For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? இதை படிங்க!!!

By Super
|

சிரங்கு ஒரு நாள்பட்ட தோல் வியாதி. இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இது நோய் அனைத்து வயது ஆண்கள் அல்லது பெண்களுக்கு வரலாம். இந்த நோயை நுண்ணுயிர்கள் ஏற்படுத்துகின்றன. அதிலும் பெண் நுண்ணுயிர் தான், சருமத்தை மெதுவாக துளையிட்டு முட்டைகளையிட்டு ஆங்காங்கு கொப்புளங்கள் போன்று உருவாக்குகின்றன.

இந்த நோய் மிகவும் இலகுவாக பரவக்கூடியது. அதிலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இத்தகைய நோயை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் குணப்படுத்தலாம். அத்தகைய வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு. கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சிரங்கு நோய்கான மருந்துகள் மற்றும் எந்த பக்க விளைவும் இல்லாத சிரங்கு நோயை குறைக்க அல்லது நீக்க உதவும். இந்த பொருட்கள் அழற்சியை ஏற்பாடுத்துமா என சோதனை செய்ய காதின் பின்புறம் அல்லது முழங்கையில் தடவி அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சிரங்கை குணப்படுத்த தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். இது தோலை மிகவும் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றுகிறது.

சந்தனம்

சந்தனம்

ஒரு டீஸ்பூன் சந்தனம் மற்றும் ஒரு டீஸ்பூன் கற்பூரம் இரண்டையும் சேர்த்த கலவையை சிரங்கு புண் இருக்கும் இடத்தில் தடவினால் அரிப்பு குணமடையும்.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை இழையும் சேர்த்து அரைத்து, அதை இந்த சிரங்கின் மேல் தடவி வர விரைவாக குணமடையும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரால் அரிப்பெடுக்கும் இடத்தில், ஒத்தடம் கொடுத்தால் சற்று இதமாக இருக்கும்.

பாதாம் இலை

பாதாம் இலை

பாதாம் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பிசைந்து, அதை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர குணமடையும்.

வேப்பிலை

வேப்பிலை

ஒரு இரும்பு பாத்திரத்தில் 200 கிராம் கடுகு எண்ணெய் மற்றும் 50 கிராம் வேப்பிலையை சேர்த்து, அந்த இலை கருப்படையும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதை குளிர வைத்து, தினமும் 4 முறை சிரங்கு புண்ணில் தடவ குணமடையும்.

பப்பாளி விதை

பப்பாளி விதை

பப்பாளி பழ விதையை நன்றாக பிசைந்து, அந்த விழுதை தடவ சிரங்கு புண்ணால் ஏற்படும் அரிப்பிற்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.

புதினா இலை

புதினா இலை

புதினா இலையை கையில் பிழிந்து அந்த சாறை தடவலாம்.

கேரட்

கேரட்

மூன்று கேரட் நன்றாக வேக வைத்து, அதை பிசைந்து 15 நிமிடம் வரை சிரங்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் துடைக்க வேண்டும்.

இயற்கை சோப்பு

இயற்கை சோப்பு

அதிக கெமிக்கல் பொருட்கள் இருக்கும் சோப்பை தவிர்ப்பது நல்லது.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

குளித்த பிறகு சிரங்கு புண் இருக்கும் இடத்தில் ஆலிவ் எண்ணெயை தடவ குணமடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Best And Easy Home Remedies For Eczema | சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா? இதை படிங்க!!!

Like so many skin problems, eczema can itch worse than a bad conscience. Here are some home remedies to get some relief from the rash.
Desktop Bottom Promotion