For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழற்சியை ஏற்படுத்தக்கூடிய 20 உணவுகள்!!!

By Maha
|

அழற்சி என்பது ஒரு தொற்றுநோய் இல்லை. அவை உடலில் ஏதேனும் வித்தியாசமான ஒரு நிகழ்வு ஏற்படுவதால், உண்டாகும் ஒன்றாகும். அதிலும் அழற்சியானது, உடலில் உள்ள திசுக்களின் மீது அதிகப்படியான அளவில் இரத்த ஓட்டமானது மிகவும் வெப்பத்துடன் பாய்வதால், உடலில் ஆங்காங்கு சிவப்பு நிறத்தில் வீக்கங்கள் ஏற்பட்டு, வலியும் ஏற்படும். மேலும் உடலில் அழற்சி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றில் ஒன்று தான் உணவுகள். ஆம், உணவுகள் மூலமாகத் தான், பெரும்பாலானோருக்கு அழற்சியானது ஏற்படுகிறது.

அதிலும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவுகளை தொடர்ந்து அதிகமான அளவில் சாப்பிடுவதால் கூட, சில சமயங்களில் அழற்சி ஏற்படும். ஆனால் சிலரிடம் அந்த ஊட்டச்சத்துள்ள உணவுகள் அழற்சியை ஏற்படுத்தும் என்று சொன்னால் நம்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்கள், அழற்சியின் போது இதுவரை சாப்பிட்ட உணவுகளை இரண்டு வாரத்திற்கு தவிர்த்து பார்த்தால் புரியும்.

இவ்வாறு ஆரோக்கியமான உணவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் உணவுகளின் மூலம் அழற்சி ஏற்படுவதற்கு காரணம், எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும், அவற்றை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை எதிர்வினையான அழற்சிக்கு வழிவகுக்கும். இப்போது ஆரோக்கியமாக நினைத்துக் கொண்டிருக்கும் எந்த உணவுகள் எல்லாம் அழற்சியை உண்டாக்கும் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அளவுக்கு அதிகமாக உடனே அதிகரித்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை குறைத்து, அழற்சியை உண்டாக்கும்.

காய்கறி எண்ணெய்

காய்கறி எண்ணெய்

சமையலில் பயன்படுத்தும் காய்கறி எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் இரண்டிற்கும் இடையில் ஒருவித ஏற்றத்தாழ்வை உண்டாக்கிவிடும். இறுதியில் அவை அழற்சிக்கு வழிவகுக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

மனித உடலால் அதிகப்படியான புரோட்டீன் அல்லது லாக்டோஸை இயக்க முடியாது. ஆனால் அத்தகைய சத்துக்கள் பால் பொருட்களில் அதிகம் இருப்பதால், அவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அழற்சி உண்டாகும்.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியை சாப்பிடும் போது N-கிளைகோநியூராமினிக் அமிலமானது உற்பத்தி செய்யப்படுவதால், இவற்றை அதிகமாக சாப்பிட்டால், அவை ஆன்டி-கிளைகோநியூராமினிக்கை உற்பத்தி செய்து, இறுதியில் நாள்பட்ட அழற்சியை உண்டாக்கிவிடும்.

கோதுமை மற்றும் பார்லி

கோதுமை மற்றும் பார்லி

இந்த தானியங்களில் அலர்ஜென் மற்றும் க்ளுடென் போன்றவை உள்ளது. எனவே இவற்றை அளவாக சாப்பிட்டாமல் இருந்தால், அவை உடனே நோய் எதிர்ப்பு சக்தியில் ஒரு வித தூண்டுதலை உண்டாக்கி, அழற்சியை உண்டாக்கிவிடும்.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள்

ட்ரான்ஸ் கொழுப்புக்கள்

ஃபாஸ்ட் புட் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் இருப்பதால், இவை அளவுக்கு அதிகமாகும் போது, உடலில உள்ள LDL கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, சில சமயங்களில் அழற்சி ஏற்படும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹாலை தொடர்ந்து அதிக அளவில் சாப்பிட்டு வந்தால், உணவுக்குழாய், குரல்வளை மற்றும் கல்லீரலில் அழற்சி ஏற்படும்.

சுத்திகரிக்கப்பட்ட பருப்புகள்

சுத்திகரிக்கப்பட்ட பருப்புகள்

சுத்திகரிக்கப்பட்ட பருப்புக்களில் நார்ச்சத்து, வைட்டமின் பி இல்லாமல் இருக்கும் மற்றும் அதிக அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கும். ஆகவே இதனை அதிகம் சாப்பிடும் போது, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்றவை ஏற்படும்.

