For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

By Super
|

உடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்களை போல, அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். உடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் இவ்வகை சீர்கேடுகள் ஏற்படலாம். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்வு முறையில் நம்மை பல நோய்கள் தாக்கி கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள சில முக்கிய அங்கங்கள் இவ்வகை நோய்களால் பாதிக்கப்பட்டால், அது மரணம் வரை கூட முடியும். அப்படிப்பட்ட அங்கங்களில் முக்கியமான ஒன்று தான் ஈரல் என்று அழைக்கப்படும் கல்லீரல்.

கல்லீரல் பாதிப்பு என்பது பரம்பரையாக வரலாம். அதாவது குடும்பத்தில் யாருக்காவது இருந்திருந்தால் உங்களுக்கும் வரலாம். இரசாயனங்கள் அல்லது தொற்றுகள் மூலமாகவும் வரலாம். கல்லீரலில் இழைநார் வளர்ச்சி போன்ற நீண்ட கால வியாதிகளாலும் இது ஏற்படலாம். இந்த காரணங்களால் வாழ்க்கை முழுவதும் கல்லீரல் பாதிக்கப்படலாம்.

பொதுவாக கல்லீரல் உடலில் உணவு செரிமானம் ஆகவும், ஊட்டச்சத்துக்களை உள்வாங்கவும், நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் பெரிதும் உதவி புரிகிறது. வயிற்றில் இருக்கும் இந்த அங்கம் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியாது.

இப்போது உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய, இதோ உங்களுக்கான 10 அறிகுறிகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீங்கிய வயிறு

வீங்கிய வயிறு

கல்லீரலில் இழைநார் வளர்ச்சி என்பது ஒரு ஆபத்தான கல்லீரல் நோயாகும். இந்த நோயால் வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்துக் கொள்ளும். இதனை மகோதரம் என்றும் அழைப்பார்கள். இரத்தத்திலும் நீர்ச்சத்திலும் வெண்புரதம் மற்றும் புரத அளவு அப்படியே தேங்கிவிடுவதால் இந்த நோய் உண்டாகும். இந்த நோய் உள்ளவர்களை பார்க்கும் போது, கர்ப்பமான பெண் போல் காட்சி அளிப்பார்கள்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறினால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அது கல்லீரலை வெகுவாக பாதிக்கும். சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதால், இரத்தத்தில் பிலிரூபின் உண்டாகும். அதனால் உடலில் இருக்கும் கழிவு வெளியேற முடியாது.

வயிற்று வலி

வயிற்று வலி

வயிற்று வலி, அதுவும் மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி எடுக்கும் போது அல்லது விலா எலும்பு கூட்டின் அருகே அடி வயிற்று பகுதியின் வலது புறத்தில் வலி எடுத்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

சிறுநீரில் மாற்றங்கள்

சிறுநீரில் மாற்றங்கள்

உடலின் இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகத்தின் நிறம் கடும் மஞ்சளாக மாறும். அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட கல்லீரலால், சிறுநீரகம் மூலம் கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை.

சரும எரிச்சல்

சரும எரிச்சல்

சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டே இருந்து, நாளடைவில் சொறி, சிரங்கு என மாறிவிட்டால் அதுவும் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான ஒரு அறிகுறியே.மேலும் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை உடலால் கொடுக்க முடியாததால், அந்த இடங்களில் அரிப்பு ஏற்பட்டு திட்டுக்கள் உண்டாகும்.

மலம் கழிப்பதில் மாற்றங்கள்

மலம் கழிப்பதில் மாற்றங்கள்

கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் மலங்கழித்தலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மலச்சிக்கல், மலங்கழித்தலின் போது எரிச்சல், மலத்தின் நிறம் மங்குதல் அல்லது மலத்தின் நிறம் கருமையாகுதல் அல்லது மலத்தில் இரத்த திட்டுக்கள் வருதல் போன்றவைகளை சொல்லலாம்.

குமட்டல்

குமட்டல்

செரிமான பிரச்சனை மற்றும் அமில எதிர்பாயல் போன்ற பிரச்சனைகள் கல்லீரல் பாதிக்கப்படுவதனால் ஏற்படும். அதனால் குமட்டலும், வாந்தியும் கூட ஏற்படும்.

பசியின்மை

பசியின்மை

கல்லீரல் பாதிப்பை கவனிக்காமல் விட்டால் காலப்போக்கில் அது பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் அளவுக்கு அதிகமாக உடல் எடை குறையும். ஊட்டச்சத்து குறைவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் உடனே ஊட்டச்சத்துக்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

நீர் தேங்குதல்

நீர் தேங்குதல்

கால், கணுக்கால், பாதம் போன்ற இடங்களில் நீர் தேங்கினால், அதனை நீர்க்கட்டு என்று கூறுவார்கள். இதற்கு காரணம் கல்லீரல் பாதிப்பு தான். அதுமட்டுமின்றி வீங்கிய பகுதிகளை அழுத்தினால், அழுத்திய தடம் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

சோர்வு

சோர்வு

கடுமையான சோர்வு, தசை மற்றும் மன தளர்ச்சி, ஞாபக மறதி, குழப்பங்கள் மற்றும் கோமா போன்ற அறிகுறிகள் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Telling Symptoms of Liver Damage

Liver damage can include anything from heredity (i.e., inherited from a family member), toxicity (i.e., due to chemicals or viruses) to a long-term disease (i.e., Cirrhosis) that can affect your liver for the rest of your life.
Desktop Bottom Promotion