For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

By Maha
|

உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன.

பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று. இவை மிகவும் ஆபத்தானவை. பெண்களை விட, ஆண்களின் உடலை பாதிக்கும் வகையில் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் இருக்கின்றன.

அத்தகைய பழக்கங்கள் நன்கு கவனித்து மாற்றி வந்தால், நிச்சயம் ஆண்களின் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். இப்போது அத்தகைய பழக்கங்களுள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அந்த ஆரோக்கியமற்ற பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், அதனை உடனே தவிர்த்து, உடலை ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

ஆண்களிடம் பொதுவாக இருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று தான் புகைப்பிடித்தல். பல ஆண்கள் புகைப்பிடிப்பதால், மன அழுத்தம், டென்சன் போன்றவை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அத்தகைய சிகரெட்டை தொடர்ந்து பிடித்தால், உடல் மற்றும் உயிருக்கு பெரும் ஆபத்து தான் ஏற்படும்.

போதிய நீர் குடிக்காமல் இருப்பது

போதிய நீர் குடிக்காமல் இருப்பது

ஆண்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இவ்வாறு அதிகம் வெளியே சுற்றும் ஆண்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதோடு, மலச்சிக்கலும் ஏற்படும்.

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது

சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது

நேரம் கிடைக்கும் போது மட்டும் சாப்பிடுவது நல்ல பழக்கமல்ல. சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான், செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு, வயிற்றில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாமல் இருக்கும். சில நேரங்களில் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், அல்சர் வந்துவிடும். எனவே சரியான நேரத்தில் சாப்பிடுவது மிகவும் அவசியமானது.

சிறுநீர் கழிக்காமல் இருப்பது

சிறுநீர் கழிக்காமல் இருப்பது

நிறைய ஆண்கள் கழிவறைக்கு செல்ல சோம்பேறித்தனப்பட்டு, சிறுநீர் வெளியேற்றாமல் அடக்கி வைக்கின்றனர். சிலரோ தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர் அடிக்கடி வரும் என்று நினைத்து தண்ணீரையும் அதிகம் குடிக்காமல் இருக்கின்றர். அவ்வாறு சிறுநீரை வெளியேற்றாமல் இருந்தால், சிறுநீரகத்தில் பெரும் பிரச்சனை ஏற்படுவதோடு, சிறுநீரகக்கற்களும் ஏற்படும்.

உள்ளடையை மாற்றமல் இருப்பது

உள்ளடையை மாற்றமல் இருப்பது

ஆண்களுள் பலர் உள்ளாடையை துவைக்கவில்லை என்று ஒரு நாள் போட்டதை, தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் போடுகின்றனர். இது மிகவும் ஆரோக்கியமற்றது. சொல்லப்போனால், ஒரு நாளைக்கு இரண்டு முறை உள்ளாடையை மாற்ற வேண்டும். இல்லையா, குறைந்தது ஒரு முறையாவது மாற்றுங்கள்.

ஷேவிங் செய்யாமல் இருப்பது

ஷேவிங் செய்யாமல் இருப்பது

ஆண்களிடம் இருக்கும் சுத்தமில்லாம பழக்கங்களில் இது மிகவும் முதன்மையானது. குறிப்பாக ஷேவிங் செய்யாமல் இருப்பது மற்றும் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்காமல் இருப்பது. பெண்கள் மட்டும் தான், தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தான் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க வேண்டும். இது சுத்தத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.

சுடு நீர் குளியல்

சுடு நீர் குளியல்

உடலில் உள்ள அலுப்பைப் போக்குவதற்கு சுடு நீர் குளியல் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் ஆண்கள் சுடுநீரில் குளித்தால், விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். எனவே சூடான நீரில் குளிப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.

குளிக்காமல் இருப்பது

குளிக்காமல் இருப்பது

பல ஆண்கள் சோம்பேறித்தனத்திற்கு முதன்மை இடம் கொடுத்து, தினமும் குளிக்காமல் இருக்கின்றனர். இது தான் கெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது. இதனால் உடலில் உள்ள கிருமிகள் வெளியேறாமல் இருப்பதோடு, உடலின் வெப்பமும் அதிகரிக்கும்.

கால் நகங்கள் வெட்டாமல் இருப்பது

கால் நகங்கள் வெட்டாமல் இருப்பது

ஏன் ஆண்கள் கால் விரல் நகங்களை வெட்டி சுத்தமாக இருக்கக்கூடாது? இதுவும் ஆரோக்கியமற்ற பழக்கங்களில் ஒன்று தான். ஏனெனில் இதனால் கால் நகங்களின் இடையே கிருமிகள் தங்கி, நகங்களின் பொலிவை இழக்கச் செய்வதோடு, நோய்களையும் உருவாக்கும்.

தாமதமாக தூங்குவது

தாமதமாக தூங்குவது

அலுவலக வேலை அல்லது டிவி பார்ப்பதால், நிறைய ஆண்கள் சரியான நேரத்தில் தூங்காமல், இரவில் எப்போதும் தாமதமாக தூங்குகின்றனர். சொல்லப்போனால் 12 அல்லது 1 மணி ஆகாமல் பலருக்கு தூக்கமே வராது. இதனால் தான் பலர் காலையில் மிகவும் சோர்வுடன் இருக்கின்றனர். எனவே சரியான நேரத்தில் தூங்கி எழுவது தான் ஆரோக்கியமான பழக்கம்.

இன்டர்நெட்

இன்டர்நெட்

இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம். அதிலும் சிறிது ஓய்வு நேரம் கிடைத்தாலும், உடனே இன்டர்நெட்டில் உட்கார்ந்து எதையாவது தேடுவார்கள். இவ்வாறு செய்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல், நிம்மதியான தூக்கம் இல்லாமல் போகும். எனவே அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தாமல், வேண்டிய நேரத்தில் மட்டும் பயன்படுத்துவது கண்களுக்கு நல்லது.

மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது

மருத்துவரிடம் செல்லாமல் இருப்பது

ஆண்களுக்கு மருத்துவமனை என்றாலே பிடிக்காது. மேலும் ஏதாவது உடலில் சிறு பிரச்சனை வந்தாலும், உடனே மருத்துவரிடம் சென்று என்னவென்று பார்க்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருந்தால், உடலில் ஏதாவது பிரச்சனை என்றாலும் ஆரம்பத்தில் தெரியாமல், முற்றிய பின் தெரியும். எனவே உடலில் சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Unhealthy Habits Of Men | ஆண்களிடம் இருக்கும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள்!!!

For a healthy body and mind, we need to maintain a proper diet. Apart from following a good diet, we also need to maintain proper hygiene. When we look at men, we seldom come across a few of them who have healthy habits. Most men have few unhealthy habits that can worsen their health conditions. Take a look at the points below to know few common unhealthy habits of men.
Desktop Bottom Promotion