For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் தொடும் 10 அழுக்கான பொருள்கள்: ஒரு ஷாக் ரிப்போர்ட்!!

By Super
|

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் மற்றும் மக்களிடையே ஆரோக்கியத்தின் மீது விழிப்புணர்வும் பெருகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மக்களிடையே, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலை அதிகரித்து உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

கையடக்கமான தூய்மை செய்யும் பொருட்களை பலரும் உடன் கொண்டு செல்கின்றனர். பாதுகாப்பாக இருப்பதற்காக, பதப்படுத்துப்பட்ட உணவுகள், அழுக்கான பகுதிகள் ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கிறோம். இந்த அளவு சுத்தத்தைப் பற்றிய அறிவுடன் கவனமாக இருந்தாலும், அன்றாடம் தொடும் பொருட்களில் அழுக்குகளும், அதன் மூலம் கிருமிகளும் கையில் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

இவற்றைப் பட்டியலிட்டால், அது மிக நீளமாக நீளும். எனினும் நாம் தினமும் தொடும் பொருட்களில் பத்து அழுக்கான மற்றும் கிருமிகள் நிறைந்த பொருள்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாய்லெட் இருக்கை

டாய்லெட் இருக்கை

ஒரு நாளின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிப்போம். டாய்லெட் இருக்கையின் பால் போன்ற வெண்மையான வழவழப்பான மேற்பரப்பினையும், விளிம்புகளையும் அதிகமாக சுத்தம் செய்தாலும், டாய்லெட் இருக்கையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 295 வகையான பாக்டீரியாக்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்ச்

ஸ்விட்ச்

பொது இடங்களிலும், வீடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்விட்ச்சுகள். புத்தம் புதியதாக, வழவழப்பாக, தூய்மையாக காணப்பட்டாலும், நமது சருமத்துடன் அன்றாடம் தொடர்பிலுள்ள மிக அசுத்தமான பொருள்களில் ஒன்று ஸ்விட்ச். எனவே ஸ்விட்ச்சுகள் மூலம் நாம் கிருமிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கருதினால், நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், எந்தவொரு அறையிலிருந்தும் முதல் ஆளாக வெளியேறி விட வேண்டும். ஏனென்றால், கடைசியாக வெளியில் வரும் நபர் தான் அறையினுள் உள்ள அனைத்து விளக்குகளையும் மின்விசிறிகளையும் ஆஃப் செய்ய வேண்டியிருக்கும்.

பணம்!! பணம்!!

பணம்!! பணம்!!

பச்சை, நீலம், சிவப்பு என்று பல வண்ணங்களுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள், பளபளக்கும் நாணயங்களை விரும்பாதார் யார்???? கைக்குக் கைமாறும் பணம். காசாளரிடமிருந்து, கடைக்காரருக்கும், பிள்ளையார் கோவில் உண்டியலுக்கும், பிச்சைக்காரருக்கும், பணக்காரரிடமிருந்து பரம ஏழைக்கும் பயணிக்கும் பணம். வைத்திருக்கும் பத்து ரூபாய் நோட்டு எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. நியூயார்க்கில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஒரு பணத்தாளில் 1,35,000 பாக்டீரியாக்கள் இருந்தனவாம்.

கணிப்பொறி விசைப்பலகை (Computer keyboard)

கணிப்பொறி விசைப்பலகை (Computer keyboard)

அமெரிக்காவில் கணிப்பொறியைப் பயன்படுத்தாதவர் யாருமில்லை. நாமும் கணிப்பொறியைப் பயன்படுத்துகிறோம்.ஆனால், பாக்டீரியாக்களும் கிருமிகளும் நிறைந்திருக்கும் விசைப்பலகையை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். சில ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன என்று தெரியுமா? மிக அசுத்தமான விசைப்பலகையில் டாய்லெட்டில் இருப்பதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளனவாம். எனவே அடுத்தமுறை கணிப்பொறி முன்பு அமரும் போது விசைப்பலகை சுத்தமாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

