For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைவாக சாப்பிட சில புதுமையான வழிகள்!!!

By Super
|

நம்மில் பலர் நன்றாக உணவு உண்ணும் சாப்பாட்டு ராமன்கள்! கையில் எது கிடைத்தாலும் மாவாட்டும் இயந்திரம் போல வயிறுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பது நம் வழக்கம். முறுக்கு, சிப்ஸ், வடை, போண்டா, சமோசா இந்த மாதிரி சிற்றுண்டிகள் கிடைத்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வார இறுதிகளில் நாம் செல்லும் விருந்துகளிலும் ஒரு கை பார்த்துவிடுகிறோம். இவை நமக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இதனால் நம்மை சாப்பாட்டு ராமன், குண்டுமணி, என்றெல்லாம் கேலி செய்யும் போது நமக்கு சங்கடமாகவே இருக்கும். அதுவும் எதிர் பாலினத்தவர் முன்பு யாரேனும் கிண்டல் செய்துவிட்டால் வருகின்ற கோபத்திற்கு அளவே இல்லை.

ஆனால், என்ன செய்வது நல்ல உணவை பார்த்ததும், காய்ந்த மாடு கம்பு மீது பாய்வதை போல் பாய்ந்துவிடுகிறோம். இந்த உணவு வேட்கையை குறைக்க என்ன தான் வழி. "இப்படியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் நம் நிலை என்னதான் ஆகும்?" என்கிற எண்ணம் நமக்கு வரத்தான் செய்கிறது. இதற்கு பல பத்திய முறைகளையும், உடற்பயிற்சிகளையும் பலர் அறிவுறுத்தி இருப்பார்கள். நாங்களும் சில மனரீதியான நடைமுறை ரீதியான வழிகளை உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம்.

நம்முடைய ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறைக்கு மாற்றம் என்கிற வார்த்தை தேவைப்படும். "ஏய்! கொஞ்சமா சாப்பிடு" என்று உங்களிடம் நீங்களே சொல்லிக் கொள்ள சில புதுமையான வழிகளை நாங்கள் கொண்டு வருகின்றோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதலி/காதலனை தேடுங்கள்

காதலி/காதலனை தேடுங்கள்

திருமணமாகாமல் இருந்தால், ஒரு அழகான பெண்/ஆணை ஈர்க்க வேண்டும் என்பதை மனதில் நினைத்தால், ஆரோக்கியக்கேடான அதிக உணவில் இருந்து காத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி.

ஆர்வமில்லாத உணவும்

ஆர்வமில்லாத உணவும்

நேரம் கெட்ட நேரத்தில் பசித்தால், உலகில் உங்களுக்கு பிடிக்காத உணவுகள் அனைத்தையும் யோசித்து பாருங்கள். இதனால் பசி கூட போய்விடும்.

இரவு நேர கொண்டாட்டத்தை தவிர்க்கவும்

இரவு நேர கொண்டாட்டத்தை தவிர்க்கவும்

இரவு நேரத்தில் தொலைக்காட்சி பெட்டியோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறவர்கள் அனைவரும் இயல்பாகவே அதிக சிற்றுண்டி உண்ணும் பழக்கத்தை பெறுவார்கள். இந்த நள்ளிரவு திரைக்காட்சிகளை குறைத்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு, காதலியோடு கடலைபோடுவது நிச்சயமாக, தவறான நேரத்தில் சாப்பிடுவதை குறைக்க உதவும்.

வீடியோக்கள்

வீடியோக்கள்

சில நேரங்களில் அச்சமூட்டும் காரியங்களை யோசித்தால் மாத்திரம் போதாது, அவற்றை பார்த்தால் தான் அது உங்களுக்குள் செயல்படும். அதிலும் அருவருப்பாக நினைக்கும் கரப்பான் பூச்சி, புலு போன்றவற்றை உண்ணும் வீடியோக்களை பார்த்தாலே, சிறிது நேரத்திற்கு நிச்சயமாக எதையும் சாப்பிட உங்களுக்கு விருப்பம் ஏற்படாது.

