For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யோகாசனங்கள் மூலம் குணப்படுத்தக்கூடிய 10 நோய்கள்!!!

By Super
|

யோகாசனங்கள், இந்தியாவில் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. யோகாசனங்களை, உலக மக்களுக்கு இந்தியாவின் கொடையாகக் கருதலாம். ஏனெனில் யோகாசனங்களை முறையாகச் செய்து வந்தால், உடல் தசைகளும், எலும்புகளும் இலகுவாகி, நுரையீரல் அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வதோடு, உடலில் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, உடலும் உள்ளமும் ஒரு அற்புதமான பரிபூரண நிலையை அடையும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது வெளிநாட்டினரும் யோகாசனங்களை ஆர்வமுடன் கற்றுப் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளனர். அதனால் வெளிநாட்டில் யோகாசனங்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு நிறைய வரவேற்பு உள்ளது. யோகாசனங்கள் ஏறத்தாழ அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. அத்தகைய யோகாசனப் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், எவ்வகையான நோயும் அணுகாது. அதிலும் குறிப்பிட்ட சில நோய்களை, குறிப்பிட்ட சில ஆசனங்கள் குணப்படுத்துகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

யோகாசனங்களைத் தவறாது செய்து வந்தால், ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் போன்ற வியாதிகளும் குணமாகும். நீரிழிவு நோயை எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய நீரிழிவு நோயை யோகாசனம் கூட குணப்படுத்தாது என்றாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கச் செய்யும் வல்லமை உள்ளது. இங்கு யோகாசனங்களின் மூலம் தீர்க்கப்படும் 10 கொடிய நோய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, தினமும் யோகாசனம் செய்து, அந்த நோய்களில் இருந்து விலகி இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Diseases That Can Be Treated With Yoga

Yoga can cure almost any disease. In fact, your body can be free of any disease if you want to practice yoga asanas regularly. And if you have developed certain diseases, natural cures for diseases that may be present in yoga.
Desktop Bottom Promotion