சமையலறை தொட்டி

சமையலறை தொட்டி

பெரும்பாலான பெண்கள் சமையலறை கழுவும் தொட்டியில் தான் செலவிடுகிறார்கள் என்பது நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அந்தத் தொட்டி எப்போதும் ஈரமாகவே இருக்கும். அதில் நமது தட்டுக்கள், பாத்திரங்கள், காய்கறிகள், மாமிசங்கள் என அனைத்தையும் கழுவுவதால், அது கிருமிகளின் பிறப்பிடமாகிறது. எனவே, கிருமிகளின்றி சுத்தமாக இருக்க சமையலறை கழுவும் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சமையலறை ஸ்பாஞ்ச் (Kitchen sponge)

சமையலறை ஸ்பாஞ்ச் (Kitchen sponge)

சமையலறையையும், சாப்பிடும் மேஜையையும் சுத்தம் செய்யும் மிக அசுத்தமான பணியை செய்கிறது அந்தப் பஞ்சு. அது எப்போதுமே ஈரமாக இருக்கும். அதன் நுண்ணிய இடைவெளிகளில் நீர் தேங்கி கிருமிகள் வளர்வதற்கு வாய்ப்பான இடமாக உள்ளது. அதிலிருந்து கிருமிகளை நீக்குவது மிகக் கடினம். கிருமிகள் துள்ளிக் குதித்து நீந்துவதைக் கற்பனை செய்து பாருங்கள். வேண்டுமெனில் அப்பஞ்சினை மைக்ரோவேவ் ஓவனில் 60 வினாடிகள் சூடு செய்து கிருமிகளை நீக்கலாம்!!!.

செல்போன்

செல்போன்

எவ்வளவு பெருமிதத்துடன் நாம் செல்போனில் பேசுகிறோம்? எவ்வளவு ஆசையுடன் அதை சுமக்கிறோம்? காதுக்கும் கன்னத்துக்கும் இடையே பொருத்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசுகிறோம்? இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக செல்போன்கள் ஒரு பெரும் அழிவு சக்தியாக உருவெடுத்து வருகின்றன எனக் கண்டறியப்படுள்ளது. ஏனெனில், செல்போன்களில் உற்பத்தியாகும் வெப்பத்தினால், செல்போன்களில் உருவாகும் ஆயிரக்கணக்கான கிருமிகளை நமது உடலிலுள்ள ஈரம் ஈர்க்கிறதாம்.

குளியல் தொட்டி

குளியல் தொட்டி

டாய்லெட்டுகளையும், குளியலறை தரைகளையும் தவறாமல் சுத்தம் செய்யும் நாம் குளியல் தொட்டிகளை முறையாகத் தேய்த்து சுத்தம் செய்வதில்லை. நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நோய்வாய்ப்படும் வரையில் அல்லது நீர்த்தாரைத் தொற்று நோயால் பாதிக்கப்படும் வரை குளியல் தொட்டிகளில் உள்ள கிருமிகளை நாம் கண்டுகொள்வதில்லை.

தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி (TV remote Control)

தொலைக்கட்டுப்பாட்டுக் கருவி (TV remote Control)

நாம் டிவி ரிமோட்டை சமைக்கும் போது பயன்படுத்துகிறோம். நமது பிள்ளைகள் விளையாட்டுத் திடலில் விளையாடிவிட்டு வந்து எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். கணவன்மார்கள் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் டிவி ரிமோட்டுடன் தான் பொழுதைப் போக்குகிறார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வெவ்வேறு வகையான கிருமிகளின் தங்குமிடம் டிவி ரிமோட் ஆகும். சுத்தம் செய்ய வேண்டிய பொருள்களின் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

ஷாப்பிங் செய்யும் தள்ளுவண்டி

ஷாப்பிங் செய்யும் தள்ளுவண்டி

சிறப்பங்காடிகளில் பொருட்களைப் போட்டு தள்ளிக் கொண்டு போகும் தள்ளுவண்டிகளை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தமது வியர்வை படிந்த விரல்களால் அவற்றின் கைப்பிடிகளைத் தொட்டு பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் நிரப்பிவிடுகிறார்கள். எனவே அடுத்தமுறை ஷாப்பிங் செல்லும்பொழுது கைப்பிடிகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Dirty Things You Touch Daily

With the advancement of medical science and health awareness, people have become hygiene conscious. Growing levels of pollution too has played a big part in this. Many people carry hand sanitizers these days. We stay away from processed food, dirty areas to stay safe.
Desktop Bottom Promotion