குக்கான மருந்து

வயிற்றுப்போக்குக்கான மருந்து

சப்போட்டா அதன் வயிற்றுப்போக்குக்கான மருந்து பண்பினால் வயிற்றோட்டத்தை நிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அதற்கு நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியும். மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக்கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது.

மன நலம்

மன நலம்

ஒரு வலிமையான மயக்க மருந்துத்தன்மை இருப்பதால், சப்போட்டா பழம் நரம்புகளை அமைதியடைய செய்து, மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. இதனால் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு இப்பழம் பெரிதும் உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சளி மற்றும் இருமல்

சளி மற்றும் இருமல்

சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.

எடை இழப்புக்கு உதவுகிறது

எடை இழப்புக்கு உதவுகிறது

சப்போட்டா பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரைப்பையில் நொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது.

நச்சு நீக்கி பொருளாக இருக்கிறது

நச்சு நீக்கி பொருளாக இருக்கிறது

சப்போட்டா பழம் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக விளங்குகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் மூலம் உடலிலிருந்துக் கழிவு பொருட்களை அகற்ற ஒரு சிறந்த நீர்ப்பெருக்கியாக செயல்படுத்த உதவுகிறது.

பல் சொத்தைக் குழிகள்

பல் சொத்தைக் குழிகள்

சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம்.

பொலிவான சருமம்

பொலிவான சருமம்

சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்தினால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது. எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.

முடிகளை மென்மையாக்குதல்

முடிகளை மென்மையாக்குதல்

சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத்தன்மை இல்லாமல், எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது.

கூந்தல் உதிர்தல் சிகிச்சைக்கு உதவுகிறது

கூந்தல் உதிர்தல் சிகிச்சைக்கு உதவுகிறது

சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரணமாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன்மிக்கதாக செயல்படுகிறது.

பொடுகு வருவதை கட்டுப்படுத்துகிறது

பொடுகு வருவதை கட்டுப்படுத்துகிறது

சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும். இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும சுருக்கங்களைக் குறைத்தல்

சரும சுருக்கங்களைக் குறைத்தல்

சப்போட்டா பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்ததுள்ளது. எனவே, அது உடலில் சீக்கிரம் முதுமை அடையச் செய்யும் மூலக்கூறுகளின் தீவிரத்தை குறைத்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கும் பொருளாக விளங்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.

தோல் மருந்து

தோல் மருந்து

சப்போட்டாவின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் கர்னல் எண்ணெய், சருமத்திற்கு ஏற்ற மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படியெனில் எண்ணெய் பிரித்தெடுத்தலுக்கு பிறகு உண்டாகும் இந்த விதையின் கசடானது (எச்சம்), சருமத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்க ஆயின்மெண்ட் போல் பயன்படுத்தப்படுகின்றன.

பூஞ்சை வளர்ச்சியை நீக்குகிறது

பூஞ்சை வளர்ச்சியை நீக்குகிறது

சப்போட்டா செடியின் பால் போன்ற சாற்றினை, சருமத்தில் மருக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சியுள்ள இடத்தில் பயன்படுத்துவதால், அவைகள் நீக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இந்த பழங்களின் நன்மைகள் என்னன்னு உங்களுக்கு தெரியுமா???

English summary

23 Health Benefits Of Sapota

The name ‘sapota’ might not be familiar to most of us. Sapota is another name for the fruit better known as ‘chikoo’. The various health benefits of sapota are given below.
Desktop Bottom Promotion