செயற்கை உணவு சேர்க்கைகள்

செயற்கை உணவு சேர்க்கைகள்

செயற்கை உணவு சேர்க்கைகளான அஸ்பார்டேம் மற்றும் மோனோசோடியம் குளுட்டாமேட் (MSG) போன்றவற்றை உணவில் சேர்ப்பதால், அவை முடிவில் அழற்சிக்கு வழிவகுக்கும். அதுவே அழற்சியானது முற்றிவிட்டால், முடக்கு வாதத்தை உண்டாக்கும்.

பதப்படுத்தப்பட்ட சோளம்

பதப்படுத்தப்பட்ட சோளம்

பொதுவாக சோளத்தில் பல பொருட்கள் உள்ளன. அவை கார்ன் சிரப், சோளமாவு, கார்ன் ஆயில் போன்றவை. இத்தகையவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, இன்சுலின் அளவை மிகவும் குறைத்து, இரத்தத்தில் அழற்சியை உண்டாக்கும்.

வேர்க்கடலை

வேர்க்கடலை

பொதுவாகவே சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்டால், அழற்சி ஏற்படும். ஆகவே இதனை அளவாக சாப்பிடுவது நல்லது. அதைவிட்டு எனக்கு வேர்க்கடலை சாப்பிட்டு அழற்சி வந்ததில்லை என்று, அதிகமான அளவில் உட்கொண்டால், பின் அழற்சி உண்டாகும்.

முட்டை

முட்டை

முட்டையில் நிறைவுற்ற கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. அதேசமயம் அதில் அராக்கிடோனிக் அமிலம் உள்ளது. சில சமயங்களில் இந்த அராக்கிடோனிக் அமிலம் உடலுக்கு அவசியமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அவை உடலில் அழற்சியை உண்டாக்கும்.

பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகள்

பொன்னிறமாக பொரித்த உணவுகளை உயர் வெப்பநிலையில் பொரிக்கும் போது, அதில் உள்ள சில சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்புகளாக இருக்கும் கிளைகோடாக்ஸின்கள், புரோட்டீனுடன் வினைபுரியும் போது, அவை அழற்சிக்கு வழிவகுக்கும்.

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்கள்

கார்போனேட்டட் பானங்களில் அதிக அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கும். எனவே இவற்றை அதிகம் குடிக்கும் போது இவை இன்சுலின் உற்பத்தியை குறைத்து, அழற்சியை உருவாக்கும்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸில் என்னதான் நன்மைகள் அதிகம் உள்ளங்கியிருந்தாலும், அதை அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள ஹிஸ்டமின் மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கி, முற்றிய நிலையில் கீல்வாதத்தை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் சொலனைன் அதிகம் உள்ளது. எனவே மிகவும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தக்காளியை சாப்பிட்டால், உடலில் அழற்சியானது ஏற்படும். மேலும் அழற்சியானது அதிகமாக இருப்பின், மூட்டுகளில் கடுமையான உள்காயங்கள், கட்டிகள் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

கொழுப்புள்ள மற்றும் இனிப்பான தயிர்

கொழுப்புள்ள மற்றும் இனிப்பான தயிர்

தயிர் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் கொழுப்பு அதிகம் உள்ள தயிரில், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், இறுதியில் அழற்சி தான் முடிவு.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகள்

பொதுவாக ஜங்க் உணவுகள் ஆரோக்கியமற்றது. ஆனால் அந்த ஜங்கு உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அவை இரத்தத்தில் ஒருவித தூண்டுதலை உண்டாக்கி, அழற்சியை உண்டாக்கும்.

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்டில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால், அவையும் அளவுக்கு அதிகமாக உடலில் செல்லும் போது அழற்சி ஏற்படும். எனவே வெள்ளை பிரட்டிற்கு பதிலாக, அனைத்து தானியங்களாலும் செய்யப்பட்ட பிரட் சாப்பிடுவது நல்லது.

மசாலா

மசாலா

உணவுக்கு சுவை கிடைக்க வேண்டுமென்று சோடியம் உள்ள மசாலாவை உணவில் சேர்த்தால், அதிகமான சோடியம், பொட்டாசியத்துடன் வினைபுரிந்து இறுதியில் அழற்சியை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Foods That Cause Inflammation | அழற்சியை ஏற்படுத்தக்கூடிய 20 உணவுகள்!!!

Some foods that we consider healthy can also trigger an immune response depending on the amount taken, the health status of the individual and existence of any allergic reactions. This doesn't mean that you have to avoid all these foods. Watch your body and find out how your body reacts to allergic foods and take necessary steps to resolve it. Here are some most popular foods that may cause inflammatory response.
Story first published: Wednesday, April 3, 2013, 12:13 [IST]
Desktop Bottom Promotion