சூப்

சூப்

முக்கிய உணவுக்கு முன்பு, ஒரு குவளை தண்ணீர் அல்லது பிரியமான சூப் அருந்தினால் முக்கிய உணவை குறைவாக சாப்பிட முடியும். ஏனெனில் வயிற்றில் இருக்கும் திரவம், பாதி சாப்பிட்ட நிறைவை கொடுக்கும்.

அம்மா என்கிற துருப்புச்சீட்டு

அம்மா என்கிற துருப்புச்சீட்டு

அம்மாவுக்கு அழகான மருமகள் வேண்டும் என்கிற ஆசை இருந்தால், தினந்தோறும் குறைவான வெண்ணெய் மற்றும் நெய் உள்ள உணவுகளை நாள் முழுவதும் சிறிய அளவுகளில் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளுங்கள். அந்த தீர்மானத்திற்கு அவர் சம்மதித்தால், உணவு உண்பது நிச்சயமாக குறையும்.

சூயிங் கம்

சூயிங் கம்

சாப்பிடும் ஆசையை அடக்க முடியவில்லை என்றால், சுற்றும் முற்றும் பார்த்து பையில் இருக்கும் சூயிங் கம்மை எடுத்து மெல்லத் தொடங்குங்கள். இதனால் சாப்பிட வேண்டிய கவனம் சிதறிவிடும்.

சரியான நண்பர்

சரியான நண்பர்

யாருடன் அதிகமாக நேரம் செலவிடுகிறீர்களோ, அவர்களுடைய தினசரி பழக்கவழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது தனியாக சாப்பிட சென்றால், அதிகமான உணவு சாப்பிட நேரிடும். ஆனால் அந்த நேரம் பசி எடுக்கும் போது, உங்களோடு ஒரு பெண்ணை அழைத்துச் சென்றால், அவருடைய தட்டில் இருக்கும் குறைவான உணவை பார்க்கும் போது பசி எடுக்கும் போது குறைவாக சாப்பிடத் தூண்டும்.

உணவு நிபுணரிடம் செல்வது

உணவு நிபுணரிடம் செல்வது

உடலை சிக்கென்று வைப்பதற்கு உதவும் நிபுணர்களை சந்தித்து, அவர்களது உதவியை கேட்கலாம். இதனால் அவர்கள் கொடுக்கும் டிப்ஸ்களை பின்பற்றாவிட்டால், பணம் தான் வீணாகும் என்பது நினைவுக்கு வந்து, அளவாக சாப்பிடலாம்.

கரண்டிகள்/கைகளுக்கு மாறுங்கள்

கரண்டிகள்/கைகளுக்கு மாறுங்கள்

கையினால் உணவை எடுத்து சாப்பிடுகிறவர்கள் கரண்டி, கத்தி அல்லது குச்சிகள் மூலமாக சாப்பிடும் போது அசௌகரியமாக உணர்வதால் குறைவான உணவை உண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல, கரண்டிகள் பயன்படுத்தும் ஒருவர் வெறும் கையில் சாப்பிட்டால் குறைவான உணவையே சாப்பிடுகிறார்.

அடர்ந்த நிறத் தட்டுகள்

அடர்ந்த நிறத் தட்டுகள்

ஒரு வண்ணம் கொடுக்கும் ஆற்றல் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில், அடர்ந்த நிறமுள்ள தட்டில் உணவு சாப்பிட முயற்சிக்க வேண்டும். இதை செய்வதன் மூலம், விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வை அடைவீர்கள் என்று நம்பப்படுகின்றது.

புரத உணவுகள்

புரத உணவுகள்

உணவு உட்கொள்ளுதலிலும், பசியின் போது உண்ணப்படுவதிலும் புரதங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக புரதங்களை எடுத்துக் கொள்கிறவர்கள் குறைவான எடையை பெறுகிறார்கள், அதோடு எடையை இழக்கவும் செய்கிறார்கள். புரதங்கள் செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், வயிறு நிறைந்த உணர்வை அதிகரிக்கின்றன. அதிலும் உணவுகளிலும், சிற்றுண்டிகளிலும் புரதங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளாவிட்டால், அதிகமாக சாப்பிடும்படி வயிற்றுக்கிடங்கு தூண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Innovative Ways To Eat Less | குறைவாக சாப்பிட சில புதுமையான வழிகள்!!!

13 Innovative Ways To Eat Less
Desktop Bottom Promotion